மாணவ / மாணவியரின் தந்தை/தாய் விபத்தில் இறந்து விட்டாலோ/ நிரந்தர முடக்கம் அடைந்தாலோ நிதியுதவி ரூ.75,000 பெறுவதற்குரிய விண்ணப்பத்தோடு இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் விவரம் - ThulirKalvi

Latest

Search Here!

Tuesday, March 23, 2021

மாணவ / மாணவியரின் தந்தை/தாய் விபத்தில் இறந்து விட்டாலோ/ நிரந்தர முடக்கம் அடைந்தாலோ நிதியுதவி ரூ.75,000 பெறுவதற்குரிய விண்ணப்பத்தோடு இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் விவரம்

1-12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ / மாணவியரின் தந்தை/தாய் விபத்தில் இறந்து விட்டாலோ/ நிரந்தர முடக்கம் அடைந்தாலோ நிதியுதவி ரூ.75,000  பெறுவதற்குரிய விண்ணப்பத்தோடு இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்



மாவட்டக் கல்வி அலுவலகம், 
பாலக்கோடு, 
நகஎண்.653/15/2020 நாள்- .07.2020 

பொருள்: 

வருவாய் ஈட்டும் தாய் தந்தை விபத்தில் இறந்தாலோ (அ) நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற மாணவ, மாணவியருக்கு தலா ரூ.50,000/- அல்லது ரூ.75,000/- கல்வி உதவித் தொகை வழங்க கோரும் விண்ணப்பங்களில் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் - சார்பு. 

1. அரசாணை எண்.39 பள்ளிக்கல்வி (12) துறை நாள்-30.03.2005, 
2 அரசாணை எண்.127 பள்ளிக்கல்வி (இ2) துறை நாள்-01.07.2005, 
3. அரசாணைநிலை) எண்.195 பள்ளிக்கல்வி (பக5(2) நாள்- 27.11.2014, 

பார்வை:- * 

பார்வை(1), (2) மற்றும் (3) - ற் காண் அரசாணைகளின் படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியரின் தாய் தந்தை விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற மாணவ / மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/ அல்லது ரூ.75,000/- கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கல்வி உதவித் தொகை கோரும் கருத்துருக்கள் பெறப்படும் போது, சில குறைகள் இருப்பது அறிய வருகிறது. 

மேலும் குறைகளை களைவதில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்த்திடும் பொருட்டும், நிர்வாக தாமதங்களை தவிர்த்திடும் பொருட்டும், பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கருத்துருக்களில் கீழ்க்காணும் ஆவணங்கள் மற்றும் சான்றுகள் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்து, பரிந்துரைக்குமாறு இதன் மூலம் தெரிவிக்கலாகிறது. 

கருத்துருக்களில் இணைக்கப்பட வேண்டியவை - 

1. தலைமையாசிரியர் / வட்டாரக் கல்வி அலுவலர் முகப்பு கடிதம். 
2. சார்ந்த மாணவரின் பெற்றோர் கடிதம். 
3. வருவாய் ஈட்டும் தாய் - தந்தை விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை கோரும் விண்ணப்பம். 
4. தலைமையாசிரியர் பரிந்துரைக் கடிதம். 
5. படிப்புச் சான்று. 
6, முதல் தகவல் அறிக்கை நகல்
7. பிண ஆராய்வுச் சான்று, 
8. இறப்புச் சான்றிதழ். 
9. வருமானச் சான்றிதழ். 
10, வாரிசு சான்றிதழ். 
11. மாணவர்களின் பெற்றோர் விபத்தில் இறந்துள்ளார் என்பதற்கான வட்டாட்சியர் சான்று. இணைப்பில் உள்ளது) 
12. விதவை சான்று. (தந்தை இறந்த மாணவர்களுக்கு மாணவரின் தாயார் விதவை என சான்று.) 
13. குடும்பம் வறிய நிலையில் உள்ளது என வட்டாட்சியர் சான்று. 
14. ஆதார் அட்டை நகல், (பெற்றோர் மற்றும் மாணவர்) 
15. வங்கி கணக்கு புத்தக நகல். (மாணவர் - பெற்றோர் இணைப்பு கணக்கு) 
16. குடும்ப அட்டை நகல், 
17. படிவம் A, B மற்றும் C. ( இணைப்பில் உள்ளது.) 

மாவட்டக் கல்வி அலுவலர், 
பாலக்கோடு. 

பெறுதல் - 

அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள்.