பள்ளிக்கல்வி இணைஇயக்குநரின்(தொழிற்கல்வி) செயல்முறைகள்,
சென்னை-6.
நக.எண்.31944/கே/இ2/2020,நாள்: 14.03.2021.
பொருள் :
பள்ளிக்கல்வி
சிறப்பு ஊக்கத்தொகைவழங்கும்திட்டம்
அரசுமற்றும் அரசு உதவிபெறம்பள்ளிகள்
10,11 மற்றும் 12
ஆம்வகுப்புமாணவமாணவியர் - இடைநிற்றலைமுற்றிலும்தவிர்த்தல் -
2011-2012 ஆம்கல்வியாண்டு முதல் 2020-2021 ஆம் ஆண்டுவரை -
பள்ளிப்படிப்பை தொடராத
முதல்
12
ஆம்வகுப்புமாணவர் எண்ணிக்கைவிவரம் - கோருதல் - தொடர்பாக.
பார்வை
1. அரசாணை(நிலை) எண்.141 பள்ளிக்கல்வி (இ1)துறை நாள்.
13.09.2011
2. சென்னை-6,பள்ளிக்கல்வி இயக்குநரின்கடிதம்
ந.க.எண்.31944/கே/இ2/2020,நாள்.16.10.2020,
04.12.2020,17.02.2021.
3. சென்னை-18,மாநிலக்கணக்காயரின்(தணிக்கை-1)கடிதம்
D.O.No.Repl/60-3/SPL/2020-21/DPA(AR2019-20)/81,
நாள்.25.01.2021.
4. சென்னை-5, மாநில கொள்கை வளர்ச்சிக்குழு உறுப்பினர்
செயலரின் கடிதம் எண்.2469/EE/SDPC/2020,நாள்.24.02.2021.
:
பார்வை (1)ல்கண்டுள்ள அரசாணை (நிலை) எண்.141 பள்ளிக்கல்வித் (இ1)துறை,
நாள்.13.09.2011-ன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10,11 மற்றும் 12-ஆம்
வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரின் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு,
சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 2011-2012 ஆம் கல்வியாண்டு முதல் அரசால்
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடர்ந்து செயல்முறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மேற்காண் பொருள் தொடர்பாக பார்வை(3)ல் கண்டுள்ள சென்னை-18, மாநிலக்
கணக்காயரின்(தணிக்கை -I) கடிதத்தில் மேற்காண் திட்டத்தின்படி 2011-2012ஆம்
கல்வியாண்டு முதல் 2020-2021ஆம் கல்வியாண்டு வரை 6 முதல் 12ஆம் வகுப்புகளில்
பள்ளிப்படிப்பை தொடராத இடையில் நின்ற மாணவ, மாணவியர் எண்ணிக்கை
விவரங்களை வருடவாரியாக வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
எனவே இக்கடித்துடன் இணைத்தனுப்பப்படும் படிவத்தில் இடையில் நின்ற
(Dropout)மாணவ, மாணவியரின் எண்ணிக்கை விவரங்களை பூர்த்தி செய்து 19.03.2021-
க்குள் இவ்வியக்கக 'கே'பிரிவு (Email) முகவரிக்கு(ksec.tndse@nic.in) அனுப்பி விட்டு அதன் நகலினை இவ்வியக்கத்திற்கு அனுப்புமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
இணை இயக்குநர்
Download Timer
No comments:
Post a Comment