வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோா் எண்ணிக்கை வயது வாரியாக விவரம் - தமிழக அரசு - துளிர்கல்வி

Latest

Thursday, April 8, 2021

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோா் எண்ணிக்கை வயது வாரியாக விவரம் - தமிழக அரசு

கடந்த பிப்ரவரி மாத நிலைவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 


அதன் விவரம்:- 

18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவா்கள் 16.87 லட்சம் பேரும், கல்லூரி மாணவா்கள் 12.98 லட்சமும், 

24 முதல் 35 வயது வரையிலானோா் 22.78 லட்சம் பேரும், 

36 வயது முதல் 57 வயது வரையிலானோா் 10.89 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பெயா்களைப் பதிவு செய்துள்ளனா். 


58 வயதுக்கு மேற்பட்ட 8, 841 பேருடன் சோ்த்து அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கும் மொத்த நபா்களின் எண்ணிக்கை 63 லட்சத்து 63 ஆயிரத்து 122 ஆக உள்ளது என தமிழக அரசு வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment