கொரோனா பரவல் எதிரொலி: ஓய்வூதிய சேவையை பெற ஆன்லைன் சேவைகளை பயன்படுத்த வேண்டுகோள் - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, April 14, 2021

கொரோனா பரவல் எதிரொலி: ஓய்வூதிய சேவையை பெற ஆன்லைன் சேவைகளை பயன்படுத்த வேண்டுகோள்

சமீப காலங்களில் கொரோனா வேகமாக பரவுவதால், வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் உறுப்பினர்கள் தங்களுடைய ஓய்வூதியம் பெறுவது தொடர்பான கோரிக்கைகளை இணையதள சேவை மூலமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


சென்னை வடக்கு மாவட்ட அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வரும் ஓய்வூதிய உறுப்பினர்கள் மற்றும் வேலை கொடுப்பவர்கள் ro.chennai1@epfindia.gov.in என்ற இ-மெயில் முகவரியிலும், சென்னை வடக்கு மாவட்ட அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் ro.chennai2@epfindia.gov.in என்ற இ-மெயில் முகவரியிலும் வேண்டுகோள்களை அனுப்பலாம். 044-28139200, 201, 202 மற்றும் 044-28139310 என்ற தொலைபேசி எண்ணில் வார நாட்களில் குறைகளை தெரிவிக்கலாம். 
இதுதவிர சென்னை வடக்கு மாவட்ட அலுவலகத்துக்கு உட்பட்டவர்கள் 9345750916 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், சென்னை தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்டவர்கள் 6380366729 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் வேண்டுகோளை அனுப்பலாம். கொரோனா பரவல் காரணமாக தற்போது நிலவும் சூழலில், ஓய்வூதிய உறுப்பினர்கள் ஆன்லைன் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மேற்கண்ட தகவல் சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டல ஓய்வூதிய கமிஷனர்-1 ரிதுராஜ் மேதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.