எச்சரிக்கை!! வெந்நீரை தொடர்ந்து குடிப்பதால் வரும் பக்கவிளைவுகள் - ThulirKalvi

Latest

Search Here!

Thursday, April 8, 2021

எச்சரிக்கை!! வெந்நீரை தொடர்ந்து குடிப்பதால் வரும் பக்கவிளைவுகள்

நாம் எடுத்துகொள்ளும் எல்லா உணவிலும் எவ்வளவவு நன்மை உள்ளதோ அதே சமயம் தீமையும் இருக்கும். 


சில நேரங்களில் நாம் நன்மை என்று நாம் அடிக்கடி செய்யும் பல விஷயங்கள் தீமையாக முடிந்து விடுகிறது. அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற வகையில் அமிர்தமான தண்ணீரும் ஒரு கட்டத்தில் நஞ்சாக மாறிவிடுகிறது

எப்படி தெரியுமா? 

வெந்நீரை குடிப்பதை நாம் அநேகர் ஒரு பழக்கமாகவே வைத்துள்ளோம். அது ஒரு பக்கம் நன்மை கொடுத்தாலும் தொடர்ந்து வெந்நீர் பருகுவதால் பல தீய விளைவுகளும் ஏற்படும். 


ஆம், வெந்நீரை தினமும் குடிப்பதால், அதனுடையை வெப்பம் தாங்காமல் உதடுகளை பாதிப்படையும். மேலும், மிகவும் சூடான நீர் குடிக்கும் போது உணவு குழாய் மற்றும் செரிமான பாதைகள் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. 

அதிக அளவு வெந்நீர் குடிப்பது, ரத்தத்தில் உள்ள எலெக்ட்ரோலைட்டை நீர்த்து போக செய்து, செல்களில் வீக்கம் தலைவலி, மூளை அழுத்தம் போன்ற பிரச்சனையை உண்டாக்கும். மற்றும் ஒரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், தினமும் நாம் அதிகமாக வெந்நீர் பருகும் போது நமது மூளையில் உள்ள செல்கள் வீக்கமடைந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். 


மேலும், நாம் இரவு நேரத்தில் உறங்க செல்வதற்கு முன்பு அதிகமாக வெந்நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும், ஏனென்றால் அது தூக்கமின்மையை உண்டாக்கும். இந்நிலையில், வெந்நீர் சிறுநீரகத்தின் வேலையை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் சிறுநீரகத்தை சேதமடைய செய்து, பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.