வீடு, வீடாக ஆய்வு செய்ய ஆள் நியமிக்குது மாநகராட்சி - ThulirKalvi

Latest

Search Here!

Sunday, May 30, 2021

வீடு, வீடாக ஆய்வு செய்ய ஆள் நியமிக்குது மாநகராட்சி

வீடு, வீடாக ஆய்வு செய்ய ஆள் நியமிக்குது மாநகராட்சி 


கொரோனா தொற்று பாதிப்பில் முதலிடத்தில் இருப்பதால், பொது சுகாதாரத்துறை பார்வை, கோவை மாவட்டம் பக்கம் திரும்பியுள்ளது. தொற்று பரவலை தடுக்கும் பணிக்கான கண்கா ணிப்பு அதிகாரியாக, நியமிக்கப்பட்டுள்ள வணிக வரித்துறை ஆணையர் சித்திக், கடந்த இரு நாட்க ளாக, பணிகளை ஆய்வு செய்து வருகிறார். பாதிப்பு அதிகமாகி, சிகிச்சை அளிக்க போரா டிக் கொண்டிருக்காமல், ஆரம்ப நிலையிலேயே தொற்றை அழிக்க அறிவுறுத்திய அவர், 100 வீட்டுக்கு ஒரு களப்பணியாளர் நியமிக்க உத்தர விட்டுள்ளார். 

MOST READ 

மண்டலத்துக்கு 1,000 வீதம், 5,000 களப்பணியாளர்கள் நியமிப்பதற்கான வேலைகளில், படுமும்முரமாக களமிறங்கியுள் ளது மாநகராட்சி. ஆர்வமுள்ள தன்னார்வலர்கள், கல்லுாரிகளில் படிக்கும் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாண வர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் வரலாம். நாளொன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூ.338 வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 

MOST READ 

ஆர்வமுள்ளவர்கள், அந்தந்த மாநகராட்சி மண்டல அலுவலகங்களில், மண்டல சுகாதார அலுவலர்களை சந்தித்து, பணியில் இணைத் துக் கொள்ளலாம். மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'ஒரு களப்பணியாளர், 100 வீடு களில் தினமும் ஆய்வு செய்ய வேண்டும். தினமும் சென்று நண்பர்களாக பழக வேண்டும். தொலை பேசி எண்ணை கொடுத்து, உதவி தேவைப்பட் டால் எந்நேரம் வேண்டுமானாலும் அழைக்கலாம் எனக்கூறி வர வேண்டும்' என்றனர்.