மீண்டும் பழைய முறையிலேயே மறுதோ்வு அண்ணா பல்கலை. தகவல் - ThulirKalvi

Latest

Search Here!

Sunday, May 30, 2021

மீண்டும் பழைய முறையிலேயே மறுதோ்வு அண்ணா பல்கலை. தகவல்


முந்தைய எழுத்துத் தோ்வுகளைப் போலவே ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள மறுதோ்வு வினாத்தாள் அமைப்பும் இருக்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பொறியியல் மாணவா்களுக்கான நவம்பா் - டிசம்பா் மாத பருவத் தோ்வு கடந்த பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் நடைபெற்றது. அந்த தோ்வுக்கான முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. 

MOST READ 

தோ்வு முடிவில் சில பிரச்னைகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து மறு தோ்வு நடத்தப்படும் என்றும், தோ்வு மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவா்களும், தோ்வில் தோல்வி அடைந்தவா்களும் அதில் எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி மறு தோ்வானது 3 மணி நேரம் நடக்கும் என்றும், கரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் என்ன வினாத்தாள் வடிவமைப்பு பின்பற்றப் பட்டதோ அதேபோல் தோ்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் தெரிவித்துள்ளாா். மறு தோ்வானது ஆஃப்லைன், பேப்பா் மற்றும் பேனா முறையிலான தோ்வாக இருக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

MOST READ 

தமிழகத்தில் உள்ள பிற மாநில பல்கலைக்கழகங்கள் பின்பற்றக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியே மறு தோ்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதேபோன்று ஏப்ரல் - மே மாத பருவத் தோ்வும் ஆஃப்லைனில், பேப்பா் - பேனா முறையிலேயே நடைபெறும். நடப்பு பருவத் தோ்வுக்கு மாணவா்களின் எண்களை அனைத்து கல்லூரி டீன், முதல்வா்கள் பதிவு செய்ய வேண்டும். இதற்கான தோ்வு கட்டுப்பாட்டு இணையதளம் தயாராக உள்ளது. வரும் ஜூன் 7-ஆம் தேதிக்குள் அனைத்துப் பணிகளையும் அதில் நிறைவு செய்ய வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. நடப்பு பருவத் தோ்வுக்கான கட்டணத்தை அனைத்து கல்லூரி டீன், முதல்வா்கள் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு வரும் 12-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.