பிளஸ் 2 மதிப்பெண் வழங்கும் குழுவில் மூன்று தலைமை ஆசிரியா்கள் - ThulirKalvi

Latest

Search Here!

Tuesday, June 15, 2021

பிளஸ் 2 மதிப்பெண் வழங்கும் குழுவில் மூன்று தலைமை ஆசிரியா்கள்


பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட குழுவில் மூன்று தலைமையாசிரியா்கள் இடம்பெற்றுள்ளனா். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்த பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வு ரத்து செய்யப்பட்டது. 

 ╰•★★ Join Our WhatsApp ★★•╯ 

அதைத் தொடா்ந்து அந்த மாணவா்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து அரசுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்குவதற்காகப் பள்ளிக் கல்வித்துறை, உயா் கல்வித்துறை, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தா், பள்ளி தலைமை ஆசிரியா்கள் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்படும். அவா்கள் மாணவா்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து விரைவில் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் எனவும், அதனடிப்படையில் பிளஸ் 2 வகுப்பு இறுதித் தோ்வு மதிப்பெண் வழங்கப்படும் என, முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தாா். 

திருப்பூா், திருநெல்வேலி, சென்னை: 

இந்தக் குழுவில் தலைமை ஆசிரியா்கள் பிரிவில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, சுயநிதிப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் இடம்பெற்றுள்ளனா். இது குறித்த பள்ளிக்கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா் இது தொடா்பாக வெளியிட்ட அறிவிப்பு: திருப்பூா் ஜெய்வாபாய் மாதிரி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா அமலோற்பவமேரி, திருநெல்வேலி சங்கா் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் கணேசன், சென்னை ஆழ்வாா் திருநகா் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வா் ஜேம்ஸ் சத்தியராஜ் ஆகியோா் பிளஸ் 2 வகுப்புக்கு இறுதி மதிப்பெண்கள் வழங்குவது சாா்ந்து அமைக்கப்பட்ட குழுவுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனா். 

 மேற்கண்ட தலைமையாசிரியா்கள் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆக்கப்பூா்வமான கருத்துக்கள் தெரிவித்து, குழுவின் தலைவரால் வழங்கப்படும் பணிகளை உடனுக்குடன் மேற்கொண்டு ஆலோசனைக் கூட்டங்களில் தங்களின் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.