பாடநூல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம் - துளிர்கல்வி

Latest

Thursday, July 8, 2021

பாடநூல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம்

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல் வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள் ளார். இதற்கான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ் டாலின், புதன்கிழமை வெளியிட்டார். இதுகு றித்து, அவர் வெளியிட்ட அறிவிப்பு: 

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணி கள் கழகமானது தனது பணிகளை செம்மையா கத் தொடர்ந்து மேற்கொள்ள, அந்த நிறுவனத் தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்படுகிறார் என்று தனது அறிவிப்பில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பள்ளிக் கூட ஆசிரியர்: திண்டுக்கல்லைச் சேர்ந்த ஐ.லியோனி, அங்குள்ள தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராகபணியாற்றினார்.9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர் களுக்கு அறிவியல் பாடங்களை போதித்து வந்தார். அறிவார்ந்த வர்கள் மட்டுமின்றி பாமர மக்களும் பட்டிமன்றத்தை ரசிக்கும் அளவுக்கு அதன் வடிவத்தை மாற்றிக் காட்டினார்.


No comments:

Post a Comment