தினம் ஒரு தகவல் காதுகளே கண்கள் - துளிர்கல்வி

Latest

Friday, July 9, 2021

தினம் ஒரு தகவல் காதுகளே கண்கள்

அறிவியல் ஆயிரம் காதுகளே கண்கள் நாம் இருட்டில் விழாமல் சில அடி கூட நடக்க முடியாது. ஆனால் வவ்வால்கள் இருட்டிலும் குறுக்கும், நெடுக்குமாக எதிலும் மோதாமல் பறக்கும். காரணம் இவை காதுகளை பார்வைக்கு பயன்படுத்துகிறது. பாழடைந்த கட்டடங்கள், மரங்களில் வவ்வால்கள் வாழ்கின்றன.





இவை பறந்தபடி “கேளா" என்ற ஒலியை எழுப்பும். இது எதிரே உள்ள கம்பம், பூச்சி, மரக்கிளை என எதுவாக இருந்தாலும் அதன் மீது பட்டு எதிரொலித்து திரும்புகின்றன. இதற்கு ஆகிற நேரத்தை வைத்து, அப்பொருள் எவ்வளவு துாரத்தில், திசையில், அளவில் இருக்கிறது என்பதை கண்டறிந்து அதனை அடைகிறது.

No comments:

Post a Comment