உயர்கல்வி வரை உதவித்தொகை வழங்கும்
தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான 2-ஆவது கட்டத் தேர்வு நாடு
முழுவதும் அக்.24-ஆம் தேதி நடைபெறும் என்று என்சிஇஆர்டி
தெரிவித்துள்ளது.
அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான தேசிய திறனாய்வுத்
தேர்வு (என்டிஎஸ்இ) நடத்தப்படுகிறது. மாநில, தேசியளவில் என
2 கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்
களுக்கு உயர்கல்வி (பிஎச்டி) முடிக்கும் வரை உதவித்தொகை வழங்
கப்படும்.
குறிப்பாகத் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு பிளஸ் 1, பிளஸ் 2
வகுப்பு படிக்கும்போது மாதந்தோறும் ரூ.1,250 தொகையும், உயர்
கல்வியில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கு மாதம்
ரூ.2,000 தொகையும் வழங்கப்படும். யுஜிசி விதிமுறைகளின்படி
பிஎச்டி மாணவர்களுக்குத் தேவையான கல்வி உதவித்தொகை
வழங்கப்படும். தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
(என்சிஇஆர்டி) சார்பில் இந்தத் தேர்வு (என்டிஎஸ்இ) நடத்தப்படு
கிறது.
இந்தநிலையில் இரண்டாவது கட்ட தேசிய திறனாய்வுத் தேர்வு,
அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்
ளது. முன்னதாக ஜூன் 13-ஆம் தேதி இந்தத் தேர்வு நடைபெறு
வதாக இருந்த நிலையில், கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் அக்.24-ஆம் தேதி நாடு முழுவதும் தேர்வு நடை
பெறுகிறது. இதில் இரண்டு தேர்வுகள் தலா 100 மதிப்பெண்க
ளுக்கு இரண்டு மணிநேரம் நடைபெறும்.
முதல்கட்டத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் மட்டுமே இந்
தத் தேர்வை எழுத முடியும். அக்டோபர் 8-ஆம் தேதியன்று தேர்
வுக்கான அனுமதிச் சீட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம் என்று என்சிஇஆர்டி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் அங்கீகார
No comments:
Post a Comment