போட்டி தேர்வுக்கு தயாராகிறீர்களா ? - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, September 27, 2021

போட்டி தேர்வுக்கு தயாராகிறீர்களா ?

யூடியூப் என்பது ஒரு கடல். அதில் எண்ணற்ற தகவல்கள் புதைந்து கிடக்கின்றன. ஒருவர் எந்த ஒரு தலைப்பில் தேடினாலும் அது தொடர்பான வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன. 

அந்த அளவிற்கு ஒருவர் வீட்டில் அமர்ந்துகொண்டே உலக விஷயங்களை எளிதாக கற்றுக்கொள்ள முடியும். கல்வி தொடர்பான சேனல்களும், வீடியோக்களும் நிறைய உள்ளன. இவை மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற பெரியளவில் உதவி செய்கின்றன. 

அந்தப் பட்டியலில் முன்னணி இடத்தில் உள்ளது ‘பிரிப் ஐ.ஏ.எஸ்’ (Prepp IAS) என்ற யூடியூப் சேனல். டெல்லி குர்கான் பகுதியை சேர்ந்த சில இளைஞர்களால், கடந்த டிசம்பர் மாதம் உருவாக்கப்பட்ட இந்த யூடியூப் சேனலில், போட்டி தேர்வுகள் சம்பந்தமான தகவல்கள் நிரம்பி உள்ளன. 

குறிப்பாக யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிபெற உதவும் தகவல்களை அடிப்படையாக கொண்டே இதில் வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன. ஆரம்பத்தில் போட்டி தேர்விற்கு தயாராகிய மாணவர்கள், பாடத்திட்டம் பற்றி பேசினார்கள். பிறகு, யு.பி.எஸ்.சி. தேர்வில் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டு வீடியோக்களை உருவாக்கி, மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை எளிதாக விளக்கி வருகின்றனர். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. யூடியூப் சேனல் தொடங்கி இன்னும் ஓராண்டு கூட நிறைவு பெறாத நிலையில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்கள் இந்த சேனலை பின் தொடர்கிறார்கள். 

அந்த வீடியோக்களைப் பார்த்து ஏராளமான மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். சமீபத்தில் பிரத்யேக இணையதளம் ஒன்றை உருவாக்கி, அதன்மூலம் இலவச பயிற்சியும் வழங்க தொடங்கியிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment