கடந்த 2019-2020 நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கான (பி.எப்.) வட்டி விகிதம் 8.65 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளில் இதுதான் மிகக்குறைவு ஆகும்.
கடந்த 2020-2021 நிதியாண்டுக்கு இதே வட்டி விகிதத்தை தொடருவது என்று கடந்த மார்ச் மாதம் நடந்த வைப்புநிதி அமைப்பின் உயரிய அமைப்பான மத்திய அறங்காவலர்கள் வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில், 8.5 சதவீத வட்டி விகிதத்துக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதனால், வைப்புநிதி அமைப்பில் உள்ள 5 கோடிக்கு மேற்பட்ட சந்தாதாரர்களின் கணக்குகளில் இந்த வட்டி வரவு வைக்கப்படும். தீபாவளியையொட்டி, அவர்களுக்கு இது நல்ல ெசய்தியாக அமையும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment