குறைந்த ஊதியம் பெறுவோர் கோவில்களில் விபரம் சேகரிப்பு
கோவில்களில் 1,000 ரூபாய்க்கு கீழ் ஊதியம் பெறும் பணியாளர்களின் விபரங்களை அனுப்புமாறு, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், கோவில் நிர்வாகத்திடம் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக, இணை, உதவி கமிஷனர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது, ஒரு கால பூஜை நடைபெறும் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகை, 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இத்திட்டம் முதல்வரால் துவக்கப்பட்டு, அதன் பயனடையும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் பெயர் விபரம், வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பயனாளர்களுக்கு மாதம்தோறும், 5ம் தேதி தலைமை அலுவலகத்தில்இருந்து தலா, 1,000 ரூபாய் வங்கி கணக்கில்ஆர்.டி.ஜி.எஸ்., வாயிலாக நேரடியாக செலுத்தப்படும்.
கோவிலில் பணிபுரியும் பணியாளர்கள் சிலர், 1000 ரூபாய்க்கு கீழ் மாத ஊதியம், தொகுப்பூதியம் பெறுவதாக அறியப்படுகிறது. இதுபோன்ற பணியாளர்கள் விபரங்களை உனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment