இல்லம் தேடி கல்வித்திட்டம்: ஒரு லட்சம் தன்னார்வலர் பதிவு: கல்வி அமைச்சர் தகவல்
தமிழகத்தில் துவங்கப்படவுள்ள இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணியாற்ற இதுவரை ஒரு லட்சம்பேர் பதிவு செய்துள்ளனர்” என கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
நவ., 1 முதல் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான தன்னார்வலர்கள் தேர்வு, அவர்கள் பின்னணி குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்படும். இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.
உரிய எச்சரிக்கையுடன் தேர்வு நடக்கும்.
நவ.,1 முதல் திறக்கப்படும் பள்ளிகளில் கொரோனா தடுப்பு விதிகள் உரிய முறையில் பின்பற்றப்படும். அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. துாய்மை பணிகள் தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.'எமிஸ்' இணையதள தகவல் திருடப்படுவதான சர்ச்சை குறித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு விரைவில் அறிவிக்கப்படும். காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். பின் 'சர்ப்பிளஸ்' ஆசிரியர் பணிநிரவல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,என்றார்.
Nice plan
ReplyDelete