தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் 2021-22ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலைப் பட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலைப் பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு - ThulirKalvi

Latest

Search Here!

Thursday, December 30, 2021

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் 2021-22ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலைப் பட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலைப் பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் 2021-22ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலைப் பட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலைப் பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு 

2021-2022 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பெறும் முதுநிலைப் பட்டப்படிப்புகள் (MVSC, MTech, MSc , PhD) மற்றும் முதுநிலைப் பட்டயப்படிப்புகளில் (PG Diploma) சேர்க்கைக்கு, இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் (Online applications) 30.12.2021 காலை 10.00 மணி முதல் 13.01.2022 மாலை 05.00 மணி வரை வரவேற்கப்படுகின்றன. 


பணிபுரியும் (மத்திய, மாநில அரசு/பல்கலைக்கழகம்/பொதுத்துறை நிறுவனங்கள்) விண்ணப்பதாரர்கள் | மட்டும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் (Download) செய்து, பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ் நகல்களுடன் உரிய வழியாக "தலைவர், சேர்க்கைக் குழு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை - 600 051” அவர்களுக்கு 13.01.2022 மாலை 05.00 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும். இணையதள விண்ணப்பங்கள், தகவல் தொகுப்பேடு, சேர்க்கைத் தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை மற்றும் இதர விவரங்களை www.tanuvas.ac.in அல்லது www.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளங்களில் 30.12.2021, காலை 10.00 மணி முதல் காணலாம். இடம் : சென்னை-600 051 தலைவர், சேர்க்கைக் குழு (முதுநிலை பட்டப்படிப்பு) நாள் : 30.12.2021 செமதொஇ/1208/வரைபடம்/2021 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்