கால்சியம் குறைபாட்டை கண்டறிவது எப்படி? | How to Diagnose Calcium Deficiency? - ThulirKalvi

Latest

Search Here!

Monday, September 26, 2022

கால்சியம் குறைபாட்டை கண்டறிவது எப்படி? | How to Diagnose Calcium Deficiency?

கால்சியம் குறைபாட்டை கண்டறிவது எப்படி? | How to Diagnose Calcium Deficiency?
பாதாம், பீன்ஸ் மற்றும் பருப்பு, அத்திப்பழம், ஆரஞ்சு, கிவி, பெர்ரி, பப்பாளி, அன்னாசி, கொய்யா, லிச்சி, ஸ்ட்ராபெர்ரி, முந்திரி போன்ற பழ வகைகளில் கால்சியம் நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளில் கால்சியம் சத்து எலும்புகளின் உறுதிக்கு முக்கியமானது. 

முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு அரிப்பு, நகம், பற்கள் என பாதிக்கப்படுவதற்கு கால்சியம் சத்து குறைபாடே காரணம். குறிப்பாக பெண்கள்தான் கால்சியம் சத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நடுத்தர வயது ஆண்கள் நாள்தோறும் 1000 மி.கி கால்சியம் எடுத்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு 1,300 மில்லி கிராம், 4 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு 1,300 மில்லி கிராம் கால்சியம் தேவைப்படுகிறது.

 கால்சியம் குறைப்பாட்டை ஹைபோகால்சீமியா என்று குறிப்பிடுவர். கால்சியம் குறைபாடு உடையவர்களுக்கு குழப்பம் மற்றும் ஞாபகமறதி, தசைப்பிடிப்பு, கை, பாதம் மற்றும் முகத்தில் உணர்ச்சியின்மை, மன அழுத்தம், பலவீனமான நகங்கள், பற்கூச்சம்,

 எலும்புகளில் வலி மற்றும் தேய்மானம் ஆகிய பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். பொதுவாக, கால்சியம் சத்து என்றாலே பால் பொருட்களில் இருந்து மட்டுமே கிடைக்கும் என நினைப்பவர்கள் உண்டு. பால் பொருட்கள் அல்லாத காய்கறி, பழங்களிலும் கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது.

 குறிப்பாக, பாதாம், பீன்ஸ் மற்றும் பருப்பு, அத்திப்பழம், ஆரஞ்சு, கிவி, பெர்ரி, பப்பாளி, அன்னாசி, கொய்யா, லிச்சி, ஸ்ட்ராபெர்ரி, முந்திரி போன்ற பழ வகைகளில் கால்சியம் நிறைந்துள்ளது. பழங்களில் உள்ள கால்சியத்தின் அளவு... பீன்ஸ் 100 கிராமில் 140 மில்லி கிராம் கால்சியம் இருக்கும். 

பாதாம் 100 கிராம் - 260 மி.கி கால்சியம், 8 அத்தி பழங்கள் - 241 மி.கி, 100 கிராம் டோஃபு - 680 மி.கி, 30 கிராம் எள் - 300 மி.கி கால்சியம் உள்ளது. 45 கிராம் சியா விதைகள் - 300 மி.கி, ஒரு கிண்ணம் அளவுள்ள அடர் பச்சை காய்கறிகளில் - 300 மில்லி கிராம், ராகி மாவு 100 கிராம் - 300 மில்லி கிராம் கால்சியம் உள்ளது.

 உலர்ந்த முருங்கை தூளில் 300 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. இதேபோல், ப்ரோக்கோலி, இனிப்பு உருளைக்கிழங்கு, சூரியகாந்தி விதைகள், வெண்டைக்காய், ஆரஞ்சு பழங்களிலும் அதிகளவிலான கால்சியம் சத்துகள் நிறைந்திருக்கின்றன. கால்சியம் குறைபாட்டை கண்டுபிடிப்பது எப்படி... கால்சியம் குறைப்பாட்டை ஆரம்பக் காலங்களிலேயே கண்டுபிடிக்க முடியும்.

 உடலில் தோன்றும் சில அறிகுறிகள் கால்சியம் குறைப்பாட்டை உணர்த்தும். கால் வலி, தசைப்பிடிப்பு ஆகியவை தொடர்ந்து இருந்தால் கால்சியம் குறைபாடு காரணமாக இருக்கலாம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த வலிகளுக்கும் கால்சியம் குறைப்பாட்டுக்கும் தொடர்பு உள்ளது என்பது கூட பலருக்கும் தெரிவதில்லை.

 இதேபோல், அஜீரணக்கோளாறு, வாயுத்தொல்லை ஆகிய பிரச்சனைகள் இருப்பவர்களுக்கும் கால்சியம் குறைபாடு இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் முன்கூட்டியே உணர்ந்து, அதற்கேற்ற உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது ஆரம்ப நிலையிலேயே கால்சியம் குறைபாடு காரணமாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.


How to Diagnose Calcium Deficiency?

Almonds, beans and lentils, figs, oranges, kiwi, berries, papaya, pineapple, guava, lychee, strawberries, cashews are rich in calcium. Among the nutrients required by the body, calcium is important for the strength of bones. Back pain, joint pain, bone erosion, nail and teeth are affected due to lack of calcium.

 Women are especially vulnerable to calcium deficiency. Middle-aged men should consume 1000 mg of calcium daily. Girls need 1,300 milligrams of calcium, and 4 to 18-year-olds need 1,300 milligrams. Calcium deficiency is called hypocalcemia. Calcium deficiency can cause confusion and memory loss, muscle cramps, numbness in hands, feet and face, depression, weak nails, toothache, bone pain and wear and tear. Generally, there are people who think that calcium is a nutrient that can only be obtained from dairy products.

 Non-dairy vegetables and fruits are also rich in calcium. In particular, almonds, beans and lentils, figs, oranges, kiwi, berries, papaya, pineapple, guava, lychee, strawberries, cashews are rich in calcium. Calcium content in fruits... 100 grams of beans contain 140 mg of calcium. 100 g of almonds - 260 mg of calcium, 8 figs - 241 mg, 100 g of tofu - 680 mg, 30 g of sesame seeds - 300 mg of calcium. 45 grams of chia seeds - 300 mg, a bowl of dark green vegetables - 300 milligrams, 100 grams of ragi flour - 300 milligrams of calcium. Dried moringa powder contains 300 mg of calcium. Similarly, broccoli, sweet potatoes, sunflower seeds, amaranth and oranges are also rich in calcium. How to detect calcium deficiency...

 Calcium deficiency can be detected in the early stages. Some symptoms that appear in the body can indicate calcium deficiency. If leg pain and muscle cramps persist, it should be recognized that calcium deficiency may be the cause. Many people don't even know that these pains are related to calcium deficiency. Similarly, people with indigestion and flatulence are also more likely to be calcium deficient. They can avoid problems caused by calcium deficiency at an early stage when they are aware of it early and take appropriate diet.