தலை முடியில் வெடிப்பு ஏற்படுகிறதா? முடியை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் | Is it breaking out on the scalp? What to do to protect hair - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, September 28, 2022

தலை முடியில் வெடிப்பு ஏற்படுகிறதா? முடியை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் | Is it breaking out on the scalp? What to do to protect hair

தலை முடியில் வெடிப்பு ஏற்படுகிறதா? முடியை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் | Is it breaking out on the scalp? What to do to protect hair 

 பெண்களுக்கு தனி அழகை சேர்ப்பது அவர்களின் தலைமுடிதான். தினந்தோறும் தலை முடிக்கு எண்ணெய் தடவி, நன்கு வாரி, ஜடை பின்னி, பூச்சூடுவது அன்றைய பெண்களின் வழக்கமாக இருந்தது. 

இன்றைய காலத்தில் நாகரிகம் என கருதி பெரும்பாலான பெண்கள் தங்களின் தலை முடிக்கு எண்ணெய் தடவிக் கொள்ளும் பழக்கத்தை அடியோடு விட்டு விட்டனர். இதனால் பல பெண்களுக்கு தலை முடி நுனி வெடிப்பு பிரச்சனை ஏற்படுகின்றது. 

இந்த தலை முடி நுனி வெடிப்பு ஏற்பட்டால் அந்த இடத்தில் மீண்டும் முடி வளர்வது கடினம். எனவே பெண்கள் குறைந்தபட்சம் தங்களின் தலை முடி நுனியில் வெடிப்புகள் ஏற்படாமல் காத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் பெண்களின் தலைமுடியில் நுனி வெடிப்பு பிரச்சனைகள் ஏற்படாமல் காக்கும் சில எளிய அழகு குறிப்புகள் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்


 ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தை தோல் நீக்கி, நன்கு மசித்துக் அந்தப் பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். 

பிறகு இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தயிரை அந்த பாத்திரத்தில் கலந்து கொள்ள வேண்டும். சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டரை அதனுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 

பின்பு அந்த கலவையை எடுத்து பெண்கள் தங்களின் தலைமுடியின் அடி வேர்க்கால்கள் முதல் முடியின் நுனி வரை நன்கு தடவி, ஒரு மணி நேரம் வரை அப்படியே விட்டு விட வேண்டும். 

பிறகு அதிக ரசாயன கலப்பில்லாத ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் தலைமுடியின் நுனியில் இருக்கும் வெடிப்புகள் நீங்கும். தலை முடி நுனிகளில் வெடிப்பு ஏற்படுவதற்கு மற்றொரு முக்கிய காரணமாக இருப்பது ஹேர் ட்ரையர்களை அதிகம் பயன்படுவதும் தான்.

 ஹேர் ட்ரையர்களை அதிக சூட்டில் வைத்து பயன்படுத்தும் போது முடியின் முனைகளில் வெடிப்புகள் ஏற்படுகின்றன. எனவே தலைக்கு குளித்து முடி துவட்டும் போது முடிந்தவரையில் பருத்தி டவலைக் கொண்டு முடியை துவட்டுவது சிறந்தது. ஹேர் ட்ரையரை கொண்டு முடியை காய வைக்க நினைப்பவர்கள் மிக குறைந்த அளவு சூட்டில் ஹேர் பெயரை பயன்படுத்தி தலை முடியை உலர வைக்க வேண்டும். 

 பப்பாளிப் பழம் பல விதமான ஊட்டச் சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. நன்றாக பழுத்த பப்பாளி பழத்தை தோல் நீக்கி, மிக சிறிய துண்டுகளாக நறுக்கி, நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு கெட்டி பசுந்தயிர் சேர்த்து, நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு இந்த கலவையை தலைமுடியில் நன்றாக தடவிக் கொண்டு, சுமார் 30 நிமிடங்கள் வரை அப்படியே இருக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரைக் கொண்டு தலைமுடியை அலச வேண்டும். 

இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வருவதால் தலைமுடிகளின் நுனிகளில் வெடிப்புகள் ஏற்படாமல் தடுக்கும். 

 தலை முடிக்கு சிறந்த ஊட்டச்சத்துக்களை அளிக்கும் தன்மை பாதாம் எண்ணெய்க்கு உண்டு. தலைமுடி வெடிப்புகள் ஏற்படாமல் தடுக்க விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து, ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு இந்த எண்ணெயை தலைமுடியின் வேர்க்கால்கள் முதல் நுனி வரை நன்கு தடவி கொண்டு, சுமார் 30 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.

 அதன் பிறகு குளிர்ந்த தண்ணீரில், அதிக ரசாயன கலப்பில்லாத ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசி கொள்ள வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை இப்படி செய்வது வந்தால் தலைமுடி நுனிகளில் வெடிப்புகள் ஏற்படாது. தலை முடி நுனி வெடிப்புகள் நீங்க ஒரு சிறிய கிண்ணத்தில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் எடுத்துக் கொண்டு, அதில் சிறிதளவு பசும்பாலை ஊற்றி, நன்கு கலந்து, அந்த கலவையை தலை முடியில் நன்றாக தடவிக்கொள்ள வேண்டும். சுமார் 30 நிமிடங்கள் இந்த கலவை தலை முடியில் நன்கு ஊறிய, பிறகு குளிர்ந்த நீரை பயன்படுத்தி தலை முடியை அலச வேண்டும்.
 

 அவகாடோ என்கிற ஒரு வகை பழம் தற்போது அனைத்து பெரிய அங்காடிகளிலும் கிடைக்கின்றது. ஒரு கிண்ணத்தில் ஒரு அவகாடோ பழத்தையும், ஒரு வாழைப்பழத்தை சேர்த்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். 

பின்பு இதனுடன் 5 ஸ்பூன் அளவிற்கு ரோஸ் வாட்டரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு இந்த கலவையை தலை முடியின் அடிப்பகுதி முதல் முடி நுனி வரை நன்றாக தடவி கொண்டு, ஒரு மணி நேரம் வரை காத்திருந்து, பிறகு அதிக ரசாயனம் இல்லாத ஷாம்புவை பயன்படுத்தி தலைக்கு குளித்து வந்தால் தலை முடியின் நுனியில் ஏற்படும் வெடிப்புகள் ஏற்படாமல் காக்கும். 

 Is it breaking out on the scalp? What to do to protect hair Adding unique beauty to women is their hair. It was the custom of the women of those days to apply oil to their hair, comb it well, braid it and cover it. Nowadays most of the women have given up the habit of oiling their hair completely as it is considered a civilization. Due to this, many women have the problem of hair loss. It is difficult to re-grow hair in this area if the scalp splits. 

 So women should at least protect their scalp from getting split ends. That way, here we can know some simple beauty tips to prevent split ends in women's hair. Take a wide pan. Peel a ripe banana, mash it well and put it in the bowl. Then two table spoons of curd should be mixed in that vessel. Add some lemon juice and rose water to it and mix well. Then women should take the mixture and apply it well from the root to the tip of their hair and leave it for an hour. 

Then wash your head using a chemical free shampoo. Doing this once a week will get rid of split ends. Another major cause of split ends is excessive use of hair dryers. Using hair dryers on high heat can cause split ends. So it is better to use a cotton towel to wash your hair while taking a shower. Those who want to dry their hair with a hair dryer should use a hair dryer on very low heat. Papaya fruit contains a variety of nutrients. Peel the ripe papaya fruit, cut it into very small pieces and mash it well. Then add 2 tablespoons of curd to it and mix well. 

Then apply this mixture well on your hair and leave it for about 30 minutes. Then rinse your hair with cold water. Doing this once a week will prevent split ends. Almond oil has excellent nutritional properties for the scalp. To prevent hair breakage, take equal amounts of castor oil, almond oil and olive oil and mix well. Then apply this oil well from the roots to the ends of the hair and let it soak for about 30 minutes. After that, wash your hair in cold water using a mild shampoo. 


 Doing this once a week will prevent split ends. To get rid of split ends of the scalp, take only egg white in a small bowl, pour a little cow's milk in it, mix well and apply the mixture well on the scalp. Let this mixture soak into the hair for about 30 minutes, then rinse the hair with cold water. Avocado is a fruit that is available in all major grocery stores these days. 

 Add an avocado and a banana in a bowl and mash well. Then add 5 spoons of rose water and mix well. Then apply this mixture well from the base of the hair to the ends of the hair, wait for an hour and then wash the head using a shampoo that does not contain too many chemicals to prevent split ends. Do this once a week.