PREPARED BY THULIRKALVI TEAM
ஆறாம் வகுப்பு
இரண்டாம் பருவம்
தமிழ்
நானிலம் படைத்தவன்
பக்கம் 52
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
போர்க்களத்தில் வெளிப்படும் குணம் ……………..
அ) மகிழ்ச்சி
ஆ) துன்பம்
இ) வீரம்
ஈ) அழுகை
விடை: இ) வீரம்
2.
கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) கல் + அடுத்து
ஆ) கல் + எடுத்து
இ) கல் + லடுத்து
ஈ) கல் + லெடுத்து
விடை: ஆ) கல் + எடுத்து
3.
நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………….
அ) நா + னிலம்
ஆ) நான்கு + நிலம்
இ) நா + நிலம்
ஈ) நான் + நிலம்
விடை: ஆ) நான்கு + நிலம்
4.
நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……….
அ) நாடென்ற
ஆ) நாடன்ற
இ) நாடி என்ற
ஈ) நாடு அன்ற
விடை: அ) நாடென்ற
5.
கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………..
அ) கலம்ஏ றி
ஆ) கலமறி
இ) கலன் ஏறி
ஈ) கலமேறி
விடை: ஈ) கலமேறி
சொற்றொடரில் அமைத்து எழுதுக
அ) மாநிலம் – என் நண்பன் ஓட்டப்பந்தயத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளான்.
ஆ) கடல் – கடல் பரந்து விரிந்துள்ளதால் அதற்குப் பரவை என்று பெயர்.
இ) பண்டங்கள் – தின்பண்டங்களை வீணாக்கக்கூடாது.
நயம் அறிக
1.
நானிலம் படைத்தவன் பாடலில் இடம் பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
எதுகை :
விடை: கல்லெடுத்து – மல்லெடுத்த
ஊராக்கி – பேராக்கி
மாநிலத்தில் – நானிலத்தை
ஆழ – சூழும்
முக்குளித்தான் – எக்களிப்பு
பண்டங்கள் – கண்டங்கள்
அஞ்சானம் – அஞ்சுவதை
2.
நானிலம் படைத்தவன் பாடலில் இடம் பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
விடை: மோனை :
அஞ்சாமை – அஞ்சுவதை
குறுவினா
1.
நான்கு நிலங்கள் என்பன யாவை?
விடை: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகியவை நான்கு நிலங்கள் ஆகும்.
2.
தமிழன் எதற்கு அஞ்சினான்?
விடை: தமிழன், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சினான்.
3.
தமிழன் எதற்காகக் கண்டங்களைச் சுற்றி வந்தான்?
விடை: ஏலம், மிளகு ஆகியவற்றைப் பெருமகிழ்ச்சியோடு கப்பல்களில் ஏற்றிக் கண்டங்கள் தோறும் அனுப்பி வணிகம் செய்வதற்காகக் கண்டங்களைச் சுற்றி வந்தான்.
சிறுவினா
1.
தமிழன் தான் வாழ்ந்த நாட்டினை எவ்வாறு உருவாக்கினான்?
விடை: தமிழன் தான் வாழ்ந்த நாட்டினை உருவாக்கின விதம் :
(i) தமிழன் கற்களும் முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பைத் திருத்திப் பண்படுத்தினான்.
(ii) தனது உடல் வலிமையால் வளத்தைப் பெருக்கினான்.
(iii) ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையைப் பெற்றான்.
(iv) முல்லை , மருதம், குறிஞ்சி, நெய்தல் என நிலத்தை நால்வகைப்படுத்தினான். இதனால் நாகரிக மனிதன் ஆனான்.
2.
தமிழனின் செயல்களாக முடியரசன் கூறுவன யாவை?
விடை: தமிழனின் செயல்களாக முடியரசன் கூறுவன :
(i) பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான். அச்சம் தரும் போர்களிலும் எளிதாக வெற்றி கண்டான்.
(ii) பனிசூழ்ந்த இமயமலையில் தன் வெற்றிக்கொடியை நாட்டினான். ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தான்.
(iii) ஏலம், மிளகு ஆகியவற்றைப் பெருமகிழ்ச்சியோடு கப்பல்களில் ஏற்றிக் கண்டங்கள் தோறும் அனுப்பி வணிகம் செய்தான். கப்பலில் உலகை வலம் வந்தான்.
(iv) தமிழன் எதற்கும் அஞ்சாதவன். ஆனால், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சுவான்.
சிந்தனை வினா
1.
காடுகளில் வாழ்ந்த மனிதன் எவ்வாறு படிப்படியாக நாகரிகம் அடைந்திருப்பான் எனச் சிந்தித்து எழுதுக.
விடை: நாகரிக வளர்ச்சி :
மனிதன் காடுகளில் தோன்றினான், கூட்டம் கூட்டமாக வாழ்ந்தான். அவர்களுடைய பசியைப் போக்க காட்டு விலங்குகளை வேட்டையாடினான். அவற்றைச் சுட்டுத் தின்பதற்காக நெருப்பைக் கண்டறிந்தான். சிக்கிமுக்கிக் கல்லை அதற்குப் பயன்படுத்தினான். தேவதாரு மற்றும் மூங்கில் மரத்தைக் கொண்டு நெருப்பு மூட்டக் கற்றுக் கொண்டு உணவுப் பொருட்களைச் சுட்டுத் தின்றான்.
பிறகு கல், வெண்கலம், இரும்பு என வகை வகையான கருவிகளைக் கண்டறிந்தான். விவசாயத்திற்கு அக்கருவிகளைப் பயன்படுத்தினான்.
இரை கிடைக்கும் இடத்தைத் தேடி இடம் விட்டு இடம் பெயர்ந்தான். ஓரிடத்தில் வீடு கட்டி வாழ்ந்து விவசாயத்தின் மூலம் உணவு பெறுவது தொடங்கி ஆடு, மாடுகளைப் பழக்கி உழவுத் தொழில் செய்தான். மட்பாண்டங்கள் செய்யக் கற்றுக் கொண்டான். படகுகள் செய்து ஆறு, கடல் ஆகிய நீர்நிலைகளில் பயணித்தான். பருத்தி, ஆட்டு மயிர்கள் கொண்டு ஆடை உருவாக்கினான். இவ்வாறு அவனுக்குத் தேவையான அனைத்தையும் அவனே உருவாக்கினான். சிறு சிறு குடியிருப்புகள் உருவாயின.
இது ஒரு கிராமம் தோன்றுவதற்குத் தொடக்கமாக அமைந்தது. இச்சிறு கிராமங்கள் படிப்படியாக நகரங்களாக வளர்ச்சி பெற்றன. நகரங்கள் வந்தபிறகு நாகரிகம் வந்தது. தங்கள் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ள மொழி பயன்பட்டது.
இவ்வாறு வளர்ந்த மனிதன் அறிவியல் வளர்ச்சியின் மூலம் பல வகையில் முன்னேறினான்.
புதிய புதிய இயந்திரங்கள் மக்களின் வேலைச் சுமையைக் குறைத்து நேரத்தை மிச்சப்படுத்தியது. மனிதன் ஓய்வு பெறக் கற்றுக் கொண்டான். இவ்வாறு மனிதன் படிப்படியாக வளர்ந்தான்.
கடலோடு விளையாடு
பக்கம் 55
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கதிர்ச் + சுடர்
ஆ) கதிரின் + சுடர்
இ) கதிரவன் + சுடர்
ஈ) கதிர் + சுடர்
விடை: ஈ) கதிர் + சுடர்
2.
மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மூச்சு + அடக்கி
ஆ) மூச் + அடக்கி
இ) மூச் + சடக்கி
ஈ) மூச்சை + அடக்கி
விடை: அ) மூச்சு + அடக்கி
3.
பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) பெருமைவனம்
ஆ) பெருவானம்
இ) பெருமானம்
ஈ) பேர்வானம்
விடை: ஆ) பெருவானம்
4.
அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) அடிக்குமலை
ஆ) அடிக்கும் அலை
இ) அடிக்கிலை
ஈ) அடியலை
விடை: அ) அடிக்குமலை
பாடல் வரிகளுக்கு ஏற்பப் பொருத்துக
அ) விடிவெள்ளி – 1. பஞ்சுமெத்தை
ஆ) மணல் – 2. ஊஞ்சல்
இ) புயல் – 3. போர்வை
ஈ) பனிமூட்டம் – 4. விளக்கு
விடை: அ) 4
ஆ) 1
இ) 2
ஈ) 3
குறுவினா
1.
அலையையும் மேகத்தையும் மீனவர்கள் என்னவாகக் கருதுகின்றனர்?
விடை: மீனவர்கள் அலையைத் தோழனாகவும் மேகத்தைக் குடையாகவும் கருதுகின்றனர்.
2.
கடல் பாட்டில் கண்ணாடியாகவும் தலைவனாகவும் குறிப்பிடப்படுவன யாவை?
விடை: கடல் பாட்டில் முழுநிலவு கண்ணாடியாகவும், பெருவானம் தலைவனாகவும் குறிப்பிடப்படுகின்றன.
சிறுவினா
1.
‘கடல்’ பாட்டின் பொருளை உங்கள் சொந்த நடையில் எழுதுக.
விடை: (i) மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்பவர்கள் மீனவர்கள். அவர்களுக்கு விண்மீன்களே விளக்குகள், விரிந்த கடலே பள்ளிக்கூடம்.
(ii) கடல் அலையே தோழன், மேகமே குடை, வெண்மையான மணலே படுத்துறங்கும் பஞ்சு மெத்தை. விண்ணின் இடி அவர்கள் காணும் கூத்து, சீறிவரும் புயல் விளையாடும் ஊஞ்சல்.
(iii) பனிமூட்டம்தான் உடலைச் சுற்றும் போர்வை. அனல் வீசும் கதிரவனின் ஒளிச்சுடர்தான் மேற்கூரை.
(iv) கட்டுமரம்தான் அவர்கள் வாழும் வீடு. மின்னல் கோடுகளே அடிப்படைப் பாடம்: வலைவீசிப் பிடிக்கும் மீன்களே அவர்களது செல்வம். முழு நிலவுதான் கண்ணாடி.
(v) மூச்சடக்கிச் செய்யும் நீச்சலே அவர்கள் செய்யும் தவம். இவற்றிற்கு இடையே மீனவர்கள் மன உறுதியோடு தொழில் செய்கின்றனர்.
சிந்தனை வினா
1.
நீங்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் தொழில்களில் ஒன்றைப் பற்றி ஐந்து வரிகள் எழுதுக.
விடை: நான்வசிக்கும் பகுதியில் நடைபெறும் தொழில் பாய் பின்னும் தொழில்(வந்தவாசி):
தமிழகத்தின் பாரம்பரிய கோரைப் பாய் தயாரிக்கும் தொழில் வந்தவாசியில் நடைபெறுகிறது. இதற்குத் தேவையான மூலப்பொருள் கோரை. இது ஒருவகைப் புல்லாகும். இது காவிரி ஓடும் கரையோரப் பகுதிகளில் விளைகின்றது.
தமிழகத்தில் மட்டும் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. முன்பெல்லாம் கைத்தறி மூலம் நெய்யப்பட்ட பாய்கள், தற்போது இயந்திரங்கள் மூலம் நெய்யப்படுகிறது.
கோரைப் பிரிப்பது, அதற்கு சாயம் பூசுவது வெயிலில் உலர்த்துவது, நெய்வது, பாய் நெய்த பிறகு அதன் ஓரங்களில் துணி வைத்து தைப்பது, பாய்களைச் சுருட்டிக் கட்டாகக் கட்டுவது போன்ற பல்வேறு கட்டங்களில் பணி நிகழ்கிறது.
பத்தமடைப் பாய் எந்த அளவு புகழ்பெற்றதோ அதே போல் எங்கள் பகுதியான வந்தவாசியில் தயாரிக்கும் பாய்களும் புகழ்பெற்றது. பாயில் பல வகைகள் உள்ளன. அவை கோரைப்பாய், பிரம்புப் பாய், ஈச்சம்பாய், மூங்கில் பாய், நாணல் கோரைப் பாய் என்பனவாம்.
பாயைத் தரையில் விரித்து நாம் உறங்குவதே ஒரு சிறந்த யோகாசனம் ஆகும்.
கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு இளம் வயது முகுது வலி வராமலும் தடுக்கும். பாயில் படுத்து உறங்குவது ஞாபக சக்தியையும் மன அமைதியையும் தருகிறது.
2.
நாட்டுப்புற இலக்கியங்களை வாய்மொழி இலக்கியங்கள் என்று கூறக் காரணம் என்ன?
விடை: நாட்டுப்புற இலக்கியங்கள், மக்களின் மனவுணர்வுகளைப் பலவாறான கூறுகளில் மிக எளிமையாகவும் இனிமையாகவும் வெளிப்படுத்துபவைகளாக விளங்கும். இவை பெரும்பான்மையும் கல்வி பயிலா மக்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளன எனலாம்.
இப்பாடல்களுக்கு ஆசிரியர் என்று ஒருவர் இல்லை. இவை ஓலைச்சுவடிகளில் பதிவு பெறுவதற்கு முன்பு வாய்மொழியாக ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் பதிவு செய்யப்பட்டன.
இந்த இலக்கியங்கள் தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாக அல்லது செவி வழியாக பகிரப்பட்டு வந்தவை ஆகும்.
ஏட்டில் எழுதப்படாமல் வழிவழியாக தாய் பாட அவளைத்தொடர்ந்து மகள் எனப் பல தலைமுறையாகப் பாடப்படுகிறது. நாட்டுப்புறங்களில் .9 பாடப்பட்டு வளர்ந்தவை. எழுதப்படாமல் வாய்மொழியாக வளர்ந்தமையால் இது வாய்மொழி இலக்கியம் எனப் பெயர் பெற்றது.
இதன் வேறு பெயர்கள் – பாமரர் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், ஏட்டில் எழுதாக் கவிதை, காற்றிலே மிதந்த கவிதை, வாய்மொழிப் பாடல்கள், கிராமியப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்.
வகைகள் – புராணக் கதைகள், தாலாட்டுப் பாடல்கள், தொழில் பாடல்கள், ஏற்றப்பாட்டு, விதைப்புப் பாட்டு, நடவுப் பாட்டு, அறுவடைப் பாட்டு, நெல் குத்தும் பாட்டு, சுண்ணம் இடிக்கும் பாட்டு தெம்மாங்குப் பாடல்கள்.
வளரும் வணிகம்
பக்கம் 59
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர்……………
அ) நுகர்வோர்
ஆ) தொழிலாளி
இ) முதலீட்டாளர்
ஈ) நெசவாளி
விடை: அ) நுகர்வோர்
2.
வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
விடை: இ) வணிகச்சாத்து
3.
பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) பண்டமாற்று
ஆ) பண்டம்மாற்று
இ) பண்மாற்று
ஈ) பண்டுமாற்று
விடை: அ) பண்டமாற்ற
S
4.
வண்ணப்படங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) வண்ண ம் + படங்கள்
ஆ) வண்ண ப் + படங்கள்
இ) வண்ண + படங்கள்
ஈ) வண்ணமான + படங்கள்
விடை: அ) வண்ணம்+ படங்கள்
5.
விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) விரி + வடைந்த
ஆ) விரி + அடைந்த
இ) விரிவு + அடைந்த
ஈ) விரிவ் + அடைந்த
விடை: இ) விரிவு + அடைந்த
பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக
அ) வணிகம் – ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும் விற்பதும் வணிகம்.
ஆ) ஏற்றுமதி – பழங்காலத்தில் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டது.
இ) சில்லறை தற்போது சில்லறை தட்டுப்பாடு அதிகமாகி விட்டது.
ஈ) கப்பல் – கப்பல்கள் வந்து நிற்கும் இடம் துறைமுகம்.
குறுவினா
1.
வணிகம் என்றால் என்ன?
விடை: ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும், பிறருக்கு விற்பதும் வணிகம் ஆகும்.
2.
பண்டமாற்று முறைக்கு எடுத்துக்காட்டுத் தருக.
விடை: நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வது பண்டமாற்று வணிகம் எனப்படும்.
3.
சிறுவணிகப் பொருட்கள் யாவை?
விடை: பால், கீரை, காய்கறிகள் போன்றவை சிறுவணிகப் பொருட்கள் ஆகும்.
சிறுவினா
1.
சிறுவணிகம், பெருவணிகம் – வேறுபடுத்துக.
2.
பழந்தமிழர் ஏற்றுமதி, இறக்குமதி செய்த பொருள்கள் எவை?
விடை: பழந்தமிழர் ஏற்றுமதி செய்த பொருள்கள் :
தேக்கு, மயில்தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு.
பழந்தமிழர் இறக்குமதி செய்த பொருள்கள் :
சீனத்திலிருந்து கண்ணாடி, கற்பூரம், பட்டு, அரேபியாவிலிருந்து குதிரைகள்.
சிந்தனை வினா
1.வணிகப் பொருள்கள் தற்காலத்தில் எவ்வாறெல்லாம் மக்களை வந்தடைகின்றன?
விடை:
(i) வணிகப் பொருள்கள் உற்பத்தியாளரிடமிருந்து மொத்த வியாபாரியிடம் செல்கிறது.
(ii) மொத்த வியாபாரியிடமிருந்து சில்லரை வியாபாரியிடம் செல்கிறது.
(iii) சில்லரை வியாபாரியிடமிருந்து நுகர்வோரை(மக்களை) வந்தடைகின்றது.
(iv) இணையத்தின் மூலமாகவும் பொருள்களை மக்கள் பெறுகின்றனர்.
(v) அஞ்சல் வழியிலும் பொருள்களைப் பெறுகின்றனர்.
2.
உங்கள் பகுதியில் நடைபெறும் தொழில்களைப் பட்டியலிடுக.
விடை: (i) பால் வியாபாரம்
(ii) காய்கறி அங்காடி
(iii) செய்தித்தாள் விற்பனையாளர்
(iv) தேநீர் அங்காடி
(v) பல்பொருள் விற்பனையாளர்
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எடுத்து எழுதுக
(மின்னணு வணிகம், காசோலை, இணையத்தள வணிகம், வரவோலை, வங்கி, மின்னணு மயம், பற்று அட்டை, பணத்தாள், கடன் அட்டை)
உழைப்பே மூலதனம்
சிந்தனை வினா
3.
கதையில் இடம் பெறும் கதாபாத்திரங்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?ஏன்?
விடை: கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்களில் என்னைக் கவர்ந்தவர் அமுதா.
காரணம் : ஆடு, மாடுகளை வளர்த்து அதில் வரும் பணத்தைச் சேமித்து வைத்தாள். அவள் வருமானத்திற்காக அதனைச் செய்தாலும் பல உயிர்களைக் காப்பாற்றுகிறாள். இதனால் அவளிடம் உள்ள கருணை, அன்பு, பரிவு போன்ற பண்புகள் வெளிப்படுகின்றன. இக்காரணத்தினால் எனக்கு அமுதா கதாபாத்திரம் கவர்ந்ததாக உள்ளது.
சுருக்கி எழுதுக
1.
உழைப்பே மூலதனம் கதையைச் சுருக்கி எழுதுக.
விடை:
முன்னுரை :
‘பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்’ என்பது ஔவையாரின் அறிவுரை, பணத்தைப் பயன்படுத்தாமல் வைத்திருப்பது மடமை ஆகும். பணத்தைக் கொண்டு ஏதேனும் ஒரு தொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும். பிறருக்கு உதவியாக வாழ வேண்டும்.
அதுவே பணத்தின் பயன். இக்கருத்தை விளக்கும் கதைதான் உழைப்பே மூலதனம்’
அருளப்பர் விடைபெற்றுச் செல்லல் :
பூங்குளம் என்னும் ஊரில் அருளப்பர் என்னும் வணிகர் இருந்தார். ஒருமுறை அவர் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டி இருந்ததால் தமது பிள்ளைகளான வளவன், அமுதா, எழிலன் ஆகியோருக்குத் தனித்தனியாக ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தார்.
அதனைக் கவனமாகப் பாதுகாத்துத் தனக்குத் திருப்பித் தரவேண்டும் என்று கூறிவிட்டு வெளிநாட்டுக்குச் சென்று விட்டார்.
பிள்ளைகளின் ஆலோசனை :
“நமது திறமையை எடைபோடவே தந்தை நமக்குப் பணத்தைக் கொடுத்திருக்கிறார்” என்றான் வளவன்.
“நானும் அப்படித்தான் நினைக்கிறேன்” என்றாள் அமுதா. “நான் அப்படி நினைக்கவில்லை. பணத்தைப் பாதுகாக்கத் தெரிகிறதா என்று பார்க்கவே கொடுத்திருக்கிறார்” என்றான் எழிலன்.
வளவனின் செயல் :
வளவன் உழவுத்தொழிலில் ஆர்வம் உடையவன். தந்தை கொடுத்த பணத்தில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தான். உழுது, பண்படுத்திக் காய்கறித் தோட்டம் அமைத்தான். நாள்தோறும் கவனமுடன் பாதுகாத்தான். தோட்டம் முழுவதும் அவரை, வெண்டை , கத்தரி, பாகற்காய் முதலிய காய்கள் காய்த்துக் குலுங்கின. அவற்றை நகரத்திற்குக் கொண்டு சென்று விற்பனை செய்தான்.
அமுதாவின் செயல் :
அமுதாவிற்கு ஆடு, மாடுகள் வளர்ப்பதில் விருப்பம் அதிகம். தந்தை கொடுத்த பணத்தில் நாட்டுப் பசுக்கள் சிலவற்றை வாங்கினாள். அவற்றை அன்போடு பராமரித்தாள். அவை தந்த பாலை வீடு வீடாகச் சென்று விற்றாள்.
மேலும் தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் விற்றுப் பொருள் ஈட்டினாள்.
எழிலனின் செயல் :
எழிலன் தந்தை கொடுத்த பணத்தைப் பத்திரமாக வைத்திருந்து மீண்டும் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்தான். வீட்டில் இருந்தால் தொலைந்து விடும் என்பதால் பணத்தைப் பெட்டியில் வைத்து மூடி, அதனை வீட்டின் பின்புறம் குழி தோண்டிப் புதைத்து வைத்தான்.
வளவனை விசாரித்த அருளப்பர் :
அருளப்பர் பயணத்தை முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார். பிள்ளைகளிடம் தான் கொடுத்த பணத்தைப் பற்றி விசாரித்தார். வளவன் வேளாண்மைத் தொழில் செய்ததாகவும் அதிலிருந்து நல்ல வருவாய் வந்ததாகவும் கூறினான். இரண்டு மடங்காக பணம் சேர்ந்துள்ளது என்று கூறி பணத்தைத் தந்தையிடம் கொடுத்தான். மகிழ்ந்த தந்தை “உண்மையும் உழைப்பும் உன்னிடம் உள்ளன. இப்பணத்தில் வேளாண்மையைத் தொடர்ந்து செய்” என்றார்.
அமுதாவின் பதில்:
அமுதா, தான் மாடுகளை வாங்கிப் பராமரித்ததாகவும் அதில் பணம் இரண்டு மடங்காகப் பெருகியுள்ளது என்றும் கூறினாள். மிக்க மகிழ்ச்சி. “இந்தப் பணத்தை எனது 6 பரிசாக நீயே வைத்துக் கொள்” என்றார் அருளப்பர்.
எழிலனின் பதில் :
எழிலன் தனக்குக் கொடுத்த பணத்தைப் பெட்டியில் பத்திரமாக வைத்திருப்பதாகக் கூறினான். தந்தை ஏமாற்றம் அடைந்தார். அவனது முதிர்ச்சி இன்மையைக் கண்டு மனம் வருந்தினார்.
அருளப்பரின் அறிவுரை :
“பணம் என்பது பெட்டியில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய பொருளன்று. அதைப் பயனுள்ள முறையில் தொழில் செய்து முன்னேறுவது மனிதனின் கடமை. நீ கடமையைச் செய்யத் தவறிவிட்டாய். பணத்தையும் பயன்படுத்தவில்லை. காலத்தையும் வீணாக்கிவிட்டாய். என்னுடன் இருந்து தொழிலைக் கற்றுக் கொள்” என்றார்.
முடிவுரை :
எழிலன் தன்னுடைய தவற்றை உணர்ந்தான். தந்தையிடம் தொழில் கற்று முன்னேற வேண்டும் என்று முடிவு செய்தான்.
சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்
பக்கம் 66
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. என் வீடு ……………. உள்ள து. (அது/அங்கே )
2. தம்பி …………….. வா. (இவர்/இங்கே )
3. நீர் ………………. தேங்கி இருக்கிறது? (அது/எங்கே )
4. யார் …………….. தெரியுமா? (அவர்/யாது)
5. உன் வீடு. …………. அமைந்துள்ளது? (எங்கே என்ன)
விடை: 1. அங்கே
2. இங்கே
3. எங்கே
4. அவர்
5. எங்கே
குறுவினா
1.
சுட்டு எழுத்துகள் என்றால் என்ன? அவை யாவை?
விடை: ஒன்றைச் சுட்டிக்காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர். அவை அகச்சுட்டு, புறச்சுட்டு, அண்மைச்சுட்டு, சேய்மைச்சுட்டு, சுட்டுத்திரிபு.
2.
அகவினா, புறவினா – வேறுபாடு யாது?
சிந்தனை வினா
1.
அகச்சுட்டு, அகவினா, புறச்சுட்டு, புறவினா என்று பெயரிட்ட காரணத்தை எழுதுக.
விடை:
அகச்சுட்டு : சுட்டெழுத்துகள் சொல்லின் அகத்தே நின்று சுட்டுப்பொருளை உணர்த்தும். சுட்டெழுத்துகளை நீக்கினால் பொருள் தராது.
(எ.கா.) அது, இவன், அவர்.
அகவினா : வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே நின்று வினாப் பொருளை உணர்த்தும். வினா எழுத்துகளை நீக்கினால் பொருள் தராது.
(எ.கா.) எது? எவர்? யார்?
புறச்சுட்டு : சுட்டெழுத்துகள் சொல்லின் புறத்தே நின்று சுட்டுப்பொருளை உணர்த்தும். சுட்டெழுத்துகளை நீக்கினாலும் பொருள் தரும்.
(எ.கா.) அப்பையன், இப்பெட்டி
புறவினா : வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே நின்று வினாப் பொருளை உணர்த்தும். வினா எழுத்துகளை நீக்கினாலும் பொருள் தரும்.
(எ.கா.) எவ்வீடு? வருவானோ ?
(i) அகச்சுட்டு, அகவினா இவற்றில் முறையே சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் சொல்லின் உள்ளேயே நின்று சுட்டுப்பொருளையும் வினாப் பொருளையும் உணர்த்துவதால் இப்பெயர் பெற்றது.
(ii) புறச்சுட்டு, புறவினா இவற்றில் முறையே சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் சொல்லின் வெளியே நின்று சுட்டுப்பொருளையும் வினாப் பொருளையும் உணர்த்துவதால் இப்பெயர் பெற்றது.
மொழியை ஆள்வோம்
பக்கம் 67
சொற்றொடர்ப் பயிற்சி.
அ) அந்த, இந்த என்னும் சுட்டுச் சொற்களை அமைத்துத் தொடர்கள் எழுதுக.
விடை: (i) அந்தக் குழந்தை அழகாக இருந்தது.
(ii) இந்தக் குளத்தில் நீர் வற்றி விட்டது.
ஆ) எங்கே, ஏன், யார் ஆகிய வினாச் சொற்களை அமைத்துத் தொடர்கள் எழுதுக.
விடை:
(i) “எங்கே செல்கிறாய்?” என்று கண்ணன் முகிலனிடம் கேட்டான்.
(ii) “ஏன் அழுகிறாய்?” என்று தாய் குழந்தையைக் கேட்டாள்.
(iii) திருக்குறளை இயற்றியவர் யார்?
சொற்களைச் சேர்த்துச் சொற்றொடரை நீட்டி எழுதுக
அ) நான் பள்ளியில் படிக்கிறேன். (ஆறாம் வகுப்பு, அரசு)
விடை: நான் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படிக்கிறேன்.
ஆ) பொன்னன் முன்னேறினான். (வணிகம் செய்து, பொருளீட்டி, துணி)
விடை: பொன்னன் துணி வணிகம் செய்து பொருளீட்டி முன்னேறினான்.
பின்வரும் கட்டங்களில் உள்ள சொற்களைக் கொண்டு சொற்றொடர்கள் அமைக்க
(i) நான் ஊருக்குச் சென்றேன்.
(ii) நீ ஊருக்குச் சென்றாய்.
(iii) அவன் ஊருக்குச் சென்றேன்.
(iv) அவள் ஊருக்குச் சென்றான்.
(v) அவர் ஊருக்குச் சென்றாள்.
அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தக்க இடத்தில் சேர்த்து எழுதுங்கள்
அ) நீங்கள் வரும்போது எனக்குப் புத்தகம் வாங்கி வாருங்கள். (ஒரு)
விடை: நீங்கள் வரும்போது எனக்கு ஒரு புத்தகம் வாங்கி வாருங்கள்.
ஆ) நாம் உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும். (இயற்கை)
விடை: நாம் இயற்கை உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும்.
இ) நான் சொன்ன வேலையை அக்கறையுடன் செய்திருக்கிறார்கள். (மிகுந்த)
விடை: நான் சொன்ன வேலையை மிகுந்த அக்கறையுடன் செய்திருக்கிறார்கள்.
கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக
மனிதர்களுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கம் ஆகும். ஓர் இடத்தில் உற்பத்தியாகும் பொருள்களைப் பல இடங்களுக்கு அனுப்புவதும் பல இடங்களில் கிடைக்கும் பொருட்களை ஓர் இடத்தில் கிடைக்கச் செய்வதும் வணிகம் ஆகும்.
கிடைக்கும் பொருள்களின் மதிப்பைக் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகமாகும். சான்றாகக் கல் என்பது விற்பனைப் பொருளன்று. ஆனால் அதனைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இதனை மதிப்புக் கூட்டுதல் என்பர்.
1.
கிடைக்கும் பொருள்களின் …………..க் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகம்.
அ) அளவை
ஆ) மதிப்பை
இ) எண்ணிக்கையை
ஈ) எடையை
விடை: ஆ) மதிப்பை
2.
சிலை செதுக்கப்படும்போது உதிரும் கல்தூளை ………………. மாற்றலாம்.
விடை: கோலமாவாக
3.
வணிகத்தின் நோக்கம் என்ன?
விடை: மனிதர்களுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கம் ஆகும்.
4.
மதிப்புக் கூட்டுதல் என்றால் என்ன?
விடை: கல்லைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இது மதிப்புக் கூட்டுதல் எனப்படும்.
5.
இப்பத்திக்கு ஏற்ற தலைப்பை எழுதுக.
விடை: வணிகம்.
மொழியோடு விளையாடு
விடுகதைக்கு விடை காணுங்கள்
(கப்பல், ஏற்றுமதி இறக்குமதி, தராசு, நெல்மணி, குதிரை)
1. தனி ஆளாய் இருந்தால் நடுநிலையாய் இருந்திடுவான்; யாரும் வந்து அமர்ந்தால் ஏற்றம் இறக்கம் காட்டிடுவான். அவன் யார்?
2. தண்ணீ ரில் கிடப்பான்; தள்ளாடித் தள்ளாடி நடப்பான். காலில்லாத அவன் யார்?
3. பேசமுடியாத ஓட்டப்பந்தய வீரனுக்கு வாய்க்கு மட்டும் பூட்டு. அவன் யார்?
4. இயந்திரத்தால் செய்ய முடியாத மணி; ஊசி நூலில் கோக்க முடியாத மணி; பூமியில் விளையும் மணி; பூவுலகத்தார் விரும்பும் மணி. எந்த மணி?
5. ஒருமதி வெளியே போகும்; ஒருமதி உள்ளே வரும்; இருமதியும் சேர்ந்துவிட்டால் பலநிதியும் சேர்ந்து வரும், அவை என்ன?
விடை:
1. தராசு
2. கப்பல்
3. குதிரை
4. நெல்மணி
5. ஏற்றுமதி இறக்குமதி
பின்வரும் நவமணிகளை அகரவரிசைப்படுத்தி எழுதுக
நீலம், கோமேதகம், மாணிக்கம், வைரம், பவளம், வைடூரியம், முத்து, புஷ்பராகம், மரகதம்
1. கோமேதகம்
2. நீலம்
3. பவம்
4. புஷ்பராகம்
5. மரகதம்
6. மாணிக்கம்
7. முத்து
8. வைடூரியம்
9. வைரம்.
செயல் திட்டம்
1.
பண்டைத் தமிழகத்தின் துறைமுகங்கள் பற்றியும் அங்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களைப் பற்றியும் எழுதுக.
விடை: சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களோடு தற்போது எண்ணூரிலும் முக்கிய துறைமுகம் ஏற்பட இருக்கின்றது. தமிழக வரலாற்றில் கடல்வழிப் போக்குவரத்தும், வணிக துறைமுகங்களும் கீர்த்திப் பெற்றதாக இருந்துள்ளது. கொற்கை, பழைய காயல், தொண்டி, காவிரிபூம்பட்டினம், முசிறி, உவரி, மாமல்லபுரம் போன்ற இடங்களில் ஆதியில் துறைமுகங்கள், வணிகத் தலங்களாக அமைந்திருந்தன.
இத்துறைமுகங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பல நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது. கொற்கை முத்தின் சிறப்பை அர்த்தசாஸ்திரம் கூறுகிறது. டாக்டர் கால்டுவெல்லும் பழைய காயல், கொற்கை பெருமைகளைப் பாராட்டியுள்ளார்.
மார்கோ போலோவும் தன்னுடைய குறிப்பில், இந்த நகர அமைப்புகள், மாட மாளிகைகள் தன்னைக் கவர்ந்ததாக கூறியுள்ளார். உலக அழகி கிளியோபாட்ரா கொற்கை முத்தை அணிந்ததாக பிளினி குறிப்பிட்டுள்ளார்.
கொற்கை, புகார் போன்ற துறைமுகங்களில் அரேபிய குதிரைகள் ஓடுகின்ற சத்தம், பொருட்களை வாங்கும் பொழுது ரோமானியர்கள் கொடுக்கும் பொற்காசுகளின் சலசலப்பு, உயர்தமிழ் செம்மொழிக்கு ஒப்ப அரபி, ரோமானியரின் மொழி, பேச்சுக்கள், இரவு நேரங்களில் வெளிநாட்டு லாந்தர்களின் மந்தகாச ஒளி, வெளிநாட்டினர் நடமாட்டத்தில் தூங்கா நகரங்களாக இவை இருந்தன.
இந்து, கிறித்துவம், இஸ்லாம் மத நல்லிணக்கமும் பேணப்பட்டது.
இந்தத் துறைமுகங்கள் பண்டைய காலத்தில் கடற்கொள்ளையர் அணுக முடியாத வகையில் பாதுகாப்பானதாக இருந்துள்ளன. கொற்கை முத்து மற்றும் சேர நாட்டிலிருந்து வந்த மிளகு, ஏலம், கிராம்பு, இலவங்கம், இஞ்சி, மெல்லியத் துணிகள், அரிசி, வைரம், யானைத் தந்தம், பழங்கள் போன்ற பொருட்களை யவனர், உரோமர், எகிப்தியர், கிரேக்கர் ஆகியோர் தங்களுடைய பொற்காசுகளைக் கொடுத்து, தமிழ் மண்ணிலிருந்து கடல் வழியாக எடுத்துச் சென்றதற்குச் சான்றுகள் உள்ளன.
2.
உங்களுக்குத்தெரிந்த மூன்று தொழில்களின் பெயர்களை எழுதி அதில் பயன்படுத்தப்படும் ஐந்தைந்து சொற்களைப் பட்டியலிடுக.
(எ.கா.) உழவு
விடை:
(i) உழவுத்தொழில் – கலப்பை, அறுவை இயந்திரம், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், இயற்கை உரங்கள்.
(ii) நெசவுத்தொழில் – ஊடைநூல், பாவுநூல், கரக்கோல், மிதிக்கட்டை, கத்திக் கயிறு
(iii) தச்சுத்தொழில் – உளி, அரம், மரப்பலகைகள், ஒட்டுப்பலகைகள், சுத்தி.
(iv) உணவுத்தொழில் – பாத்திரங்கள் (தட்டு, கரண்டி, குவளைகள், சிறு பாத்திரங்கள், பெரிய பாத்திரங்கள்) அடுப்பு, சமையலுக்குத் தேவையான பொருட்கள்.
குறுக்கெழுத்துப்புதிர்
இடமிருந்து வலம்
1. நானிலம் படைத்தவன் பாடலை எழுதியவர்.
2. சுட்டிக்காட்டப் பயன்படுவது ……………. எழுத்து
வலமிருந்து இடம்
4. அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
5. ஒரு பொருளைக் கொடுத்து வேறு பொருளைப் பெறும் முறை.
மேலிருந்து கீழ்
1. காடும் காடு சார்ந்த இடமும்
3. தோட்டத்தைச் சுற்றி …………… அமைக்க வேண்டும்.
கீழிருந்து மேல்
4. மீனவருக்கு மேகம் ……………. போன்றது.
5. உடலுக்குப் போர்வையாக அமைவது.
விடைகள் :
இடமிருந்து வலம் : 1. முடியரசன், 2. சுட்டு
மேலிருந்து கீழ் : 1. முல்லை , 3. வேலி
வலமிருந்து இடம் : 4. குதிரை, 5. பண்டமாற்று
கீழிருந்து மேல் :4. குடை, 5. பனி மூட்டம்
No comments:
Post a Comment