6ம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - இயல் 2 -நாகரிகம் ,பண்பாடு-பாடறிந்து ஒழுகுதல் - வினா - விடைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, October 17, 2022

6ம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - இயல் 2 -நாகரிகம் ,பண்பாடு-பாடறிந்து ஒழுகுதல் - வினா - விடைகள்

PREPARED BY THULIRKALVI TEAM

ஆறாம் வகுப்பு 
இரண்டாம் பருவம்
 தமிழ்
ஆசாரக்கோவை
பக்கம் 25

 சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 1. பிறரிடம் நான் ………….. பேசுவேன். 
அ) கடுஞ்சொல் ஆ) இன்சொல் இ) வன்சொல் ஈ) கொடுஞ்செல்
 விடை: ஆ) இன்சொல்

  2. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது ……….. ஆகும்.
 அ) வம்பு ஆ) அமைதி இ) அடக்கம் ஈ) பொறை
 விடை:ஈ) பொறை

3. அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …….. 
அ) அறிவுடைமை ஆ) அறிவுஉடைமை இ) அறியுடைமை ஈ) அறி உடைமை  
விடை: அ) அறிவுடைமை 
 
 4. இவை + எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………. அ) இவை எட்டும் ஆ) இவையெட்டும் இ) இவ்வெட்டும் ஈ) இவ்எட்டும் 
 விடை:ஆ) இவையெட்டும்

 5. நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .. ………. 
அ) நன்றி – யறிதல் ஆ) நன்றி + அறிதல் இ) நன்று + அறிதல் ஈ) நன்று + யறிதல் 
 விடை:ஆ) நன்றி அறிதல் 

 6. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………. 
அ) பொறுமை + உடைமை ஆ) பொறை + யுடைமை இ) பொறு + யுடைமை ஈ) பொறை + உடைமை
 விடை: ஈ) பொறை + உடைமை 

 குறுவினா 

1. எந்த உயிருக்கும் செய்யக்கூடாதது எது?
 விடை: நாம் எந்த உயிருக்கும் துன்பம் செய்யாதிருக்க வேண்டும். 

2. நாம் யாருடன் நட்புக் கொள்ள வேண்டும்? 
 விடை:நாம் நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல் வேண்டும். 

 குறுவினா 

  1. ஆசாரக்கோவை கூறும் எட்டு வித்துகள் யாவை? 
 விடை:(i) பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல். 

(ii) பிறர் செய்யும் தீமையைப் பொறுத்துக் கொள்ளுதல்.

 (iii) இனிய சொற்களைப் பேசுதல். 

(iv) எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல். 

(v) கல்வி அறிவு பெறுதல். 

(vi) பிறருக்கு உதவுவதல்.

 (vii) அறிவுடையவராய் இருத்தல். 

(viii) நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல். 

 சிந்தனை வினா

 1. உங்கள் நண்பரிடம் உங்களுக்குப் பிடித்த பண்புகளைப் பட்டியலிடுக. 
 விடை: (i) பிறருக்கு உதவும் பண்புடையவன். 

(ii) பிறரை மன்னிக்கும் குணம் கொண்டவன்.

 (iii) நட்பின் சிறப்பை உணர்ந்தவன்.

 (iv) சிறியவரையும் மதிக்கும் பெருங்குணம் உடையவன். 

(v) என் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாதவன்.

 2. நல்ல ஒழுக்கங்களை வித்து எனக் கூறுவதின் காரணத்தைச் சிந்தித்து எழுதுக.

 விடை:நல்ல ஒழுக்கங்களை வித்து எனக்கூறுவதின் காரணம் : ஒரு விதையை விதைத்தோமானால் அது வளர்ந்து பல காய்கனிகளைத் தந்து பல தாவரங்களை உருவாக்குகிறது. ஒழுக்கம் என்ற விதை கல்வி மரியாதை பண்பு கருணை உயர்வு முன்னேற்றம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. ஒரு விதை பல மரங்களை உருவாக்குகின்றது. 

அதுபோல மாணவரின் மனத்தில் ஒழுக்கம் என்ற விதை விதைக்கப்பட்டால் அவன் நல்ல மாணவன் எனப் பெயர் எடுப்பான். ஒழுக்கத்துடன் இருக்கும் மாணவனால் நன்றாகக் கல்வி கற்க இயலும். கல்வி நற்பண்புகளைத் தரும். நன்மை தீமைகளைப் பகுத்தறிய இயலும். 

பெற்றோர் பெரியோர் என அனைவருடனும் மரியாதையுடன் பழக இயலும். அவர்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்டு நல்வழியில் நடப்பான். இவற்றால் அவன் உயர்வு பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைவான். எனவே மாணவர்கள் நன்முறையில் இருப்பதற்கு ஒழுக்கமே அடித்தளமாக உள்ளது.

 எனவே நல்லொழுக்கமே வித்து என்பதை உணர்ந்து மாணவர்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்களாகத் திகழ வேண்டும். 

கண்மணியே கண்ணுறங்கு
பக்கம் 28
 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பாட்டிசைத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……….. 
அ) பாட்டி + சைத்து ஆ) பாட்டி + இசைத்து இ) பாட்டு + இசைத்து ஈ) பாட்டு + சைத்து
 விடை:இ) பாட்டு + இசைத்து 

2. கண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………… 
அ) கண் + உறங்கு ஆ) கண்ணு + உறங்கு இ) கண் + றங்கு ஈ) கண்ணு + றங்கு  விடை: அ) கண் + உறங்கு

3. வாழை + இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………… 
அ) வாழையிலை ஆ) வாழை இலை இ) வாழைலை ஈ) வாழிலை
 விடை: அ) வாழையிலை 

 4. கை + அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………… 
அ) கைமர்த்தி ஆ) கைஅமர்த்தி இ) கையமர்த்தி ஈ) கையைமர்த்தி 
 விடை:இ) கையமர்த்தி 

 5. உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல் …………….. 
அ) மறைந்த ஆ) நிறைந்த இ) குறைந்த ஈ) தோன்றிய
 விடை:அ) மறைந்த 

 குறுவினா

1. இப்பாடலில் குறிப்பிடப்படும் மூன்று நாடுகள் யாவை? 
 விடை:
சேரநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு. 

 2. நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையாக நாட்டுப்புறப் பாடல் கூறுவது யாது? 
 விடை: நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையாக நாட்டுப்புறப்பாடல் கூறுவன: வீட்டிற்கு வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று வாழை இலையில் அறுசுவையான உணவளித்து உபசரிப்பர். 

 சிறுவினா

1. தாய் தன் குழந்தையை எவ்வாறெல்லாம் பாராட்டுகிறாள்? 
விடை:

தாய் தன் குழந்தையைப் பாராட்டுதல் : 

(i) தமிழ்ச் சோலையில் பூ எடுத்து, இசையுடன் பாடி உலகம் புகழ வந்தாயோ! 

(ii) தங்கப் பூ பதித்த தந்தத்தால் ஆனத் தொட்டிலில் செல்லமாய் உறங்க வந்த சேரநாட்டின் முத்தேனோ! 

(iii) இல்லம் வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் சோழநாட்டின் முக்கனியோ.

(iv) குளம் வெட்டி, அணைகட்டிக் குடிமக்களின் பசியைப் போக்கும் பாண்டி நாட்டின் முத்தமிழோ! கண்ணே கண்மணியே கண்மூடி உறங்குவாயாக! என்று பாராட்டிக் குழந்தையைத் தாலாட்டுகிறாள்.

 சிந்தனை வினா

1. வாய்மொழி இலக்கிய வகைகளின் பெயர்களைத் தொகுக்க.

  விடை: 

(i) நடவுப் பாட்டு 

(ii) தாலாட்டுப் பாட்டு

 (iii) வள்ளைப் பாட்டு

 (iv) விடுகதைப் பாட்டு

 (v) ஏற்றப் பாட்டு 

(vi) பரிகாசப் பாட்டு 

(vii) கும்மிப் பாட்டு

 (viii) கண்ண ன் பாட்டு

 (ix) ஏசல் பாட்டு

 (x) ஒப்பாரிப் பாட்டு

 2. குழந்தைகளைக் கொஞ்சுவதற்குப் பயன்படுத்தப்படும் சொற்களைத் தொகுக்க.
 விடை:கண்ணே ! முத்தே ! செல்லம்! பட்டு! அம்முக்குட்டி! ராஜா! தங்கம்! தமிழர் பெருவிழா

  தமிழர் பெருவிழா
பக்கம் 32

 சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கதிர் முற்றியதும் …………………. செய்வர் 
அ) அறுவடை ஆ) உரமிடுதல் இ) நடவு ஈ) களையெடுத்தல் 
 விடை: அ) அறுவடை

 2. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் ………………….. கட்டுவர். 
அ) செடி ஆ) கொடி இ) தோரணம் ஈ) அலங்கார வளைவு
 விடை:இ) தோரணம்

 3. பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………….
 அ) பொங்கலன்று ஆ) பொங்கல் அன்று இ) பொங்கலென்று ஈ) பொங்கஅன்று 
 விடை:அ) பொங்கலன்ற 

4. போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது……….. 
அ) போகி + பண்டிகை ஆ) போ + பண்டிகை இ) போகு + பண்டிகை ஈ) போகிப் + பண்டிகை 
 விடை:அ) போகி + பண்டிகை

  5. பழையன கழிதலும் …………… புகுதலும்.
 அ) புதியன ஆ) புதுமை இ) புதிய ஈ) புதுமையான
  விடை:அ) புதியன 

6. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன மரத்தைக் காண ………. தரும். 
அ) அயர்வு ஆ) கனவு இ) துன்பம் ஈ) சோர்வு 
 விடை:இ) துன்பம் 

 சொற்றொடரில் அமைத்து எழுதுக 

 அ) பொங்கல் – பொங்கல் விழா கிராமங்களில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். 

ஆ) செல்வம் – செல்வத்திற்கு அழகு தன்னை நாடி வந்தவருக்கு உதவுதல். 

இ) பண்பாடு – தமிழர்கள் பண்பாட்டை மறவாமல் திருவிழாக்களைக் கொண்டாடுவர். 

 கோடிட்ட இடங்களை நிரப்புக

 1. குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்க ……………. அறிமுகப்படுத்தினார். 

2. காமராசரைக் கல்விக் கண் திறந்தவர்’ என மனதாரப் பாராட்டியவர் ………………… 

 விடை: (விடை: சீருடை) (விடை: தந்தை பெரியார்) 

 குறுவினா 

1. போகிப்பண்டிகை எதற்காகக் கொண்டாடப்படுகிறது? 
 விடை: வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை இந்திரவிழாவாகக் கொண்டாடப்பட்டது. 

2. உழவர்கள் ஏன் மாடுகளுக்கு நன்றி செலுத்துகின்றனர்?
  விடை:உழவர்கள் மாடுகளுக்கு நன்றி செலுத்துதல் : மாடுகள் உழவுக்கும் உழவருக்கும் உற்ற துணையாக விளங்குகின்றன. அதனால் உழவர்கள் மாடுகளுக்கு நன்றி செலுத்துகின்றார்கள். மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகின்றது. 

 சிறுவினா 

 1. காணும் பொங்கலை மக்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர்? 
 விடை: (i) மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுவது காணும் பொங்கல் ஆகும்.

 (ii) இந்நாளில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர். 

(iii) குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பொழுதைக் கழிப்பர்.

 (iv) மேலும் பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் முதலியவற்றை நடத்துவர். விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டுவர். 

 சிந்தனை வினா 

1. பொங்கல் விழாவின் போது உங்கள் ஊரில் என்னென்ன சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வீர்கள்?
  விடை:(i) பெண்களுக்கான கோலப் போட்டிகள் 

(ii) இளைஞர்களுக்கான வழுக்குமரம் ஏறுதல், உறியடித்தல், மாடு பிடித்தல், கபடி விளையாட்டு

 (iii) சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கயிறு தாண்டுதல், இசை நாற்காலி, பம்பரப்போட்டி போன்ற விளையாட்டுகள். 

(iv) கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பட்டிமன்றங்கள், நாடகங்கள், நடன நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும்.

 (v) தப்பாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம். 

2. காணும் பொங்கல் எவ்வாறு மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கிறது? 
 விடை:(i) காணும் பொங்கலன்று மக்கள் தங்களுடைய உற்றார் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர்.

 (ii) தற்கால இயந்திர வாழ்க்கையை மறந்து குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் செல்வர். இவ்வாறு வெளியில் செல்வதால் குழந்தைகள் மகிழ்ச்சியாக உள்ளனர். இவ்வாறு நாம் மற்றவர் வீட்டுக்குச் செல்வதாலும் மற்றவர் நம் வீட்டுக்கு வருவதாலும் நம்மிடையே உள்ள உறவு மேம்படும்.

 (iii) ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் நாம் அறியாத செய்திகளை அறிந்து கொள்ளவும் புதிய அனுபவங்களைப் பெறவும் காணும் பொங்கல் உதவுகிறது. வாகனங்களுக்கு எரிபொருள் எவ்வளவு அவசியமோ நமக்கு இதுபோன்ற நிகழ்வுகள் அவசியம். 

மனம் கவரும் மாமல்லபுரம்
பக்கம் 37

 சிறுவினா

1. மாமல்லபுரம் எப்படி உருவானது? அதற்குக் காரணமான நிகழ்வு யாது?  
விடை: மாமல்லபுரம் உருவான விதம் : மாமல்லன் கடற்கரையில் பாறையின் நிழல் யானை போலத் தெரிந்ததைப் பார்த்தான். உடனிருந்த மகேந்திரவர்மனும் கோவில் போலத் தெரிந்த பாறையின் நிழலைப் பார்த்தான். நிழலை நிஜமாக மாற்ற சிந்தித்தனர். 

அச்சிந்தனையில் தோன்றியதே மாமல்லபுரம். யானை, கோவில் போல் தெரிந்த பாறைகளை மட்டுமல்லாமல் அங்குள்ள ஒவ்வொரு குன்றையும் சிற்பமாக மாற்றினர். நந்தி, சிங்கம் என்று பாறைகளைச் சிற்பமாக மாற்றினர். இதனைத் தொடர்ந்து நான்கு தலைமுறைகளில் உருவாக்கப்பட்டதே மாமல்லபுரம்.

 மாமல்லனால் உருவான நகரம் என்பதால் மாமல்லபுரம் என்ற பெயர் பெற்றது. தற்போது மகாபலிபுரம் என்று அழைக்கிறோம். 

 மாமல்லபுரம் உருவானவதற்குக் காரணமான நிகழ்வு :

 பல்லவ அரசரான நரசிம்மவர்மன்(மாமல்லன்) சிறுவனாக இருந்தபோது, கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த பாறைகளின் நிழல் யானை போலத் தெரிவதைக் கூறினான். அவருடைய தந்தையும் கோவில் போலத் தெரிந்த குன்றின் நிழலைக் காட்டினார். அப்பாறைகளைக் கோவிலாகவும் யானையாகவும் மாற்றிவிடலாம் என்ற சிந்தனை தோன்றியதால் உருவானதே மாமல்லபுரம். 

2. மாமல்லபுரத்தில் “அர்ச்சுனன் தபசு ” பாறையில் உள்ள சிற்பங்களைப் பற்றி எழுதுக. 
 விடை:மாமல்லபுரத்தில் ‘அர்ச்சுனன் தபசு’ பாறையில் உள்ள சிற்பங்கள் : மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற புடைப்புச் சிற்பங்கள். ஒருவர் கண்களை மூடி, இரு கைகளையும் உயர்த்தி வணங்குவது போல ஒரு சிற்பம். அவரது உடல் மெலிந்து, எலும்புகளும் நரம்புகளும் வெளியே தெரிவது போலச் செதுக்கப்பட்டிருக்கும். ‘அர்ச்சுனன் தபசு’ என்று பெயர் பெற்ற அர்ச்சுனன் தவம் செய்யும் காட்சி. இதனைப் ‘பகீரதன் தவம்’ என்றும் கூறுவர்.

 மனம் கவரும் மாமல்லபுரம் இரண்டு பாறைகளுக்கு இடையில் நீர் வடிந்து ஓடுவதற்கு ஏதுவாய் அமைக்கப்பட்டுள்ளது. அவ்விடம் ஆகாய கங்கை பூமிக்கு வருவது போல அழகான காட்சி தரும். யானைச் சிற்பங்கள், சிங்கம், புலி, அன்னப் பறவை, உடும்பு, குரங்குகள் என எல்லாம் உயிருள்ளவை போலச் செதுக்கப்பட்டுள்ளன. மான் தன் காலைத் தூக்கி முகவாயைச் சொறிந்து கொள்வது போன்ற சிற்பம். உண்மையிலேயே மான் ஒன்று இருப்பதைப் போலத் தோன்றும். 

 சிந்தனை வினா 

 1. மாமல்லபுரச் சிற்பங்கள் பாறைகளில் செதுக்கப்பட்டவை. வேறு எந்தெந்தப் பொருள்களால் சிற்பங்களைச் செய்யலாம்? 
 விடை: (i) கற்கள் : கருங்கல், மாக்கல், பளிங்குக்கல், சலவைக்கல்.

 (ii) உலோகம் : பொன், வெள்ளி, வெண்கலம், செம்பு. 

(iii) செங்கல் : மரம், சுதை, தந்தம், மெழுகு. 

 2. கலைகளுள் ஒன்று சிற்பக்கலை. இது போன்ற பிற கலைகளின் பெயர்களை எழுதுக. 
 விடை:கலைகளின் பெயர்கள் : ஓவியக்கலை, நடனக்கலை, நாடகக் கலை, இசைக்கலை, கட்டடக்கலை, . கவிதைக்கலை, ஒப்பனைக்கலை, தையற்கலை, நீச்சல்கலை இவை போன்ற அறுபத்து நான்கு கலைகள் உள்ளன.

 மயங்கொலிகள் 
பக்கம் 40

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 1. சிரம் என்பது ………………. (தலை / தளை )

 2. இலைக்கு வேறு பெயர் ……………… (தளை / தழை) 

3. வண்டி இழுப்பது ……………… (காலை/காளை) 

4. கடலுக்கு வேறு பெயர் ……………….. (பரவை / பறவை) 

5. பறவை வானில் ………….. (பறந்தது/பரந்தது) 

6. கதவை மெல்லத் …………… திறந்தான் / திரந்தான்) 

7. ………………. வீசும். (மனம்/மணம்)

 8. புலியின் ………………. சிவந்து காணப்படும். (கன்/கண்) 

9. குழந்தைகள் … …………………… விளையாடினர். (பந்து/பன்து)

 10. வீட்டு வாசலில் …………… போட்டனர். கோலம்/கோளம்) 

 விடை:1. தலை 2. தழை 3. காளை 4. பரவை 5. பறந்தது 6. திறந்தான் 7. மணம் 8. கண் 9. பந்து 10. கோலம் 

 தொடர்களில் உள்ள மயங்கொலிப் பிழைகளைத் திருத்தி எழுதுக 

1. எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின. 
 விடை: என் விட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின. 

2. தேர்த் திருவிலாவிற்குச் சென்றனர். 
 விடை:தேர்த் திருவிழாவிற்குச் சென்றனர். 

3. வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது. 
 விடை:வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது. 

 பொருள் வேறுபாடறிந்து எழுதுக

 1. வாசலில் போடுவது ………………….. 

2. பந்தின் வடிவம் ……………. 

 விடை: 1. கோலம் – (அழகு புள்ளிகள் வைத்து அவற்றை இணைத்து வரையப்படும் அலங்கார வடிவம்).

 2. கோளம் – (உருண்டை) 

 மொழியை ஆள்வோம்
பக்கம் 41 

 பத்தியைப் படித்து வினாக்கள் அமைக்க. 

 முகிலன் பொங்கல் விழா கொண்டாடத் தாத்தா வீட்டிற்குச் சென்றான். அங்கு செவலை என்ற காளை இருந்தது. அக்காளையை முகிலனுக்கு மிகவும் பிடிக்கும். அதற்குத் தீவனம் வைப்பது அவனது வழக்கம். வீட்டிற்குப் பின்புறம் உள்ள தோட்டத்தில் இருந்து காய்கறிகள் பறித்துக் கொடுத்துத் தாத்தாவுக்கு உதவுவான். அவன், தாத்தா பாட்டியோடு மகிழ்வாகப் பொங்கல் விழாவைக் கொண்டாடுவான். 

 வினாக்கள் : 

1. முகிலன் எதற்காகத் தாத்தா வீட்டிற்குச் சென்றான்?

 2. முகிலனின் தாத்தா வீட்டில் என்ன இருந்தது? 

3. முகிலனின் வழக்கம் என்ன? 

4. முகிலன் தாத்தாவிற்கு எவ்வாறு உதவுவான்? 

5. முகிலன் தன் தாத்தா பாட்டியோடு எவ்விழாவைக் கொண்டாடுவான்?

 சரியான தொடர் எது? கண்டறிந்து எழுதுக 

 1. கதிரவன் மறையும் காலையில் உதித்து மாலையில் 

2. மாலையில் காலையில் உதித்து மறையும் கதிரவன்.

 3. கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும். 

4. மறையும் காலையில் கதிரவன் உதித்து மாலையில். 

 விடை: (விடை: 3. கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்) 

 உரையாடலை நிரப்புக 
பக்கம் 28

 செல்வன் : வாங்க மாமா. நலமாக இருக்கின்றீர்களா? 

மாமா : நான் நலமாக இருக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய்? 

செல்வன் : நன்றாக இருக்கிறேன். உட்காருங்கள் மாமா.

 மாமா : அப்பா, அம்மா எங்கே சென்றுள்ளார்கள்? 

செல்வன் : இருவரும் கடைவீதிக்குச் சென்றுள்ளார்கள். 

மாமா : அப்படியா. நீ எப்படிப் படிக்கிறாய்? 

செல்வன் : நன்றாகப் படிக்கிறேன் மாமா.

 மாமா : நாளை சுதந்திர தினவிழா. உங்கள் பள்ளியில் போட்டிகள் நடத்துகிறார்களா?

செல்வன் : ஆம் மாமா. நான் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்கிறேன்.

 மாமா : வெற்றி பெற வாழ்த்துகள். 

செல்வன் : நன்றி மாமா!

 நட்பு என்னும் தலைப்பில் கவிதை எழுதுக

 இன்பம் கொடுப்பது நட்பு 

மகிழ்ச்சி அளிப்பது நட்பு 

கைக் கொடுப்பது நட்பு

 ஊக்கம் அளிப்பது நட்பு. 

 மொழியோடு விளையாடு 

 1. கீழே உள்ள சொற்களைச் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்குக. 

(எ.கா) கல் + ல் + உண்டு = கல்லுண்டு, கல் + ல் + இல்லை = கல்லில்லை. 
 விடை:

1. பல் + ல் + உண்டு = பல்லுண்டு பல் + ல் + இல்லை = பல்லில்லை .

 2. மின் + ன் + உண்டு = மின்னுண்டு மின் +ன் + இல்லை = மின்னில்லை 

3. மண் + ண் + உண்டு = மண்ணுண்டு மண் + ண் + இல்லை = மண்ணில்லை. 

 கட்டங்களில் மறைந்துள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டுபிடித்து எழுதுக                                                                    பக்கம் 43 
   


 1. கன்னியாகுமரி

 2. தஞ்சாவூர்

 3. மாமல்லபுரம்

 4. ஏற்காடு 

5. கல்லணை 

6. சுருளி 

7. குற்றாலாம் 

8. மதுரை 

9. செஞ்சி 

10. ஊட்டி 

 செயல் திட்டம்

 1. கதிரவன் உதிக்கும் காட்சியை வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்க.

உங்கள் ஊரில் அல்லது மாவட்டத்திலுள்ள பண்பாட்டுச் சின்னங்கள் குறித்த படத்தொகுப்பைச் செய்தியுடன் சேகரிக்க.

விழுப்புரம் மாவட்டத்தில், சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் சாலையில் சுமார் 160 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது , செஞ்சி. இது, மலைகளால் சூழப்பட்ட பகுதியாகும். இதன் கிழக்கே சாரங்கபாணி ஆறு உள்ளது. 


சிங்கபுரம் என்று அழைக்கப்பட்ட செஞ்சி, தொன்மைச் சிறப்புகள் பல நிறைந்தது. பெருங் கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் பல இங்கு உள்ளன. செஞ்சிக்குள் பல சிறப்பு பெற்ற ஊர்கள் காணப்படுகின்றன. 

தொண்டூர், திருநாதர்குன்று, பனமலை போன்றவை குறிப்பிடத்தக்கவை. பொ.ஆ. 13-ம் நூற்றாண்டில், செஞ்சியர்கோன் என்ற அரசன், இவ்வூரில் உள்ள ராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திரகிரி எனும் மூன்று மலைகளையும் சேர்த்து கோட்டை ஒன்றை எழுப்பத் திட்டமிட்டான் செஞ்சிக்கோட்டையும் இக்காலத்தில் அமைக்கப்பட்டதுதான். 


விஜயநகரப் பேரரசு வீழ்ச்சிக்குப்பின், செஞ்சி நாயக்கர்கள் செஞ்சியைத் தலைமையிடமாகக் கொண்டு, பொ.ஆ. 16-ம் நூற்றாண்டில் தங்களது ஆட்சியை ஏற்படுத்தினர். பின்னர், செஞ்சிக்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. முக்கியத்துவம் பெற்ற இக்கோட்டையானது, பொ.ஆ. 1677-ல் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியால் கைப்பற்றப்பட்டது. 

இக்கோட்டை தமிழகத்திலேயே தலைசிறந்த கோட்டை ஆகும். தமிழகத்தில் இன்றைக்கும் முழமையான அமைப்பில் காணப்படக்கூடிய ஒரு கோட்டையாகத் திகழ்கிறது. இக்கோட்டைக்குள் ஏழுநிலை மாடங்கள் நிறைந்த கல்யாண மகால், வெங்கட்ரமணர் கோயில், தர்பார், களஞ்சியங்கள், யானைக்குளம், அரச குடும்பத்தினர் குடியிருப்புகள், சதத்துல்லாகான் மசூதி, தேசிங்குராஜன் சமாதி எனப் பல பகுதிகள் உள்ளன. 


 பீரங்கி மேடையும், அதன்மேல் காணப்படும் பீரங்கியும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கோட்டைவாயில்களும், அதன் படிக்கட்டுகளும், அதன் உள்கட்டமைப்புகளும் * மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 

 அரைவட்டவடிவில், வளைவு வளைவாக கருங்கற்களைக் கொண்டு கோட்டையின் அரண் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிரிகளை மறைந்திருந்து தாக்கவும், உள்ளே இருப்பவர்கள் தக்க பாதுகாப்புடன் இருக்கவும் மிகுந்த கவனத்துடன் இக்கட்டுமானம் அமைத்துள்ளது காண்போர் அனைவராலும் வியக்கவைக்கும் வகையில் உள்ளது.


திருக்குறள் 
 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. விருந்தினரின் முகம் எப்போது வாடும்? 

அ) நம் முகம் மாறினால் ஆ) நம் வீடு மாறினால் இ) நாம் நான்கு வரவேற்றால் ஈ) நம் முகவரி மாறினால் 
விடை: அ) நம் முகம் மாறினால் 

2. நிலையான செல்வம் ………………….. 
அ) தங்கம் ஆ) பணம் இ) ஊக்கம் ஈ) ஏக்கம் 
விடை: இ) ஊக்கம் 

 3. ஆராயும் அறிவு உடையவர்கள் ………………. சொற்களைப் பேசமாட்டார்.
 அ) உயர்வான ஆ) விலையற்ற இ) பயன்தராத ஈ) பயன்உடைய
 விடை:  இ) பயன்தராத

 4. பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….. அ) பொருளுடைமை ஆ) பொருளுடைமை இ) பொருள்+உடைமை ஈ) பொருள்+ளுடைமை
விடை: இ) பொருள்+உடைமை

 5. உள்ளுவது + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………… 
அ) உள்ளவது எல்லாம் ஆ) உள்ளுவதெல்லாம் இ) உள்ளுவத்தெல்லாம் ஈ) உள்ளுவதுதெல்லாம் 
விடை: ஆ) உள்ளுவதெல்லாம் 
 

 6. பயன் + இலா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….. 
அ) பயனிலா ஆ) பயன்னில்லா இ) பயன் இலா ஈ) பயன் இல்லா
 விடை: அ) பயனிலா 

 நயம் அறிக 

1. உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து. இக்குறளில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக. 

விடை: அடி எதுகை : உள்ளுவது – தள்ளினும் 

அடி மோனை : உள்ளுவது – உயர்வுள்ளல்

 இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக 

 1. பணிவுடையன் ஆதல் இன்சொலன் ஒருவற்கு மற்றுப் பிற அணியல்ல.
விடை: பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற. 

2. உள்ளுவது உயர்வுள்ளல் எல்லாம் மற்றது தள்ளாமை தள்ளினும் நீர்த்து. 
விடை: உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து. “ஊக்கமது கைவிடேல்” என்பது ஒளவையாரின் ஆத்திசூடி, இவ்வரியோடு தொடர்புடைய திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.

 1. விருந்து புறத்ததாத் தாணுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் அன்று. 

 2. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். 

 3. சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயன் இலாச் சொல். 

விடை: 2. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். 

 பின்வரும் கதைக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க,

 வீட்டிற்குள் வந்த வேலனை தந்தை அழைத்தார். “உங்கள் பள்ளியில் பேச்சுப்போட்டி நடப்பதாகக் கூறினாயே, பெயர் கொடுத்து விட்டாயா?” என்று கேட்டார். “இல்லையப்பா, அமுதன் என்னைவிட நன்றாகப் பேசுவான். அவனுக்குத்தான் பரிசு கிடைக்கும். எனவே நான் பெயர் கொடுக்கவில்லை” என்றான் வேலன். “போட்டியில் வெற்றியும் தோல்வியும் இயல்புதான். அதற்காகப் போட்டியிடாமல் விலகக்கூடாது. நாம் எந்த அளவு ஊக்கத்துடன் செயல்படுகிறோமோ அந்த அளவிற்கு வெற்றி கிடைக்கும். எனவே நீ போட்டியில் கலந்துகொள்” என்றார் அப்பா. உற்சாகம் அடைந்தான் வேலன். “நாளை பெயர் கொடுத்துவிடுகிறேன்” என்றான். 

 1. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. 

 2. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு. 

 3. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்.

 விடை: 2. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு.

 குறுவினா 

1. எப்படி உண்பது விரும்பத்தக்கது அன்று?
விடை:  உண்ணப்படும் பொருள் அமிழ்தமே ஆனாலும் தன்னை நோக்கி வந்த விருந்தினர் இருக்கும் போது தான் மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று. 

2. எது தீமையானது என்று வள்ளுவர் கூறுகின்றார்? 
விடை:  பிறருடைய பொருளை அவர் அறியா வகையில் களவாடலாம் என உள்ளத்தால் நினைப்பதுகூடத் தீமையானது.

  3. ஆக்கம் யாரிடம் வழிகேட்டுச் செல்லும்?
விடை:  தளராத ஊக்கம் உடையவனிடம் ஆக்கமானது தானே வழி கேட்டுக் கொண்டு செல்லும்.

 4. நாம் எத்தகைய சொற்களைப் பேச வேண்டும் என்று வள்ளுவர் கூறுகின்றார்?
 விடை: நாம் பயனுடைய சொற்களை மட்டும் பேச வேண்டும்.

PREPARED BY THULIRKALVI TEAM

No comments:

Post a Comment