கோவை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் முதல்வர் தகவல் - துளிர்கல்வி

Latest

Monday, May 8, 2023

கோவை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் முதல்வர் தகவல்

கோவை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் முதல்வர் தகவல் 

கோவை அரசு கலைக் கல்லூரியில் 23 இளங்கலை பாடப்பிரிவுகள் உள்ளன. அந்த படிப்புகளில் சேர முதலாம் ஆண்டில் மொத்தம் 1,433 இடங்கள் உள்ளன. அதற்கு 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. 

இதற்கு, www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக இன்று (திங்கட்கிழமை) முதல் 19-ந் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் கல்லூரியில் நேரடியாக விற்பனை செய்யப்படாது. பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். பிளஸ்-2 முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலை யில் விண்ணப்பங்கள் பெற மாணவர்கள், பெற்றோர் நேரடியாக கல்லூரிக்கு வர தேவையில்லை என கல்லூரி முதல்வர் உலகி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment