ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு கல்வித்துறை தகவல் - துளிர்கல்வி

Latest

Monday, May 8, 2023

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு கல்வித்துறை தகவல்

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு கல்வித்துறை தகவல் 2022-23-ம் கல்வியாண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பான அறிவிப்பை கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது. 
அதன்படி, பொது மாறுதல் மற்றும் பதவி உயர் கலந்தாய்வில் பங்கேற்க விரும்புபவர்கள் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி, சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்ததாக சொல்லப்பட்டது. அவர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கி, இம்மாத இறுதி வரை நடத்தப்பட இருந்தது. இந்த நிலையில் அந்த கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக கல்வித் துறை நேற்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- நிர்வாக காரணங்களுக்காக நடைபெற இருந்த பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் (தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி) தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment