அரசர் கல்லூரி, திருவையாறு
(சத்திரம் நிர்வாகம்) தஞ்சாவூர் மாவட்டம்
உதவிப் பேராசிரியர் (7) மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிக்கான
வேலை வாய்ப்பு அறிவிக்கை.
திருவையாறு அரசர் கல்லூரியில் கீழ்வரும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும்
உள்ளவர்கள் கல்வித்தகுதி, வயது, சாதி மற்றும் அனைத்து தகவல்களும் அடங்கிய விண்ணப்பத்தை
ஏழு நகல்களில் தயார் செய்து, புகைப்படத்துடன் ஒட்டி அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன்
விண்ணப்பிக்கலாம்.
1) உதவிப் பேராசிரியர் 5
2) உதவிப் பேராசிரியர் 2
3) உடற்கல்வி இயக்குநர் - 1
நிரந்தரப்
பணி
ஊதிய விகிதம் 57,700 - 1,82,400
அரசாணை (நிலை) எண் 188 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த (P) துறை நாள். 28.12.1976-ல்
குறிப்பிட்டுள்ளவாறு, இனசுழற்சி கண்டிப்பாக பின்பற்றப்படும்.
செய்முறைகள்:
1. விண்ணப்பப் படிவத்தை www.thanjavur.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2. விண்ணப்பத்தில் அனைத்து விபரங்களும் பூர்த்தி செய்யப்பட்டு சுய சான்றொப்பமிடப்பட்ட
இணைப்புகளுடன் ஒரு உறையிலிட்டு பதிவஞ்சலில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
முகவரி – தனி வட்டாட்சியர் / செயலர், சத்திரம் நிர்வாகம், முதல் தளம் அறை எண் 116,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தஞ்சாவூர்.
3. ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
4. முழுமையின்றியும் / பகுதியாகவும் பூர்த்தி செய்யப்பட்டு வரப்பெறும் விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்படும்.
5. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே சான்றுகள் சரிபார்த்தல் மற்றும் தேர்வுக்குழு முன்
நேர்முகதேர்வுக்கு அழைக்கப்படுவர்.
No comments:
Post a Comment