8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு வகுப்பறைகளில் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் செயலி வாயிலாக மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, April 17, 2024

8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு வகுப்பறைகளில் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் செயலி வாயிலாக மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு

8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு வகுப்பறைகளில் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் செயலி வாயிலாக மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு 


மாநில பாடத்திட்டத்தில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான கணிதம், அறிவியல் புத்தகங்களில் உள்ள பாடங்கள் மணற்கேணி செயலியில் காணொலி காட்சி அடிப்படையில் தமிழ், ஆங்கிலம் வழியில் அனிமேஷன் வீடியோக்களாக கொண்டுவரப்பட்டுள்ளன. 

2024-25-ம் கல்வியாண்டில் அனைத்து அரசு நடுநிலைப்பள்ளிகளிலும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம், தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 

அந்த வகையில் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு இந்த தொழில்நுட்பங்களின் வாயிலாக மணற்கேணி செயலியை பயன்படுத்தி வகுப்பறையில் கற்றல்-கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. 

அதற்கு முன்னதாக இந்த செயலியை பயன்படுத்தி வீடியோக்களில் பாடங்கள் மற்றும் பாடக் கருத்துகள் ஆகியவை சரியாக உள்ளனவா? என்பதையும் சரி பார்த்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.