உயர்கல்வி - முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் எப்போது தொடங்கும்? - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, April 17, 2024

உயர்கல்வி - முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் எப்போது தொடங்கும்?

ஒவ்வொரு கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பு உயர்கல்வி நிறுவனங்களின் ஆண்டு நாட்காட்டி வெளியிடப்பட்டு வருகிறது. அதில் வகுப்புகள் எப்போது தொடங்கும்? விடுமுறைகள் எப்போது? கடைசி வேலைநாட்கள் எப்போது? செமஸ்டர் தேர்வு எப்போது நடைபெறும்? என்பது போன்ற அனைத்து தகவல்களும் இடம் பெற்று இருக்கும். 
இவ்வாறு நாட்காட்டி வெளியிடுவதன் மூலம் தரமான கற்பித்தல்-கற்றல், ஆராய்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. அதோடு கல்வி நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறுவதையும் உறுதி செய்ய முடிகிறது. அந்த வகையில் வரும் கல்வியாண்டுக்கான நாட்காட்டி தொடர்பான விவரங்களை பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) வெளியிட்டுள்ளது. அவற்றில் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தொழில்சார் படிப்புகள் அல்லாத பிற படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு ஆகஸ்டு முதல் வாரத்துக்கு பின்னர் வகுப்புகள் தொடங்கலாம். 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை மாதம் 3-வது வாரத்துக்கு பிறகு தொடங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

இதனை கருத்தில் கொண்டு, உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்வி நாட்காட்டியை அறிவிக்க வேண்டும் எனவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையின்படி, அனைத்து நிகழ்வுகளும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.