அரசியலும் அதிகாரிகளும்
அதிக காலத்திற்கு முன் கோசல நாட்டில் சேமதர்சி என்ற மன்னனின் ஆட்சி நடந்து வந்தது. கையிலிருந்து கூண்டு ஒன்றில் ஒரு காக்கையை வைத்துக் கொண்டு எங்கும் திரிந்த காலக விரிட்சிய முனிவர் கோசல நாட்டிற்கு மன்னனைக் காண வேண்டி வந்தார்.
அந்த முனிவர் தமது கூண்டில் இருந்த காகத்திற்கு மூன்று காலமும் உணர்ந்தும் கூறும் சக்தி உண்டு என்று கூறி வந்தார். அந்த காக்கையின் மொழியும் அவருக்கு தெரியும் என்றார்.
அதனாலேயே அவர் அந்தக் காக்கை உடனே எங்கும் திரிந்தார். அந்த காகத்தின் மூலம் நாட்டு நடப்பு, அதிகாரிகளின் போக்கு அனைத்தையும் அவர் அறிந்து கொண்டு வந்தார்.
அவர் அரசனிடம் போனபோது அதிகாரிகள் பலரும் அவரை சுற்றி அமர்ந்திருக்கக் கண்டார். அதில் ஒரு அதிகாரி மிக மிக ஆடம்பரமாக ஆடை ஆபரணங்கள் அணிந்து காணப்பட்டான்.
அவனைப் பார்த்து முனிவர் நீ அரசனுடைய கஜானா பொருளை களவாடி அனுபவிக்கிறாய். உனக்கு அந்த வேலையிலிருந்து இருவர் உதவியாக இருக்கின்றனர். இவ்வாறு எனது காக்கை கூறுகிறது என்றார்.
அரசன் விசாரித்தான் அது உண்மைதான் என்று தெரிந்தது.
இதனால் அச்சமும் ஆத்திரம் அடைந்த அதிகாரிகள் முனிவர் தூங்கும் போது அவருடைய காக்கையை கொன்றுவிட்டனர்.
விடிந்ததும் காக்கை அம்பால் குத்துப்பட்டு இறந்து கிடந்ததை முனிவர் பார்த்தார். மன்னனிடம் போய் புகார் செய்தார்.
மக்களின் உயிரையும் உடைமைகளையும் காப்பது அரசின் கடமை. உனது நலம் கருதியே அந்த அதிகாரிகளின் தவறை அறிந்து உன்னிடம் கூறினேன். ஆனால் எனக்கு அபயம் அளித்து காக்கவேண்டிய நீ நான் கூறுவதை கூறுவதை அமைதியாகக் கேள். அதிகாரிகளைப் பற்றி அவர்களால் உனக்கு வரப் போகும் தீமைகளை அறிந்து கூறினேன். அதனால் உனது அதிகாரிகள் எனது காகத்தை கொன்றுவிட்டனர். பெரிய மரமாயினும் அதை படர்ந்து தழுவி வளரும் கொடி அதையே முழுவதும் மூடி மறைந்து விடுவதை போல, காட்டில் பற்றும் தீயால் கொடி தானும் அழிந்து படர்ந்த மரத்தையும் எரிந்தழியச் செய்வது போல உன்னுடைய அதிகாரிகள் உனக்குக் கீழே இருந்து கொண்டே தாமும் கெட்டு உன்னையும் கெட்டழியச் செய்து விடுவர் என்றார்.
அரசன் அவருக்கு ஆறுதல் கூறினான். முனிவர் அவனுக்கு ஆலோசனை வழங்கினார்.
மன்னார் குற்றம் புரிந்த அதிகாரிகளை தனித் தனியே அழைத்து மெல்ல அவனுக்கிருக்கும் அதிகாரத்தைக் குறைத்து, ஒவ்வொருவனுக்குரிய குற்றத்தை அவனுக்கு கூறி அவனைக் கொலை செய்ய வேண்டும். ஒரே குற்றம் செய்தவர்களை ஒன்றாய் விட்டுவிடக்கூடாது. விட்டால் அவர்கள் ஒன்றாய் சேர்ந்து பயங்கரமான அரசனையும் கொலை செய்துவிடுவர்.
''அதிகாரிகளின் பொருளை பிடுங்கிக்கொண்டு அகந்தையை அழித்து விட வேண்டும். மன்னனின் மனதை அதிகாரிகள் அறிந்து கொண்டு விட கூடாது. வில்வகாயாலேயே வில்வகாயை அடிப்பது போல, ஒரு தீய அதிகாரியை கொண்டே அவனைப் போன்றே இன்னொர் அதிகாரியை தொலைக்க வேண்டும்'' என்று அறிவுரைகளை சொன்னார்.
அரசன் அவரை தன் நாட்டிலேயே இருக்கச் சொன்னான். அவரும் தங்கி அரசனுடைய நலத்தில் அக்கறையுடன் வாழ்ந்தார்.
No comments:
Post a Comment