கடலினிலிருந்து எவ்வாறு விடுபடுவது? - துளிர்கல்வி

Latest

Saturday, August 22, 2020

கடலினிலிருந்து எவ்வாறு விடுபடுவது?

கடலினிலிருந்து எவ்வாறு விடுபடுவது?

கடலினிலிருந்து விடுபட ஒரே வழி எக்காரணத்தைக் கொண்டும் மேலும் கடன் வாங்காமல் இருப்பது தான். அப்படி ஏற்பட்டாலும் அதிலிருந்து எவ்வளவு விரைவில் விடுபட முடியுமோ அவ்வளவு விரைவில் விடுபட முயன்றால்தான் கவுரவம் காக்கப்படும். மனநிம்மதியும் கிட்டும்.  கடன்பெறுவது எளிதாகத் தோன்றும். ஆனால் அதை அடைப்பதற்கு படுகின்ற பாடு பெரும் பாடாக உள்ளது.  ஆகவே வேண்டாம் முடியாது தேவையில்லை எனும் சொற்களை பணிவுடன் சரியான நேரத்தில் உபயோகிக்க ஒருவர் தெரிந்து கொண்டால் அவர் வாழ்க்கை வளமாக இருக்கும். 


நடந்து செல்லக்கூடிய இடங்களுக்கும் நடந்தே போய் வருவது நலம் பயக்கும்.  இயலாத போது பஸ்சில் செல்ல வேண்டும்.  மிகவும் அவசியம் ஏற்பட்டால் டாக்ஸிகளையோ  ஆட்டோக்களையோ  பயன்படுத்தக் கூடாது.  எந்த கடையிலும் கடன் வாங்கக்கூடாது.  தவணை முறையில் வாங்குவது லாபகரமானது அல்ல. வாங்கும் சக்தி இருந்தால்தான் எந்த பொருளையும் வாங்க வேண்டும். 

கடன் படும் போது தாம் எந்த அதால பாதாளத்திறக்கு தள்ளப்படுகிறோம் என்பதை பலரும் உணர்வதில்லை.  ஒருவர் எதற்காக கடன் பட்டார் என்பது பற்றிய வெளியில் உள்ளவர்கள் எவரும் கவலைப்பட மாட்டார்.  கடன் ஒரு பெரிய பாறையை மனிதன் தன் கழுத்தில் கட்டிக் கொள்வதற்கு சமம். நாளடைவில் ஒரு பயங்கர கனவாகவே கடந்து விடுகிறது.  குடும்ப நலனையும் அமைதியையும் குறைத்துவிடுகிறது. 

ஒருவருக்கு எவ்வளவு வருமானம் இருந்தாலும் அது கடலில் கரைத்த பெருங்காயம் போல.  ஆகி எவரும் விரும்புவதில்லை அவன் நண்பர்களும் உறவினர்களும் அவனை துரத்தி விடுவார்கள் ஒருவனுக்கு மதிப்பளிப்பது மகிழ்ச்சி அளிப்பதும் பலன்தான் கடன் வாங்காமல் ஒரு மனிதனால் வாழ முடியுமா முடியும் தன் சக்திக்கேற்ப வாழும் வாழ்க்கைதான் அது

முதலிலேயே முனைப்புடன் இருந்தால் எவரும்  கடன்பட வேண்டிய அவசியம் இருக்காது. முதலில் இருந்தே தம் செலவுகளை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.  அதிகமாக சம்பாதிக்க தொடங்கியவுடன் செலவுகளை பெருக்கிக் கொள்ள கூடாது.  ஒவ்வொருவரும் தம் வரவு செலவுகளை குறித்து வைக்க வேண்டும்.  ஒவ்வொரு சிறு செலவையும் செய்வதற்கு முன் அவற்றை அவசியம் கருதி  செய்ய வேண்டும். இந்த செலவு அவசியம்தானா?  என ஒரு முறை யோசித்து பார்க்க வேண்டும். 

முதலில் வீட்டு வாடகை,  உணவு,  உடை பணியாளர்களுக்கு கூலி பள்ளிக்கூட கட்டணம்,  மருந்து செலவு என எல்லாவற்றுக்கும் தனித் தனியாக ஒதுக்க வேண்டும்.  அவசர தேவைக்கு நண்பர்களிடம் கடன் கேட்கலாம். தவறல்ல. ஆனால் குறித்த தேதியில் அதைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்.  இல்லை என்றால் நட்பு முறிந்து விடும்.  

சில்லறைகளே ரூபாய் நோட்டுக்களாகும்


சில்லறைகளை எச்சரிக்கையோடு  கவனித்துக்கொள் ரூபாய் நோட்டுகள் தங்களைக் கவனித்துக் கொள்ளும் என்று சொல்லுவார்கள்.  ஆம் இன்று சேரும் சில சில்லறைகள்  நாளை ரூபாய் நோட்டுகளாக மாறும்.


சேமிக்க சிறந்த வழிகள் மற்றும் எவ்வாறு சேமிப்பது?  


தனிமனிதன் தன் எதிர்காலத்துக்காக சேமிக்க வேண்டும் என்றால் வங்கிகளில் இருக்கும் பிக்சட் டெபாசிட்,  ரெக்கரிங் டெபாசிட் போன்ற முறைகளை பயன்படுத்துவது நல்லது.  குடும்பத்துக்காகசேமிப்பது என்றால் லைப் இன்சூரன்ஸ் பாலிசிகள் பத்திரங்கள் ஆயுள் காப்பீட்டுக் கழகங்கள் சேமிப்பு பத்திரங்கள் சிறு சேமிப்பு திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் சேமிக்கலாம்.

ஒருவர் தம் சொத்து மதிப்பில் பத்தில் ஒரு பங்குக்கு மேல் கடன் வாங்கக்கூடாது. கடன் என்பது மனதுக்குள் போற்றப்படும் ஒரு மாய விலங்கு. அதுதானே தனது வாழ்வின் நலத்தை அடிமையாக்கும்.  எதிர்கால வாழ்வு அடகு வைக்கும் செயல் என்றும் புண்ணியங்கள் சேரும் அதை வளரவிட்டால் புரையோடி விடும்.  

எண்ணங்களை நெறிப்படுத்தி ஒழுங்குபடுத்தினால் அதுவே குறிக்கோள் ஆகிறது.  வாழ்க்கையை நாம் எப்படி அமைக்க முடியும் அதற்கு வேண்டிய மன உறுதி இருந்தால் திட்டங்கள் இருந்தால் அவற்றை செயல் மனபலம் இருந்தால் வெற்றி பெறலாம்.  நீருக்குள் இருப்பவன் எப்படி வெளியே வர துடிப்பான அத்தகைய வேகத்துடன் கடன் என்னும் சாகரத்தில் இருந்து சிக்கனத்தின் துணை கொண்டு வெளியே வந்தால. மகிழ்ச்சியுடன் வாழலாம்.

ஆசை


நடந்ததை மறந்து புதிய துறையில் முயற்சி செய்ய வேண்டும் என முயற்சி தோற்கலாம் ஆனால் வாழ்வு முடிந்து விடவில்லை எப்படிப்பட்ட நிலைமையையும் சமாளிக்கும் சக்தி நம்மிடம் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் செய்ய விரும்புவதை வாழ்க்கையில் நாம் சாதிக்க வேண்டும் ஆனால் நாம் எல்லோரும் ஆசைப்படுகிறோம்.  அவ்வளவு தான் பலரது ஆசை பாறையின் மீது ஓடும் தண்ணீரை போல் அமைந்து விடுகிறது. தண்ணீர் உள்ளே இறங்குவது இல்லை என்பது இவர்களுக்கு மேலெழுந்தவாரியான நினைப்புதான்

கடன் என்பது திருப்பித் தரப்படும் என நம்பிக்கையோடு கொடுக்கப்படுவது திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்னும் அபிப்பிராயம் தொடங்கப்படுவது.  கடன் கொடுத்தவர் கேட்கவில்லை என்பதை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டு கொடுக்காமல் இருப்பது முறை அன்று.  வாங்கிய கடனை திருப்பித் தரமாட்டேன் என்று சொல்வது நியாயமல்ல.  சிக்கனமாக வாழ்ந்து கடன்களைத் தீர்க்க வேண்டும். 

கடன் பட்டவன் கரையேறுவது அலை ஓய்ந்தபின் குளித்தவன் கதைதான். தலைக்கு மேல் கடன்,  ஊரைச்சுற்றி கடன் பட்டவன் உழைப்பில் கவனம் செலுத்த முடியாது.  தன்மானத்தோடு வாழ முடியாது. உற்றாரும் உதறித்தள்ளுவர். பெற்ற கடனால் அடைந்த மகிழ்ச்சி சில காணப் பொழுதே விஞ்சி நிற்கும்.  

சேக்ஸ்பியர் முதல்கம்பன் வரை கடனைப் பற்றியும் அது தரும் தொல்லை பற்றியும் அறிந்துள்ளார்கள். 

''கடனும் கொடுக்காதே,  கடனும் வாங்காதே.''

''கடன் கொடுத்தால் பணமும் நட்பு பறந்துவிடும்''

கடன் வாங்கினால் கையில் உள்ளதும் போய்விடும்.  அதனால் உன்னை ஏமாற்றாது வாழப் பழகு. அப்போது நீ எவரையும் ஏமாற்ற மாட்டாய்.  இவை சேக்ஸ்பியர் கூறியவை.

No comments:

Post a Comment