இனிய சொல் ஒரு காவல் - துளிர்கல்வி

Latest

Wednesday, August 19, 2020

இனிய சொல் ஒரு காவல்

இனிய சொல் ஒரு காவல் 

பொருளை தானம் செய்வது,  என்றும் ஆபத்திலிருந்து நம்மை பாதுகாப்பது.  அதை இல்லாதவிடத்து அல்லது செல்லாத விடத்தும் இனிய சொற்களைப் பேசுவது நம்மை காப்பாற்றும்.  சாம பேத தான தண்டம் என்பதை சாரும் இனிய சொற்களைக் கேட்க பெரியவர் யார் சொல்லலியே வசியம் பண்ண வேண்டும். 
கொடிய பிராணிகள் கூட இனிய பேச்சால் வசப்பட்டு விடுகின்றனர்.  

பிராமணன் ஒருவன் இருந்தான்.  அவன் நிறையப் படித்தவன் புத்திசாலி.  பேச்சுத் திறமையும் புத்தி சாதுரியம் உடையவன்.  அவன் தனியாக போனபோது காட்டில் ஒரு அரக்கன் அவனைப் பிடித்துக் கொண்டான். ஏ பிராமணா   உன்னைத் தின்றுவிடப் போகிகிறேன் என்று மிரட்டினான்.  ஆனால் அவன் அதற்கு அஞ்சவில்லை.  பதட்டமும் அடையவில்லை.  இனிய சொற்களைப் பேசி நிலைமையை எதிர் கொண்டான்.  

அது இருக்கட்டும் நீ மிகவும் இளைத்தும் வெளுத்தும் இருக்கிறாயே என்று அன்பொழுக கேட்டான்.  

தன்னைப் பற்றிக் கூட கவலைப்படுபவன்.  அரக்கனான தன் மீது கூட அன்பு காட்டுபவன் இருக்கிறானே என்று மகிழ்ச்சி பெற்ற அரசன் சொன்னான். 

''நான்,  நீ சொன்னபடி இளைத்தும், வெளுத்தும்   உள்ளததற்கு என்ன காரணம்?  உன்னால் சொல்ல முடியுமானால் சொல்லு.  உன்னை விட்டு விடுகிறேன்.''

அந்தனன் தனக்கு கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என்று சிந்தித்து நிதானமாக கூறினான்.  உனக்கு வேண்டியவர்களைப் பிரிந்து வேறு நாட்டில் வசிக்கிறாய்.  அதனால் அனுபவிக்க சுகங்கள் இருந்தும் அனுபவித்தும் கூட நீ இளைத்து விட்டாய். 

ஒருவேளை நீ நன்கு ஆதரித்து காப்பாற்றிய போதும் உன் நண்பர்கள் உன்னுடைய தவறு ஏதாவது கண்டு உன்னை கை விட்டிருப்பார்கள். 

பிழைக்க பல வழிகள் இருந்தும் பெரிய லாபத்தை எதிர்பார்த்து ஏங்கி நீ இளைத்திருக்கலாம்.  

உன்னைவிட குணத்தில் தாழ்ந்தவர்கள் செல்வமும் அதிகாரமும் அதிகம் உள்ள காரணத்தால் உன்னைப் பழித்திருக்கலாம்.  அதனால் இளைத்திருப்பாய்.

உன்னைவிட குணமும் புத்தியும் குறைவாக உள்ளவர்களை பிறர் போற்றிப் புகழ்வது கண்டு நீ இளைத்து வெளுத்திருப்பாய்.

 நல்லவன் போல நடித்து தீய பகைவன் யாராவது உன்னை ஏமாற்றி இப்படி உன்னை இளைத்தும் வெளுத்தும் செய்திருக்கலாம். 

நல்ல குணத்துடன் மற்றவரை ஆதரிக்கும் போது வஞ்சகனாக உன்னை அவர்கள் நினைத்திருப்பர்.  

உன் மகன் உனக்கு அடங்காமல் கெட்டவனாக இருக்கலாம். மகளின் கணவன் வீட்டிலே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கலாம்.  உனது மனைவி  உனக்கு அடங்காமல் இருப்பாள்.இவற்றால் நீ இளைத்தும்  வெளுத்தும் போயிருக்கலாம்.  

புத்திசாலியாய் இருந்தும் மூடனைச்  சார்ந்து வாழ வேண்டி வந்திருக்கலாம். பாவிகள் பலப்பட, நல்லவர் கை  சோர்ந்து திண்டாடுவதை கூட நீ பார்த்திருப்பாய்.  இதனாலும் நீ இளைத்தும் வெளுத்தும் போயிருக்கலாம் என்று சாதுரியமாக புகழ்தான். 

அரக்கன் அவனது இனிய பாராட்டால் நல்லது எது கெட்டது எது என்ற விளக்கத்தால் முகஸ்துதியால் மகிழ்ந்து போய் அந்தணனை விட்டு விட்டான். கெளரவம் செய்தும் அனுப்பினான்.

பேசுவதற்கு எத்தனையோ இன்சொற்கள் இருக்க,  வன்சொற்கள் அதிகம் பேசி பகைவர்களை சம்பாதித்துக் கொள்வானேன்?  இனிய சொற்களைப் பேசி மற்றவர்களின் மனதை வசியம் செய்யலாமே.

No comments:

Post a Comment