இன்றைய நவீன தாய் காக்கை தன் குஞ்சு காக்கையிடம் கூறிய கதை இது
மகனே, முன்னொரு காலத்தில் காட்டில் காக்கை ஒன்று வாழ்ந்து வந்தது. ஊருக்குள் சென்ற அதற்கு வடை ஒன்று கிடைத்தது. அந்த வடையை வாயில் கவ்வியது. மகிழ்ச்சியுடன் பறந்து காட்டிற்கு வந்து அங்கிருந்த ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்து வடையை சிறிது சிறிதாக உண்ணவேண்டும் சுவைத்து மகிழ வேண்டும் என்று நினைத்தது. அதனால் வடையை உண்ணாமல் பார்த்துக் கொண்டே இருந்தது . அப்போது அந்த வழியாக நரி ஒன்று வந்தது மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த காக்கை பார்த்து எப்படியாவது காக்கையை ஏமாற்ற வேண்டும். அந்த வடையை தான் தின்ன வேண்டும் என்று நினைத்தது.
குறுக்கிட்ட நவீன காக்கைக் குஞ்சு, அம்மா நரி மரத்தின் கீழே உள்ளது. காக்கையும் மரத்தின் மேலே உள்ளது. எப்படி முயற்சி செய்தாலும் நரி வடையை கைப்பற்ற முடியாதே என்று கேட்டது.
''மகனே அறிவு இருந்தால் எதையும் சாதிக்கலாம் முடியாது என்பதே கிடையாது.'' என்றது நவீன தாய் காகம்.
நரியின் தந்திரம்
அந்த நரி தலையை உயர்த்தி காக்கையைப் பார்த்து, ''காக்கையே நீ அவ்வளவு அழகாக இருக்கிறாய்'' ''உன் இனிமையான குரலைக் கேட்டு எத்தனை நாட்களாகின்றன'' ''உன் பொன்னான வாய் திறந்து ஒரு பாட்டு பாட மாட்டாயா உன் பாட்டைக் கேட்டால் எனக்கு பசி எடுக்காது என்று அளந்தது நரி. அதை உண்மை என்று நம்பிய காக்கை நம்பிப் பாடுவதற்காக வாயை திறந்தது அவ்வளவுதான தன் வாயிலிருந்த வடை கீழே விழுந்தது. அதற்காகவே காத்திருந்தது நரி கீழே விழுந்த வடையை வாயில் கவ்விக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.
தான் ஏமாந்ததை அறிந்த காக்கை வருத்தத்துடன் அங்கிருந்து பறந்து சென்றது. என்றது தாய் காக்கை. --அம்மா நரியின் சூழ்ச்சிக்கு யாராக இருந்தாலும் ஏமாந்து தான் இருப்பார்கள். ஒருவர் நம்மை புகழ்கிறார் என்பதற்காக மகிழ கூடாது. அவர் எதற்காக புகழகிறார் என்பதை ஆராய வேண்டும்.
அம்மா, இந்த நிகழ்ச்சி புகழுக்கு மயங்கக் கூடாது என்பதை உணர்த்துகிறது.
மகனே நீ எதையும் எளிதாக புரிந்து கொள்கிறாய். எப்பொழுதும் சிந்தித்துக் கவனமுடன் நடந்தால் துன்பம் வராது என்றது தாய் காக்கை.
''ஆம் நண்பர்களே தற்புகழ்ச்சியை விரும்பினால் எஞ்சுவது ஏமாற்றம் மட்டுமே.
No comments:
Post a Comment