புள்ளி மான் குட்டி - சிறுவர் சிறுகதை
மான் குட்டி
எது அழகு?
அங்கே வண்ண வண்ண வண்ணத்துப் பூச்சிகள்.
அந்த வண்ணத்துப் பூச்சிகள் பறக்கும்.
அந்த வண்ணத்துப் பூச்சிகள் அழகா? அல்லது அங்கே இருக்கும் வண்ண பூக்கள் அழகா? இவ்வாறு சிந்திக்கத் தூண்டும்.
அந்தப் பூவின் முனையில் நீர் முத்துக்கள். அதில் சூரியனின் சாய்ந்து ஒளி பட்டது. அங்கே வண்ணவண்ண காட்சிகள். அங்கே ஒரு மான்குட்டி அழகிய செம்மை நிறம். செந்நிறம் அதில் வெள்ளை புள்ளிகள். மான்குட்டி துள்ளி குதித்தது. அங்கும் இங்கும் ஓடியது. அங்கு ஒரு வண்ணத்துப் பூச்சி பறந்தது அதன் பின்னால் வந்த மான் குட்டி துள்ளி குதித்து ஓடியது. அந்த பூச்சியை பிடிக்க துள்ளி துள்ளி குதித்தது. தாவி தாவி ஓடியது.
பிறகு அந்த மான் குட்டி அதன் தாய் அருகில் வந்து நின்றது. அதன் அருகில் ஒரு ஆண் மான். அதற்கு அழகிய நீண்ட கொம்புகள். அது குட்டியின் பக்கம் திரும்பி பார்த்துக் கொண்டிருந்தது. அந்த மூன்று மான்கள் தாம் அங்கு வேறு மான்கள் ஏதும் இல்லை. அந்த மூன்று மான்களும் கூட்டத்தை விட்டு வழி தவறி வந்து விட்டன. அவை தங்கள் கூட்டைத் தேடிக் கொண்டே இருக்கின்றன. அந்த தலையை அடிக்கடி நிமிர்த்தி பார்க்கும்.
ஒரு வாய் புல் மேயும். மீண்டும் தலையைத் தூக்கிப் பார்க்கும். கைநீட்டி கேட்கும். ஒரு கிளை அசைந்தால் கூட பயப்படும். ஒரு இலை அசைந்தாலும் பயப்படும். ஒரு பறவையின் கூச்சல் கேட்டாலும் பயம்தான். வேகமாய் காற்று வீசினால் கூட பயம் தான். எந்த ஊர் கேட்டாலும் முன்னும் பின்னும் தலை நிமிர்த்தி உற்றுப்பார்க்கும். காதை நிமிர்த்தி கேட்கும். அந்த மான் குட்டி. அம்மாவை அடிக்கடி உரசிக் கொள்ளும்.
தாய்மான்
தாயின் காலை மெல்ல கவ்வும். தாயின் மடியில் வாயை வைக்கும். தாயுடன் அந்த குட்டி மகிழ்ச்சியாய் இருந்தது. ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. திடீரென்று ஓர் உறுமல் சத்தம் கேட்டது. தாய் மான் வயிற்றை ஒட்டி ஒரு குரல் கொடுத்தது. தாயின் அருகே குட்டி ஒரே தாவில் வந்தது.
எதிர்கால சிந்தனை. பறவைகள் கூச்சலிட்டு எழும்பின. அங்குமிங்கும் அலை மோதின. குருவிகளின் சப்தம் சத்தத்திற்கு எதிர்திசையில் ஆண்மான் வழிகாட்டியது. அதன் பின்னால் பெண்மான் தாயின் பின்னால் குட்டி ஆண்மான் சட்டென நின்றது.
அடர்த்தியான புதர்
குட்டி மான் காலை மடக்கி விழுந்து எழுந்த ஒட்டி நின்றது. அங்கே ஒரு அடர்த்தியான புதர்கள். ஒளிந்து கொண்டன. அவைகளின் பின்னால் சரிவுகளின் சத்தம் மிக அருகில் ஒரு புலி மெல்ல சென்றது. அவை மூன்றும் அசையாமல் நின்றன. வெகுநேரம் நின்றிருந்தன. அந்தப் புலியின் உறுமல் இப்போது வெகு தூரத்தில் கேட்டது. தூரம் சென்று விட்டதே. இப்போது எந்த அசைவும் அங்கு இல்லை எந்த சத்தமும் அருகில் இல்லை பயம் விலகியது. அதன் பிறகு மெல்ல மெல்ல மான்கள் வெளிவந்தன.
அவைகளின் நீண்ட பயணம் தொடர்ந்தது, கொஞ்ச தூரம் தான் சென்றன. அதற்குள் இரவு வந்து விட்டது. அவை சுற்றுமுற்றும் பார்த்தன. காதுகளால் உற்று கேட்டன. அருகில் ஒரு புதர். அதனுள் மான் ஆண்மான் உற்று உற்றுப் பார்த்து கவனமாக பார்த்துக் கொண்டே ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து காது இரண்டும் முன்னோக்கி கவனித்து.
வெளிச்சம்
அதன் பின்னால் பெண் மானும் அதன் பின்னால் குட்டி மானும் மெல்ல மெல்ல புதருக்குள் சென்றன. மறுநாள் சென்றது. வெளிச்சம் வந்தது. பறவைகளின் கனிமொழிகள் பறவையின் இறகுகள் சோம்பல் முறித்த அந்த மான்கள் மூன்றும் புதரிலிருந்து ஒவ்வொன்றாக வெளியே வந்தன. ஒன்றின் பின் ஒன்றாக அடிமேல் அடிவைத்து சென்றன. ஓரிடத்தில் இதமான சூரிய ஒளி மெல்ல தடவிக் கொடுத்தது. அதுதான் படுத்துக்கொண்டது. ஆண்மான் கழுத்தை உயர்த்தி சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தது.
உறுமல் சத்தம்
குட்டி மான் தாயின் மேல் கால் வைத்து துள்ளி ஓடும். ஓடை கீழே விழும் பின் எழுந்து ஓடும். மான் குட்டி கொண்டாட்டம். தாய் அசைந்தால் போதும் குட்டி அருகில் ஒட்டி ஒட்டி கொள்ளும். எந்த மாற்றமும் தெரியவில்லை இவ்வாறு பயணம் பல நாள் தொடர்ந்தது. ஒரு நாள் மாலை பொழுது மங்கி கொண்டு வந்தது. ஓர் உறுமல் சத்தம் அவ்வளவுதான் . பறவைகள் படம் ஆண்கள் பயந்து நடுங்கின உறுமல் சத்தம் . மெல்ல மெல்ல நெருங்கி கொண்டிருந்தது.
உறுமல் அடர்ந்த காட்டில் எதிரொலித்தது. எல்லா பக்கமும் சத்தம் பயத்தால் இருக்கும். எந்த பக்கம் தப்புவது என மான்களுக்க தெரியவில்லை. அனைத்தும் விழித்தன. அந்த மான் குட்டி அச்சத்தால் ஒரே ஒரு பக்கம் ஓடியது. அதைக் காப்பாற்றத் தவறிய தே ஒரே தாவில் ஆண்மான் பின்னால் ஓடியது. காவலாய் புலி மோப்பம் பிடித்துக்கொண்டே பின்தொடர்ந்து வந்தது.
அச்சத்தால் மான்கள் அருகில் தெரிந்த ஒரு புதரில் ஒளிந்து கொண்டன. அச்சத்தால் தாயும் குட்டியும் படுத்துக் கொண்டன. ஏதோ சத்தம் கேட்டு அனைத்தும் எழுந்து நின்று கொண்டன. ஆனால் ஒரே அமைதி ஆண்மான் மெல்ல தலையை நீட்டி பார்த்தது. அவ்வளவுதான் புலி மானை கொன்றது. மானை புதருக்குள் மறைந்தது. மிரண்டுபோன தாயும் குட்டியும் மூலைக்கு ஒன்றாக ஓடின. இருட்டில் வெகு தூரம் ஓட விரட்டியது தாய். அங்கே இருந்த சிறு பள்ளத்தில் படுத்துக் கொண்டன. இரவு காட்டை மூடிக்கொண்டது. பொழுது விடிந்தது. பறவைகள் கத்தியது. மெல்ல புதரை விட்டு வெளியே வந்தன. தூரத்தில் மான்கூட்டம் தெரிந்தது. அப்பப்பா ஒரே ஆனந்தம் தாயும் குட்டியும் துள்ளி குதித்து ஓடின. மகிழ்ச்சியோடு வரவேற்ற தாயும் சேயும் கூட்டத்தில் கலந்தன.
No comments:
Post a Comment