நந்தினி உதவியில் உள்ளம் தெரிந்தது - சிறுவர்களுக்கான சிறுகதை
நந்தினியின் அழகை
நந்தினியின் அழகை
இன்று விளையாட கூட போகவில்லை. நந்தினி கோபத்தில் காலை இட்லியும் சாப்பிடவில்லை. மணி 11 ஆனது. மதியம் கூட சாப்பிடவில்லை. நந்தினி விக்கி விக்கி அழுதுகொண்டிருந்தாள். கண்ணீர் இறங்கி கொண்டு இருந்தது. கன்னம் வீங்கி போயிருந்தது. சாப்பாடு இல்லாமல் அவள் வாடிப்போய் இருந்தாள்.
செல்ல மகள் நந்தினி
நந்தினி அந்த வீட்டு செல்ல மகள். ஒரே மகள். ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். அவளின் அப்பா ஆபீஸ் வேலை பார்க்கிறார். அவர்கள் வசிப்பது மாடி வீடு. அவர்களுக்கு அது ஒரு பெரிய வீடுதான். அதனால் வீட்டை கூட்டவும், பாத்திரங்கள் கழுவும் ஒரு வேலைகாரி வருவாள். அவள் மாசமாய் இருந்தாலள். முக்கிய முனகியவாறு வேலை செய்வாள். பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும். அவளைப்பற்றி நிறைய அவளின் அப்பா அம்மா அக்கம்பக்கம் உள்ளோர் எல்லாம் இரக்கமாய் பேசிக்கொண்டார்கள். இதைக் கேட்டு கேட்டு நந்தினிக்கும் வேலைக்காரி மீது அதிக இரக்கம் ஏற்பட்டிருந்தது.
வேலைக்காரி
அந்த வேலைக்காரியின் கணவன் எங்கு வேலைக்கு சென்று விட்டதாக சொல்வார்கள். அந்த ஊரில் பல வீடுகளில் பாத்திரம் தேய்த்து கொடுப்பாள். துணி துவைத்து கொடுப்பாள். மூன்றாவது வீட்டுக்கு அடுத்து உள்ள குடிசை வீடுதான் அவள் வீடு. அந்த வேலைக்காரி நந்தினியின் பெற்றோர்களிடம் நான்கு நாட்களாக ஒரு புடவை கேட்டு வந்தாள். அவள் பிரசவத்திற்கு மருத்துவமனைக்குப் போக வேண்டுமாம். ஒரு புடவை எடுத்துக் கொண்டு போக வேண்டுமாம். அவளும் நாள்தோறும் நந்தினியின் பெற்றோரை கேட்டு வந்தாள். ஆனால் அவர்கள் கொடுப்பதாக இல்லை. வேலைக்காரி வீடு செல்லும்போது சோகமாய் செல்வாள். அது நந்தினிக்கு பிடிக்கவில்லை அதனால் நந்தினிக்கும் கவலையாயிருந்தது நந்தினிக்கு வேலைக்காரி மீது மேலும் இரக்கம் அதிகமானது.
நந்தினியின் நாய்
அவர்கள் வீட்டில் ஒரு நாய் இருந்தது. அது போன வாரம் குட்டி போட்டு இருந்தது. அந்த நாய் தெரு வாசலில் படி அருகில் ஒரு சாக்கின் மேல் படுத்திருக்கும். அந்த நாய் குட்டி போடும் சமயத்தில் நந்தினியின் அப்பா அம்மா ஒரு புடவையை மடித்து அதன்மீது போட்டார்கள். அந்த நாய்அதன் மீது சுற்றி சுற்றி வந்து படுத்துக்கொள்ளும்.
ஒரு நாள் காலை அந்த நாயின் அருகில் மூன்று குட்டிகள் இருந்தன. அவை ''வாழ், வாழ்'' என்று கத்திக் கொண்டே இருந்தன.
அவற்றைப் பார்க்க பார்க்க நந்தினிக்கு ஆசையாக இருக்கும். நந்தினி நாயை தொட்டு பார்ப்பாள். தடவிப் பார்த்தாள். முத்தமிடுவாள், கொஞ்சுவாள், அவற்றுடன் விளையாடுவாள், அவளுக்கு அவை துணையாய் இருந்தன. அது போல அந்த வேலை காரிக்கும் குழந்தை பிறக்கும் அதனுடன் தானும் விளையாடலாம் என்று நினைத்தாள்.
புடவை
நாய்க்கு மடித்த போட்ட புடவையை துவைத்து மறைத்து வைத்திருந்தார்கள். இன்று காலை நந்தினி அதை எடுத்து வந்தாள். வேலைக்கு கொடுத்துவிட்டாள். வேலைக்காரியும் அதை வாங்கிக் கொண்டாள். அந்த பிஞ்சுக் கைகளில் கன்னத்தில், நெற்றியில், தாடையில் முத்தம் இட்டாள். இருவரின் உள்ளம் மகிழ்ந்தது. அப்போது உள்ளே இருந்து பார்த்த நந்தினியின் அப்பா வேலைக்காரியை முறைத்தார். வேலைக்காரியின் கையில் இருந்த புடவையை வெடுக்கென பிடிங்கினார். உள்ளே வைத்தார். வருவதாக சொல்லி வெளியே சென்றார்.
நந்தினியின் அழுகை
வேலைக்காரி பயந்து போனாள். முகம் சோகமாக ஆனது. வெட்கி தலை குனிந்தாள். குபீரென கண்ணீர் வழிந்தது. நந்தினி வேலைக்காரி முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றாள். வேலைக்காரியும் பார்த்தாள். நந்தினி தன் கையிலிருந்த பறப்பது போல உணர்ந்தாள். அழத்தொடங்கினாள். வேலைகாரி வெளியே சென்று விட்டாள். அது முதல் நந்தினி அழுதுகொண்டே இருந்தாள். காலை மதியம் சாப்பிடவில்லை. வாடி வதங்கி போனாள்.
நந்தினியின் இரக்க குணம்
மீண்டும் வேலைக்காரி உள்ளே வந்தாள். தன் வேலைகளை கவனித்தாள். அப்பா அந்த புடவையை எடுத்து வந்தார். நந்தினியிடம் கொடுத்தார். உன் இஷ்டம் போல செய் என்றார். அப்போது வேலைக்காரி வந்தாள். நந்தினி ஓடிப்போய் அந்த புடவையை வேலைக்காரியிடம் கொடுத்தாள். அவளின் அப்பா அம்மா கை அசைத்தனர். புடவையை வேலைக்காரி வாங்கிக்கொண்டாள். அப்படியே குனிந்து மண்டியிட்டு தலை நந்தினி காலில் பட வணங்கினாள். இப்போது நந்தினியின் முகம் மலர்ந்தது. அதனால் நந்தினி அப்பா அம்மா கண்களில் நீர் வடிந்தது. நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
கொடுத்து உதவுதல் கோடி இன்பம்
No comments:
Post a Comment