நம்முடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது நம்மிடமுள்ள எல்லைமீறிய சினமே - ThulirKalvi

Latest

Search Here!

Thursday, August 27, 2020

நம்முடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது நம்மிடமுள்ள எல்லைமீறிய சினமே

நம்முடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது நம்மிடமுள்ள எல்லைமீறிய சினமே


எல்லை மீறிய சினத்தினால் ஏற்படும் பாதிப்புகள்


வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடுக்கும் மோசமான பழக்க வழக்கங்களில் எல்லை மீறிய சினம் ஒன்று. கோபம் குடியை கெடுக்கும் என்று ஒரு பழமொழி. சினம் சீரழித்து விடும் என்பது ஒரு பொது மொழி.  கோபம் பாவம் சண்டாளம் என்று நம் முன்னோர் சொல்லி இருக்கின்றனர்.

தசினம் ஒரு மோசமான பலவீனம் என்பதையே  இவையெல்லாம் எடுத்துரைத்து விளக்கம் தருகின்றன.

கோபத்தின் விளைவுகளை விளக்கும் புராண இதிகாச கதைகள் பல இருப்பதிலிருந்து கோபத்தின் கொடுமை  நெடுங்காலத்திற்கு முன்னரே உணரப் பட்டிருக்கிறது என்பது விளங்கும்.  

பல்லாண்டு காலம் தவமிருந்து பெற்ற ஆன்மீக வலிமை எல்லாம் கோபத்தை அடக்க மாட்டாத காரணத்தால் ஒரு வினாடியில் விசுவாமித்திரர்  இழந்தார் என்பது புராணக்கதை. 

சினத்தினால் விளையும் தீமை எந்த காலத்தில் மிகவும் கடுமையாகவே இருந்து வந்திருக்கிறது.  இன்னும் அந்த நிலை மாறவில்லை.  எதிர்காலத்திலும் மாறாது.  

வாழ்க்கையில் சீரான முன்னேற்றத்தை பெற்று உயர்ந்த நிலையை அடைவதற்கு பெரும் தடையாக இருப்பது சினம் என்ற பலவீனம் தான்.  உயர்ந்த பதவிகளில் நீடித்து நிலைத்து நிற்க முடியாமல் தலைகுப்புற பலர் வீழ்வதற்கு கோபமே காரணமாக இருந்திருக்கிறது.  

கடுஞ்சினம்


கடுஞ்சினத்தை இயல்பாகக் கொண்டுவிட்டவர்களுக்கு  நண்பர்களே இருக்கமாட்டார்கள்.  நல்லவர்களை எல்லாம் எளிதாக விரோதித்துக் கொள்வார்கள் முற்கோபிகள்.  

கோபம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள முடியாதவர் களின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது.  மனைவியும் மக்களுமே அவர்களை வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

நம்மிடம் பணியாற்றும் பணியாட்களை கூட,  அவர்களிடம் காரணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடிக்கடி கோபித்துக் கொள்ளும் போது மதிக்கமாட்டார்கள்.  அடக்க முடியாத கோபம் நமது அறிவை குழப்பிவிடும்.  ஆய்ந்தோய்ந்து பார்த்து எந்த முடிவினையும் மேற்கொள்ளும் பண்பு முற்கோபிகளுக்கு அமையவே செய்யாது. 

மனவியல் பிணி


ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று கூறுவது அனுபவபூர்வமாக எழுந்த ஒரு பழமொழி ஆகும்.  இங்கே ஆத்திரம் என்று குறிப்பிடுவது கடும் சினத்தை தான். கோபம் என்பது ஒரு மாதிரியான மனவியல் பிணி என்றே கூறவேண்டும். 

முன்கொபிகளாகவும் கடுங்கோபக்காரர்களாகவும் சிலர்  எப்போதும் காட்சி தருவதை காரணம் சிலர் அது பிறப்போடு  ஒட்டிய இயல்பு என்று கருதி விடுகிறார்கள்.

கோப உணர்வு ஒரு இயல்பாகவே சிலரிடம் அமைந்து விடுவது என்பது உண்மைதான்.  கோபமே கொள்ளாத மனிதன் உலகத்தில் இல்லை.  ஆனால் எந்த ஒரு விஷயமும் அளவுக்கு மிஞ்சு போது அதன் செயற்பாடு காரணமாக மனித இயல்பின் நச்சுத்தன்மை வாய்ந்ததாக ஆகிவிடுகிறது.  

கோபம் என்பது பொதுவான மனித இயல்பு என்றாலும்,  கோபம் ஒரு பயங்கரமான உணர்ச்சிகளை விடுவதற்கு மனவியல் குறைபாடுகளே காரணம் என மனவியல் அறிஞர்கள் ஆய்ந்து அறிந்து கூறுகின்றனர்

கோபத்தின் இயல்பு


சின்ன வயதிலிருந்தே பெற்றோராலும் மற்றவர்களாலும் அடக்கி ஒடுக்கப்பட்டு தங்கள் உணர்ச்சி நிலையாகி விடுவதற்கு மனவியல் குறைபாடுகளே காரணம் என மனவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். 

சின்ன வயதிலிருந்தே பெற்றோராலும் மற்றவர்களாலும் அடக்கி ஒடுக்கப்பட்டு தங்கள் உணர்ச்சிகளை சுதந்திரமாக வெளியிட முடியாத நிலையில் வளர்ந்தப் பிறகு  அற்ப விஷயங்களுக்கெல்லாம் கடும் கோபம் கொள்வது இயல்பாக அமைந்து விடும். 

பொறாமை


பொதுவான பொறாமை உணர்வு,  தாங்கள் மட்டும் தாழ்வு நிலையில் இருக்கும்போது அண்டை அயலிலுள்ள சிலர் வாழ்க்கையில் மிகவும் உயர்ந்த நிலையை எட்டி விட்டார்களே என்ற வயிற்றெரிச்சல் பொதுவான பொறாமை மனப்பான்மை போன்றவையும் கோப உணர்வுகளை தூண்டி விட நேரிடலாம்.  

உடலியல் குறைபாடுகளும் சிலருக்கு கோப உணர்வுகளை அளவுக்கு மீறி தூண்டி விடக் கூடும்.  ரத்த அழுத்த நோயால் பீடிக்கப்பட்டவர்கள் எப்போதுமே ஒருவித சிடுசிடுப்பு மனப்பான்மை கொண்டவராக இருப்பார்கள்.  மிகவும் அற்புத் தவறுகளையும்  சகித்துக் கொள்ள இயலாமல் இவர்கள் கடும் சினம் கொள்வது உண்டு.  நரம்பு மண்டலம் பாதிப்பு இருப்பவர்களுக்கும் அடிக்கடி கோபம் வரும்.  

பிரதிபலிப்புகள்


ஒரு மனிதனுக்கு அளவுக்கு அதிகமாக கோப உணர்வு களுக்குக் காரணம் எதுவாக இருந்தாலும் அதனால் விளையக்கூடிய மனவியல் குறைபாடுகள் ஒரே மாதிரியான தீமையை விளைவிப்பதாக உள்ளன.  ஒரு மனிதன் தன் வீட்டில் எப்படி செயல்படுகிறார் அல்லது என்ன சாப்பிடுகிறார் என்பது போன்ற விஷயங்கள் அவன் வீட்டுக்குள் மட்டும் பிரதிபலிப்புகளை மட்டும் ஏற்படுத்தும். ஆனால் ஒரு மனிதனுக்கு ஏற்படுகின்ற கோபம்  அதன் தொடர்பான விளைவுகள் வீட்டுக்கு வெளியே சமுதாய அளவில் ஊடுருவி பிரதிபலிப்புகளை உண்டாக்குகின்றன. 

சமுதாயம்


மனிதன் ஒரு சமூகப் பிராணியே.  சமுதாயத்தின்  ஒத்துழைப்புடன் உதவியுடன் தான் அவன் வாழ முடியும்.  வளரமுடியும்.  கோபம் போன்ற தீவிர உணர்வுகள் மனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையே இருக்கும் தொடர்பை உறவை சீர் குலைத்து விடுகின்றன.  கோபதாபம் உள்ளவர்கள் அனேகமாக சமுதாய புறக்கணிப்புக்கு உள்ளாகி விடுகிறான்.  சமுதாய விரோதி ஆகிவிடுகிறான். 

இதன் காரணமாக அவனுடைய புற வாழ்க்கை சீர்கேடு சரியத் தொடங்கி விடுகிறது.  புற வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை வழிவகுத்து விடுகிறது.  ஒரு மனிதன் சொந்த வாழ்க்கையில் துயரப்படுகிறான்.  மகிழ்ச்சி அடைய முடியவில்லை என்றால் சமுதாய ரீதியாக அவனுடைய தொடர்பு சரியாக இல்லை என்று தான் அர்த்தம்.  

சினம் வேண்டாம்


ஆகவே முக்கியமாக சமுதாய உறவு தொடர்பு சரியாகவும் சீராகவும் அமைவதற்காவது  கோப தாப உணர்வு கள் என்ற பலவீனத்திலிருந்து ஒவ்வொரு மனிதனும் விடுபட வேண்டும். எனவே எல்லை மீறிய சினம் தவிர்ப்போம். அன்பை வெளிப்படுத்துவோம்.