நல்லவர் தீயவர் என ஆராய்ந்து பழக ஒரு சிறுகதை - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, August 26, 2020

நல்லவர் தீயவர் என ஆராய்ந்து பழக ஒரு சிறுகதை

நல்லவர் தீயவர் என ஆராய்ந்து பழக ஒரு சிறுகதை

அதுதான் முதுமலை காடு.  அங்கு யானைகள் கூட்டம் கூட்டமாக இருந்தன.  அவற்றில் ஒரு கூட்டம் அதில் பத்து பதினைந்து யானைகள் இருந்தன.  அதில் ஒரு பெரிய யானை இருந்தது.  அது மூன்று மீட்டர் உயரம் இருக்கும்.  அதற்கு இரண்டு நீண்ட தந்தங்கள்.  அதன் உடம்பு கருமலை போல இருந்தது.  அதன் நெற்றி துதிக்கை எங்கும் வெளியில் காவி புள்ளிகள்.  

அது எப்போதும் தலையை உயர்த்தி செல்லும்.  முன்னும் பின்னும் பார்த்து தலையை ஆட்டி ஆட்டி செல்லும்.  அதுதான் அந்தக் கூட்டத்தின் வழிகாட்டி. அந்தக் கூட்டத்தில் அதை விட வயதான யானை ஒன்றும் இருந்தது.  அதுதான் அந்தக் கூட்டத்திலேயே கடைசியாக வரும். அதற்கு தந்தங்கள் இல்லை. 

மிகவும் சாது.  அதுவே அந்தக் கூட்டத்தின் காட்டு யானை.  அந்தக் கூட்டத்தில் நான்கு குட்டி யானைகள் இருந்தன.  அவை அவற்றின் தாயின் கால்களுக்கு இடையே செல்லும் அதில் ஒன்றின் பெயர் அப்பு அப்பு மிகவும் சுறுசுறுப்பு முந்தி முந்தி ஓடும்.  தாய் யானை இழுத்து இழுத்து அருகில் வைக்கும்.  அப்புக்கு நீண்ட துதிக்கை.  அதனை சுருட்டி கொண்டு தாயிடம் பால் குடிப்பது அதற்கு தொல்லையாக இருக்கும். 

அப்போது ஒரு முறை நீர் குடிக்கும் போது ஆழத்திற்கு சென்று விட்டது. அப்போது அந்தப் பாட்டியானைதான் வந்து காப்பாற்றியது அப்பு இளங்கன்று பயமறியாது.  இருந்தது அதனால தன் தாய்க்குக் கவலை.  அந்தக் கூட்டத்திற்கு கவலை.  

அப்போ இன்னொரு முறை கூட்டத்தை விட்டு சற்று தூரம் சென்று விட்டது.  ஒரு புலி அதனை பின்தொடர்ந்தது.  அப்புவின் அருகில் சென்று விட்டது புலி.  அதனை கவனிக்கவில்லை.  நல்லவேளை அதனை பாட்டியானை பார்த்துவிட்டது.  அது பிளிரிக்கொண்டே புலியை நோக்கி ஓடியது.  சத்தம் கேட்டு பயந்து ஓடிவிட்டது.  அப்புஅப்பொழுதுதான் புலியை பார்த்து நடு நடுங்கிப் போனது.  அப்புவை பாட்டியானை அழைத்து சென்றது. 


அந்த குழு யானைகள் எல்லாம் அப்புவைத் திட்டின.  அதன் பிறகு அப்பு அடங்கியிருந்தது.  

அப்புவின் குறும்பு குறையவில்லை.  ஆப்பு வழியில் புதிய இடம் பார்த்தால் வராது.  தனியாய் வெகுதூரம் சென்று விடும்.  புதிய இடத்தை சுற்றி பார்க்காமல் திரும்பாது. காட்டின்  ஆபத்தை அறியாமல் இருந்தது.  

ஒரு நாள் யானைகள் தண்ணீர் குடிக்க சென்றன.  அங்கு அப்போது தன் துதிக்கையை சேற்றில் மாட்டிக் கொண்டது.  அதன் துதிக்கையில் மூச்சு திணறியது அன்று தான் தெரிந்தது அது பயந்து போயிற்று.  

அப்புவை பக்கம் இருந்த ஒரு யானை வந்து காப்பாற்றியது.  இப்படியே பல நாட்கள் போயின.  அப்பு இப்போது தாயின் வயிற்றுக்கு அடியில் செல்ல முடியவில்லை.  அது வளர்ந்து விட்டது.  அது தாயின் அருகிலேயே சென்றது.  அந்த காட்டில் நிறைய மரங்களும் இருந்தன.  நிறைய செடிகளும் இருந்தன. பல நச்சு கொடிகளும் செடிகளும் இருந்தன.  

தலைமை யானை முதலில் தின்னும்.  பிறகு மற்ற யானைகள் தின்னும்.  அப்படித்தான் எல்லாமே.

அப்பு ஒருநாள் வழியில் பழ பழக்கும் பச்சை தலைகளை பார்த்தது.  மற்ற யானைகள் அதனைத் தாண்டிச் சென்றன.  ஆனால் அந்த தழைகளை கொஞ்சம் உரறுவியது.  வாயில் போட்டுச் தின்றது. அவ்வளவுதான். அப்பு மயங்கி கீழே விழுந்து விட்டது. 

அதை யானையும் கவனிக்கவில்லை.  எல்லாம் முன்னே சென்று விட்டன. அப்புவால் வேகமாக கத்த முடியவில்லை.  எழுந்திருக்க முடியவில்லை. அவரது கண்களில் நீர் வடிந்தது.  அப்புவை சுற்றி புதர்கள்.  ஒரு புதரில் ஏதோ மெல்ல நோக்கி வருவதுபோல் இருந்தது.  அப்புவை நெருங்கியது.  அதற்கு பயம் அதிகம் ஆயிற்று.  அதனை காப்பாற்ற யாருமே இல்லை. அந்த புதரை பார்த்துக்கொண்டு இருந்தது.  அது மிகவும் அருமையாக இருந்தது.  அது அசையாமல் பிணம் போல கிடந்தது.  அது வெகு நேரம் அப்படியே கிடந்தது.

அப்போது புதரும் அசையாமல் இருந்தது. அப்புவைவை காணாமல் தாய் யானை கத்தியது.  உடனே அனைத்து யானைகளும் அந்த வழியே திரும்பி ஓடி வந்தன.  அந்த புதருக்கு அருகில் நெருங்கின.

அந்தப் பெரிய யானை புலி இருந்த பக்கம் வந்தது.  தும்பிக்கையை உயர்த்தி பிளிறியது.  கண்களில் கோபம்.  தந்தங்களைன் நீட்டி முன்னும் பின்னும் போய் வந்தது.  புதரில் இருந்த விலங்கை விரட்டியது.  புதரிலிருந்து ஒரு வரி விலங்கு பாய்ந்து ஓடியது. 

அருகே ஒரு யானைக் குட்டியின் முனகல் கேட்டது. அங்கே அப்பு  கிடந்தது. பெரிய யானை முதலில் சென்றது.  மற்ற யானைகள் வந்து சூழ்ந்தன.  இதுவரை பொறுமையாக இருந்தது.  இப்போது அப்பு அசைய முயன்றது.  

அப்புவை மற்ற யானைகள் எழுப்ப முயன்றன. ஆனால் அதனால் எழ முடியவில்லை.  அப்புவை மற்ற யானைகள் தடவிக் கொடுத்தன.  பாட்டியானை அப்புவை நன்றாகத் தடவிப் பார்த்தது.  அருகில் கிடந்த தழைகளை மோப்பம் பிடித்தது. அந்த பாட்டு யானை வேகமாக சற்று தூரம் சென்றது. 

வேறுவித உதவி வந்தது.  நன்றாக மென்றது. அப்புவின்  வாயில் திணித்தது.  அப்பு மெல்ல தின்றது. அப்புக்கு மெல்ல உணர்வு வந்தது.  அப்புவால் உடனே அழ முடியவில்லை.  யானைக்கூட்டம் சுற்றிலும் காவல் இருந்தது. 

அப்புக்கு நல்ல கவனிப்பு
இரண்டு நாட்கள் சென்றன
மெல்ல எழுந்து நடக்கவும் தொடங்கியது
அப்பு இப்போதெல்லாம் கூட்டத்தை விட்டு பிரிவதில்லை.  தழைகளில் பலவிதம்.  சில நல்ல உணவாகும்.  சில நச்சுத் தன்மை உள்ளவை. 
பழக்கத்தால் அறிந்து பயன்படுத்த வேண்டும்.  மனிதர்களிலும் பலவகை உண்டு பார்த்து பழக வேண்டும்.