பாட்டிக்கு எறும்புகள் செய்த உதவி - சிறுகதை - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, August 26, 2020

பாட்டிக்கு எறும்புகள் செய்த உதவி - சிறுகதை

பாட்டிக்கு எறும்புகள் செய்த உதவி - சிறுகதை


வயதான பாட்டி

அது ஐப்பசி மாதம் மழை பெய்துகொண்டே இருந்தது.  கூரை வீடுகள் எல்லாம் ஒரே ஈரம் சில குடிசை வீடுகள் ஒழுகத் தொடங்கின.  அதில் ஒரு வீடு தரை முழுவதும் அதிகமாய் ஈரம்.  அந்த வீட்டுக்குள் ஒரு மூலையில் ஒரு கந்தல் பாயில் ஒரு வயதான பாட்டி சுருண்டு படுத்து இருந்தார்.  அவருக்கு அதிகமான காய்ச்சல். அம்மா ஐயோ என முனகிக் கொண்டிருந்தார் பாட்டி.  நான்கு நாட்களாக தொடர்ந்து மழை.  பாட்டியை யாரும் எட்டி கூட பார்க்கவில்லை.  நேற்று மூன்றாவது வீட்டில் இருந்து வந்து இரண்டு இட்லி கொடுத்து விட்டு சென்றார்கள். அவ்வளவு தான்.  இதுவரை பாட்டி பல்லில் வெறும் தண்ணீர் கூட படவில்லை. 

எறும்புகள்


அந்த பாட்டியின் வாயை சுற்றி எறும்புகள்.  அந்த குடிசையில் அந்தப் பாட்டின் படுக்கையை சுற்றி மட்டும் ஈரம் குறைவாக இருந்தது.  அதனால் சில பல எறும்புகள் பாட்டி அருகில் சேர்ந்தது.  ஒரு எறும்பு பாட்டியின் முகத்தருகே வந்து விட்டது.  அதன் அருகிலேயே வந்து விட்டது.  பாட்டியின் மூச்சுக் காற்று இதமாக இருந்தது.  மூக்கு ஓரமாக அருவியாக நீர்.  அந்நீர் எறும்புக்கு உவர்ப்பாய் இருந்தது.  பாட்டியின் அழுகுரல். 

எறும்பின் விசாரிப்பு


பாட்டி நீ ஏன் அழுகிறாய்?  உன் உடல்  மிக சூடாக இருக்கிறது என்று எறும்பு கேட்டது.  பாட்டிக்கு   துக்கம் தொண்டையை அடைத்தது.  அழுகை பீறிட்டது. கண்ணீர் அருவியானது.  எறும்பு தன் குறையை கேட்டதும் பாட்டிக்கு ஆறுதல். 

பாட்டி பாட்டி ஏன் அழுகிறாய் என்று மீண்டும் கேட்டது எறும்பு.  ஒரு குடும்பமாக தான் இருந்தேன்.  இப்போது தனியாக இருக்கிறேன்.  ஆறு மாதமாய் கூலி வேலைக்கு கூட போக முடியவில்லை.  இரண்டு நாட்களாக சாப்பாடு இல்லை.  அதற்கு மேல் பேச இயலாமல் பாட்டி அழுதார்.  எறும்பு தன் உணர் கொம்பால் தொட்டு தொட்டு பாட்டியின் உணர்வை அறிந்து கொண்டது.  

''நாங்கள் உங்களுக்கு உணவு தருகிறோம்''  என்று அந்த எறும்பு இறங்கிச் சென்றது. எறும்பா உதவப் போகிறது?  பாட்டி மனதுக்குள் ஒரு ஏக்கம். இருந்தாலும் பாட்டிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.  சற்று ஆறுதலாக இருந்தது 

தானியக்குவியல்


அந்த எறும்பு பாட்டியின் உணர்வை அனைத்து எறும்புகளுக்கு உணர்த்தியது. எழும்புகள் எல்லாம் தம் வளைக்குள் கூடின.  ஒன்றாய் தம் உணர் கொம்புகளால் தொட்டு தொட்டு பேசிக்கொண்டன.  அங்கே போராய் தானியக் குவியல். எறும்புகளின் மழைக்கால சேமிப்பு உணவு.  அதிலிருந்து எறும்புகள் ஆளுக்கு ஒரு தானியமாக எடுத்துக்கொண்டன.  அவை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.  பாட்டியின் அருகில் கொண்டு சேர்த்தன.  அந்த தானியக் குவியல் இப்போது பாட்டியின் அருகில்.  

பொழுது விடிந்தது.  பாட்டியும் மெல்ல கண் விழித்தாள் . எறும்புகள் வரிசையாக வெளியே போய்க் கொண்டிருந்தன.  உதவும் பண்பை உயர்ந்த பண்பு.  எனவே மாணவர்களே பிள்ளைகளே நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் தவிர உபத்திரம் செய்யக்கூடாது