குண்டக்க மண்டக்க பாயும் கிடா - பாமரர் சிறுகதை - தமிழ் சிறுகதை - ThulirKalvi

Latest

Search Here!

Monday, August 31, 2020

குண்டக்க மண்டக்க பாயும் கிடா - பாமரர் சிறுகதை - தமிழ் சிறுகதை

குண்டக்க மண்டக்க பாயும் கிடா - பாமரர் சிறுகதை - தமிழ் சிறுகதை


நாய் ஆடு பூனை கிழவி - நண்பர்கள்


ஒரு நாய்.  ஒரு ஆடு,  ஒரு பூனை இவை மூன்றும் அந்த மூதாட்டியின் செல்லப்பிராணிகள்.  நடமாடி திரிந்து நாலு காசு சம்பாதிக்க முடியாத அளவுக்கு அந்த மூதாட்டி வயோதிகத்தால் தளர்ந்து போனாள். 

தன்னுடைய செல்லப்பிராணிகளை தன்னால் இனியம் காப்பாற்ற முடியாது என்று அந்த மூதாட்டி வருந்தியது கண்டு பூனையும் நாயும் ஆறுதல் கூறியது.  எஜமானுக்கும் சேர்த்து தானே உணவு தேடிக் கொண்டு வருவதாக பூனை உறுதி கூறியது.  


நன்றி மறவாத விலங்குகள்


இத்தனை நாள் என்னை வளர்த்தீங்களே  அந்த நன்றியை நான் மறப்பேனோ என்று நாயும் தன் பங்குக்கு ஆறுதல் கூறியது. 

ஆட்டுக்கிடா ஒன்றுமே பேசவில்லை.  நாயும் பூனையும் திசைக்கு ஒன்றாக எங்கோ ஓடிப் போய்விட அசையவே இல்லை.  கிழவிக்கு கோபம் வந்தது. 

குண்டக்கா மண்டக்கான்னு பாயத்தான் நீ  லாய்க்கு.  பாரு நாய்க்கும் பூனைக்கும் என்கிட்ட எவ்வளவு பிரியம்?  நீ சும்மா சும்மா பாய்வே,  நானே மேய விட்டா ,,, மேய்வ.... வேறு என்ன முடியும் உன்னால?  சுத்தம் உதவாக்கரை என்று ஆட்டுக்கடாவை கிழவி கடிந்து கொண்டாள். 

வாயில் எலும்புத் துண்டு ஒன்றைக் கவ்விக் கொண்டு நாயும் செத்த எலியை கவ்விக்கொண்டு பூனையும் திரும்பி வந்தன.  எலும்பையும் எலியையும் நாயும் பூனையும் போட்டி போட்டுக்கொண்டு கிழவி முன் படைத்தன.  எத்தனை நாட்களாக எங்கே அந்த அசுத்தத்தில் கிடந்த எலும்புத்துண்டும் பார்த்ததுமே கிழவிக்கு வயிறு குமட்டியது. 

எலியைத் தின்னும் பழக்கம் கிழவிக்கு பழக்கம் இல்லை.  பழக்கம் இருந்தாலும் தானே என்ன?  பூனையிடம் பிடிபட்டதானே  செத்ததோ அல்லது  செத்துக் கிடந்தது தான் கவ்வி கொண்டு வந்ததோ,  செத்த எலியை பார்த்ததுமே மூதாட்டிக்கு வாந்தி வரும் போல் இருந்தது.  

பசி வயிற்றை கிள்ளியது.  கோபம் கோபமாய் வந்தது.  கையிலிருந்த கோலைக் கொண்டு பூனையையும் நாயையும்  அடித்து நொறுக்கி விட்டாள்.  

ஆட்டுக்கடா இப்போது பேசியது நான் போய் ஏதாவது கிடைக்குமான்னு பார்த்துட்டு வரட்டுமா?  

போய்த் தொலை.  ஏதாவது கிடைச்சா திரும்பி வா.  நீயும் எனக்கு பிடிக்காது எதையாவது கொண்டு வந்தே,  அப்புறம் உன் தோலுதான் மிஞ்சும் என்று கிழவி ஆட்டுக்கடா வைத்து அனுப்பி வைத்தாள்.  

இந்த கிழவிக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது?  போகிற வழி நெடுக ஆட்டுக்கடா இதே சிந்தனை.  போய்க்கொண்டே இருந்தது.  எங்கெல்லாமோ அலைந்து அதற்கும் பசி வந்துவிட்டது.  கிழவிக்கு பிடித்தது பிடிக்காதது கிடக்கட்டும்.  முதலில் தனக்கு என்ன கிடைக்கும் என்று தலையை உயர்த்தி அங்கும் இங்கும் நோட்டமிட்டது.  

அந்தக் குன்றின் மறுபுறம் காட்டு கீரை வகைகள் எப்போதும் ஏராளமாய் முளைத்து கிடக்கும் என்று ஏதோ ஒரு ஆடு மாடு எப்போதும் சொன்னதாக ஞாபகம்.  

குன்றேறி காட்டுக்குள் புகுந்தது.

சிங்கம்


கொஞ்ச தூரம் போனதுமே அதட்டும் குரல் கேட்டது.  

"கல்லாம் முள்ளாம் காட்டுக்குள்ளே  கொள்ளைக்காரன்னு   போறது யாரு"  என்று அதட்டல் கேட்டு திடுக்கிட்டு திரும்பி பார்த்தது ஆட்டுக்கடா.  

எதிரில் ஒரு சிங்கம்.  ஆட்டுக்கிடாவிற்கு அந்த சிங்கம் தன்னை அழித்துக் கொல்வதற்கு முன்னர் தானாகவே உயிர் போய்விடும் போலிருந்தது.  

பசிக்கு இரையாகி செத்தால் என்ன? 
சிங்கத்திற்கு இரையாக்கி செத்தால் என்ன?  

போகிற உயிர் எப்படி போனால் தான் என்ன?  தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஆட்டுக்கிடா சொன்னது........  மலையேறி அந்தப்பக்கம் கீரை மேயப் போகிறேன். இப்போ குண்டக்க மண்டக்கான்னு பாயப்போறேன்.  

சிங்கத்தை பார்த்ததுமே கதிகலங்கி ஆட்டுக்கடா ஓட்டம் பிடித்து இருக்க வேண்டும்.  ஆனால் அது ஓடாமல் நின்றதுடன் தன் கேள்விக்கும் பதில் சொல்வது கேட்ட சிங்கம்,  அது ஏதோ வித்தியாசமான ஆட்டுக்கடா என்றுதான் எண்ணியது.  அது என்ன குண்டக்க மண்டக்க போறேன்னு சொல்லுதே அது என்ன புது மாதிரி பாய்ச்சல்?

இதுவரை தான் கண்டும் கேட்டும் அறியாத அந்த குண்டக்க மண்டக்க பாய்ச்சலை எதிர்த்து அடக்க முடியாமல் போய்விட்டால் சிங்கத்துக்கு கலக்கம் மேலிட்டது. 

போயும் போயும் ஒரு ஆட்டுக்கடாவிடம் சிங்கராஜா தோற்பதா?  தன் கலக்கத்தை காட்டிக்கொள்ளாமல் சிங்கம் அமுத்தலாக கேட்டது. 

 போகாவிட்டால் திரும்பி வரும்போது எனக்கு என்ன தருவ?  

என்னோடு பின்னங்கால்ல ஒண்ண தொடையோடு பிச்சிக்கோ...  என்றது கிடா. 
சரி போ என்று அதை போகவிட்டு குண்டக்க மண்டக்க என்று வாய்க்குள் முணுமுணத்துக் கொண்டது. 

புலி


கெக்கே பிக்கே என்று வாய்க்கு வந்ததை சொன்னதை கேட்டு அந்த சிங்கம் தனக்கு வழி விட்டது என்று ஏன் என்று புரியாமல் குழப்பத்துடன் மேலே சென்றது ஆடு. 

காட்டில் இன்னும் கொஞ்ச தூரம் போனதும் மீண்டும் ஒரு குரல்.  


"கல்லாம் முள்ளாம் காட்டுக்குள்ளே  கொள்ளைக்காரன்னு   போறது யாரு"  
 
ஆட்டுக்கிடாவிற்கு குலை நடுக்கம்

கெக்கே பிக்கே என்று எதையோ சொல்லி சிங்கத்தை சரிகட்டி விட்டோமே என்கிற தைரியம்தான் கொஞ்சம் தெம்பு  கொடுத்தது. 

சிங்கத்துக்கு சொன்ன பதிலையே புலிக்கும் சொன்னது ஆட்டுக்கடா.

மலைக்கு அந்தப் பக்கம் கீரை மேயப்  போறேன். இப்ப என்ன குண்டக்கா மண்டக்கா ன்னு பாயப்போறேன்

இது என்ன குண்டக்க மண்டக்கா 

வழிவிட்டா திரும்பி வரும்போது எனக்கு என்ன தருவ  என்று கேட்டது புலி.  

என்னுடைய பின்னங்கால்ல  ஒண்ண  எடுத்துக்கோ என்று ஆட்டு கிடா 

ஆட்டுக்கிடாவை போகவிட்டபின், பாய்ச்சலிலே புலி பாய்ச்சல்தான் பிரசித்தம்.  
இதென்ன குண்டக்க மண்டக்க பாய்ச்சல் என்ற யோசனையில் ஆழ்ந்தது புலி.  ஆட்டுக்கிடா குன்றின் அந்த பக்கத்தை அடைந்தது.  

ஆசை தீர கீரை மேய்ந்த பிறகு திரும்பத் தொடங்கியது.  ஒரு குடிசை தென்பட்டது.  அங்கு சென்றது.  வாசலில் போட்டு இருந்த ஒரு உரலில் கிழவி சோளம் குத்திக் கொண்டிருந்தாள்.  அவளை நெருங்கிச் சென்று ஆட்டுக்கடா தாகத்திற்கு தண்ணீர் கேட்டது.  

உலக்கை


அவள் உள்ளே போய் திரும்பி வந்து பார்த்தபோது ஆட்டுக்கடா அங்கே இல்லை உலக்கையும் காணோம்.  உலக்கையை எடுத்துக்கொண்டு ஓடிக்கொண்டே இருந்த ஆட்டுக்கிடாவிற்கு   இப்போது நிஜமாகவே தாகம். 

காசு


ஓரிடத்தில் பெண்ணொருத்தி எதையோ உலரப்போடுவதைப் பார்த்தது. அருகே சென்று பார்த்தது ஆட்டுக்கடா.  அந்தப் பெண் சின்னஞ்சிறு  கோணிச்சாக்குக்குள்ளிருந்த  பாசைப் பிடித்திருந்த காசுகளை எடுத்து தரையில் உலரப் போட்டுக் கொண்டு இருந்ததை பார்த்து தாகத்திற்கு தண்ணீர் கேட்டது.  தண்ணீர் கொண்டு வர உள்ளே போனாள்.  உடனே ஆட்டுக்கிடா அந்த காசுகளின் மீது புழுதியில் கழுதை புரள்வதைபோலப் புரண்டது.  அதன் அடர்ந்த ரோமங்களுடன் ஏராளமான நாணயங்கள் சிக்கிக் கொண்டன.  

கிழவிக்கு என்ன பிடிக்குமோ பிடிக்காதோ நிச்சயமாய் காசு பிடிக்காமல் இராது. காசு பணம் கொண்டு போய் கொட்டினால் கிழவி இஷ்டப்பட்டதை  விலைக்கு வாங்கிக் கொள்ளட்டும். 

முறம்


அந்தப் பெண்  திரும்பி வருவதற்குள் அங்கிருந்த முறத்தையும் எடுத்துக் கொண்டு ஆட்டுக்கிடா பிடித்தது ஓட்டம். ஊரை நோக்கி விரைந்தது ஆட்டுக்கடா. வழியில் புலி குறுக்கிட்டு கேட்டது.  இது என்ன ஒரு கையில் ஆயுதமும் மறுகையில் கேடயமாய் வருகிறது ஆட்டுக்கடா என்று புலிக்கு கிலி. 

மேலும் தைரியமாய் திரும்பியும் வந்திருக்கிறதே  என்பதையும் எண்ணிப் பார்த்தபோது புலிக்கு பயம் அதிகமானது.  ஆனாலும் காட்டிக்கொள்ள வில்லை.  புலி கேட்டது பின்னங்கால்களில் எந்த கால் எனக்கு?  

காலாவது.... 

கையாவது.....

இந்த கருங்காலி உனக்கு தான் இருக்குது.  ஓங்கி அடிச்சா உடம்பு எலும்பு எல்லாம்  நொறுங்கிப் போகும்.  ஆட்டுக்கிடா உலக்கையை உயர்த்திப் பிடித்து தான் தாமதம். 

ஒரே பாய்ச்சல் புலியை காணோம். 

சிரிப்பை அடக்கிக்கொண்டு தன் பயணத்தை தொடர்ந்தது ஆட்டுக்கிடா. சிங்கம் எதிரில் வந்தது. ஆட்டுக்கிடா கையில் உலக்கை.... மறு கையில் முறம்...  கை சங்கத்துக்கு பயம் வந்தது.  

ஆனாலும் ஜம்பத்தை விடாமல் கேட்டது.   பின்னங்கால்ல ஒண்ண எடுத்துக்கலாமா?  முறத்தை அப்படியும் இப்படியும் வீசி காட்டியபடி ஆட்டுக்கடா சொன்னது.  முதலில் இதற்கு பதில் சொல்லு.  இதைக் கொண்டு உன்ன ஓங்கி அடிச்சா  உன் தோலு நார்... நாராக போய்விடும். போறியா? என்ன பொடைக்கட்டுமா? 

முறம் - ஆயுதம்

அடிக்கிற ஆயுதம் தெரியும்
இடிக்கிற ஆயுதம்  தெரியும் 
குத்துகிற ஆயுதம் தெரியும் 
எறிகிற ஆயுதம் தெரியும்
இது என்ன புதிதாக புடைக்கிற ஆயுதம்?  

பார்த்த மாத்திரத்திலேயே சிங்கத்துக்கு பாதி உயிர் போய்விட்டது.  மீதி உயிரை காப்பாற்றிக்கொள்ள மான் பாய்ச்சலில் ஒரே ஓட்டம்.  

நன்றி மறவாத ஆட்டுக்கிடா


வெறுங்கையோடு வரக்கூடாது என்று சொல்லியிருந்தும்  இப்படி வருகிறது ஆட்டுக்கடா என்று கோபம் வந்தது கிழவிக்கு.  முன்னே வந்து நின்று ஆட்டுக்கடா அதன் உடலை உலுக்கியதும் சலசலவென்று நாணயங்கள் உதிர்வதை கண்ட கிழவியின் கோபம் போன இடம் தெரியவில்லை.  பொக்கை வாய் சிரிப்புடன்  அந்த கிழவி காசு உதிர்க்கும் ஆட்டுக்கிடாவைக் கட்டித் தழுவிக்கொண்டாள். தழுவிக்கொண்டாள்