புறாக்களின் தியாகம் - Tamil Motivational Story
கருணையில்லா வேடன்
கருணை என்பதே என்னவென்று தெரியாத ஒரு வேடன் காட்டில் திரிந்து கொண்டிருந்தபோது கொடிய புயல் வீசி பெரிய மழையும் பெய்தது. இடியும் மின்னலும் அதிகமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர்.
மேடும் பள்ளமும் தெரியாது வீட்டில் குளிரில் நடுங்கியபடியே தட்டுத் தடுமாறிக் கொண்டு அந்த கொடிய வேடன் வந்தான்.
மழை
அப்போது விலங்குகளும் மலை இடுக்குகளில் புகுந்து கொண்டு விட்டன. பறவைகளோ மரப் பொந்துகளில் மறைந்து கொண்டிருந்தன. வழியில் மழையாலும் காற்றாலும் அடிக்கப்பட்டு ஒரு பெண்புறா கீழே பரிதாபமாக கிடந்ததை கண்டு கொடிய வேடன் எடுத்து கூட்டில் போட்டுக் கொண்டு பிறருக்கு உதவியாக இருந்த ஒரு பெரிய மரத்திடம் வந்தான். அப்போது மழை நின்று விட்டது.
வானில் விண்மீன்கள் தெரிந்தன. வெகு தொலைவில் தன் கிராமம் இருந்ததாலும் வழிகெட்டு இருளாக இருந்ததாலும் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த வேடன் அந்த மரத்தடியில் இரவை கழித்து செல்ல முடிவுசெய்தான்.
இந்த மரத்தில் உள்ள தெய்வங்களை எல்லாம் நான் சரணடைகிறேன் என்று கை கூப்பி வேண்டி வணங்கி தரைமீது இலைகளைப் பாய்போல செய்து கொண்ட தலையை ஒரு கையில் வைத்துக்கொண்டு உறங்கலானான்.
புறா
அந்த மரத்தில் புறா ஒன்று வெகுகாலமாக குடும்பம் நடத்தி வந்தது. அதன் மனைவியான பெண் புறா இறை தேட கிளம்பிப் போனது. இன்னும் திரும்பி வரவில்லையே என்று மிகவும் சோகமாக புலம்பியது.
இரவு ஆகியும் இவ்வளவு காற்றும் மின்னலும் இடியும் மாறி இடிக்கையிலும் இன்னும் திரும்பி வராமல் இருக்கும் என் மனைவிக்கு என்ன ஆயிற்று ஏன் அவள் இப்படி திரும்பி வரவில்லை?
மனைவியின் மாண்பு
மனைவியே வீட்டில் துணை. மனைவி இல்லை எனில் மாளிகையும் காடாகும். மனைவி இருந்தால் மரத்தடியும் வீடு ஆகும். அறம் பொருள் இன்பத்தை மனைவியே துணை. அதனால் மனைவி இல்லாதவன் பாக்கியம் இல்லாதவன். இன்பத்திலும் துன்பத்திலும் என்னுடன் பங்குபெறும் எனது மனைவி இல்லாமல் எனக்கு நிம்மதி இல்லை என்று அழுது புலம்பியது.
அதை வேடனின் கூண்டில் இருந்த பெண் புறா கேட்டது. ஐயோ அன்பரே உங்களுக்கு அமைதியைத் தர முடியாமல் நான் இந்த வேடனின் கூண்டில் அடைபட்டு உள்ளேன். ஆனால் நமக்கு மேலான நிலை கிடைக்கக்கூடிய ஒரு வழியைச் சொல்கிறேன். நாம் வாழ்ந்த மரத்தடியில் வந்து சரண் புகுந்து உள்ள இந்த வேடன் எத்தகைவனாயினும் நம்மால் விருந்தாளி போல கவனிக்கப்பட வேண்டியவன். இவனுக்கு பசி குளிரைப் போக்கிக் உபசரியுங்கள். நான் இறந்தால் வேறு மனைவியைத் தேடி கொண்டு தங்கள் இல்லறத்தை செய்து வரலாம் என்று கூறியது.
உபசரிப்பு
மனைவியின் சொற்படியே ஆண் புறா அன்புடன் உபசரித்தது. வேடேன உனக்கு என்ன தேவை? உன் வீட்டில் இருப்பது போல் என்னை கூச்சமின்றி கேள். பகைவன் ஆனாலும் வீட்டுக்கு வந்தவரை உபசரிப்பது கடமை. பிறருக்கும் போலே தன்னை அறுக்க வருபவனுக்கு கூட மரம் நிழலைக் கொடுக்கிறது.
வேடன் பசியை ஆற்றிய புறா
வேடன் ''என்னால் குளிரைத் தாங்க முடியவில்லை'' என்றான். ஆண் புறா எங்கோ பறந்து போய் நெருப்பு கொண்டு வந்து பூமியில் சறுகுகளை பரப்பி தீ வளர்த்து உதவியது. வேடன் அதில் குளிர் காய்ந்தான். பிறகு அடுத்த படியாக எனக்கு பசிக்கிறது என்றான்.
''உன் பசியை தணித்தே ஆகவேண்டும். ஆனால் நாங்கள் உணவெதையும் சேர்த்து வைப்பதிலேயே ரிஷிகளைப் போல அன்று தேடி அவ்வப்போது உண்டு தேவைக்கு மட்டும் வாழ்கிறவர்கள். ஆனாலும் விருந்தினனை பசியால் வாட விடுவது சரியில்லை என்று கூறி எரியும் தீயை அது அதிகம் ஆக்கியது. மூன்று முறை வலம் வந்து அதில் தானே விழுந்து வேடனுக்க உணவாகியது.
தியாகமான புறாக்கள்
பெண் புறா தனது கணவனின் தியாகத்தை எண்ணி மகிழ்ந்து. வேடன் புறாவின் விருந்தோம்பலை எண்ணி வியந்து உயிரை விட்டது எண்ணி வருந்தினான்.
புத்தியற்ற நான் பெரும் பாவி. இந்த பாவத்தொழிலான பறவை வேட்டையை விட்டுவிடுவேன். என்று வைத்திருந்த கம்பி வலை கூட்டைவிட்டெறிந்துவிட்டான்.
பெண் புறா விடுதலை அடைந்ததும் தீயில் எரிந்து விட்ட ஆண்புறாவான தன் கணவனை எண்ணி வருந்தித்தானும் நெருப்பில் விழுந்து உயிர் நீத்தது.
வேடனுக்காக தியாகம் புரிந்த ஆண் புறாவும் அதைப் பின்பற்றியே பெண்புறாவும் அவற்றின் பண்பால் சொற்க உலகை அடைந்து சுகப்பட்டன.
தவறை உணர்ந்த வேடன்
தவறுக்கு வருந்தி மனம் திருந்திய வேடனும் தவ வாழ்க்கையை நடத்தி புண்ணியத்தில் கிட்டும் சொர்க்கத்தை அடைந்தான்.
கதையின் நீதி
அடைக்கலம் புகுந்தவனைக் காப்பது அறம்
No comments:
Post a Comment