மனைவிக்கு அடங்காதவன் - நகைச் சுவை பாமரர் சிறுகதை - ThulirKalvi

Latest

Search Here!

Monday, August 31, 2020

மனைவிக்கு அடங்காதவன் - நகைச் சுவை பாமரர் சிறுகதை

மனைவிக்கு அடங்காதவன் - நகைச் சுவை பாமரர் சிறுகதை

அந்த அரசன் மனைவி அழக.  மற்றொரு பெரிய அரசன் மகளும் கூட.  அரசன் வைத்ததே சட்டம்.  நாடு முழுவதும் அமலாகி கொண்டிருந்தது.  ஆனால் அவனோ அவன் மனைவியான ராணி சொன்னதே சட்டமயாய்  அவளுக்கு அடங்கி நடந்து வந்தான்.  

அவள் பேச்சுக்கு மறுபேச்சு கூட அவன் பேசியது இல்லை.  

என்ன இது?

 நாடெல்லாம் எனது ஆணைப்படி நடக்கிறது.  நானோ என் மனைவி சொல்படி நடக்கிறேன்? 

ஏன் அவள் அப்பன் பெரிய அரசன் என்பதாலோ?  இல்லை அவனை எதிர்த்துப் போர் புரிந்து வெற்றி பெற்றதற்கு பரிசாக அல்லவா அவளை மனைவியாக கொண்டு வந்து ராணி ஆகியிருக்கிறேன்.  எப்படி நான் இப்படி பொண்டாட்டி அடிமை ஆனேன்?  என்று அரசன் தனக்கு தானே எண்ணி பார்த்தான்.  

"ஒருவேளை எல்லா ஆண்களுமே இப்படித்தானோ"  ஆண்கள் என்றாலே  பொண்டாட்டிக்கு அடங்கிப் போவதுதானா?  உடனே அமைச்சரை அழைத்து வர ஆள் அனுப்பினார்.  

அமைச்சர் வந்ததும் " நான் மட்டுமே மனைவிக்கு அடங்கி நடக்கும் புருஷனா நாட்டு மக்கள் எல்லாருமே பொண்டாட்டி தாசர்கள் தானா என்கிற தன் சந்தேகத்திற்கு விடை கேட்டறிய துடித்துக்கொண்டிருந்தான் அரசன்.  

அமைச்சர் தாமதமாக வந்தார்

 ஏன் தாமதம்?  அரசன் கேட்டான். 

உடனே வரத்தான் புறப்பட்டேன்.  ஆனால் என் மனைவிதான் சகுனம் சரியில்லை.  கொஞ்சம் நின்று போகலாம் என்று என்னை தடுத்தாள்.  ஒரு வாய் தண்ணீர் கொடுத்தாள் குடித்து விட்டு வந்தேன்.  அதனால் தான் தாமதம் என்றார் அமைச்சர்.  

இந்த அமைச்சனே மனைவி சொல்லி விட்டாள் என்று தாமதமாய் வந்திருக்கிறானே?  இவனிடம் போயி இந்த சந்தேகத்தை கேட்டுப் பயனில்லை என்று முடிவு செய்தான் அரசன்.  

அமைச்சர் கேட்டார் வரை சொன்னீர்களே காரணம்?  

அரசரின் உத்தரவு


நம் நாட்டு மக்களுள் திருமணமான எல்லா ஆடவர்களையும் நமது அரண்மனை வெட்ட வெளியில் வந்து நிற்க ஏற்பாடு செய்யுங்கள் என்றான் அரசன்.  திருமணமான வாலிப வயோதிகர் அனைவரும் அரண்மனையின் வெட்ட வெளியில் வந்து நிற்க வேண்டும் என்ற உத்தரவை நாடு முழுவதும் பறையடித்து அறிவிக்கை ஏற்பாடு செய்தார் அமைச்சர்.  

அரசின் உத்தரவுக்கு கீழ்படிவது குடிமக்கள் கடமை.  ஏன்?  எதற்கு?  என்றெல்லாம் கேட்கக்கூடாது.  காலையிலிருந்தே வாலிபர்களும் வயோதிகர்களும் அரண்மனையின் வெட்ட வெளியில் வந்து கூட தொடங்கிவிட்டனர்.  அனைவரும் வந்து கூடி விட்ட தாக அரசனுக்கு செய்தி எட்டியது.  அரசனும் அரசியும் படுக்கைக்கு வந்து கூட்டத்தை பார்வையிட்டனர்.

எல்லாரும் அரசனையும் அரசியையும் வணங்கினார். 

அரசி தொடங்கட்டுமா?  என்று அரசன் தன் மனைவியின் அனுமதி கேட்டான். 

அரசி ஆகட்டும் என்று தன் வாயால் சொல்லாமல் தலையசைத்து அனுமதி கொடுத்தாள். 

அரசன் உரத்த குரலில் சொன்னான்.  

"பொது மக்களே உங்கள் மனைவியின் சொல்படி நடப்பவர்கள் எத்தனை பேர்"  

"சுதந்திரமாய் செயல்படுபவர்கள் எத்தனை பேர்"  என்று கண்டறியவே உங்களை இங்கு வருமாறு அழைத்தேன். 

மனைவியின் பேச்சைக் கேட்டு நடப்பவர்கள் எல்லாரும் வலது புறமாய் ஒதுங்கி நில்லுங்கள். சுயேச்சையாய் நடப்பவர்கள் பிரிந்து நில்லுங்கள்.  ஆண்கள் அனைவரும் வேகம் வேகமாக பெரிய தொடங்கினார்கள்.  அத்தனை பேரும் வலப்புறமாக ஒதுங்கி நின்றார்கள்.  அதாவது அவர்கள் அத்தனை பேருமே பெண்டாட்டி பேச்சைக் கேட்டு நடக்கிற வகையினர். 

அரசி தனக்குள் சிரித்தபடி பெருமிதத்துடன் அரசனை பார்த்தாள். 

அரசன் அமைச்சர் எங்கே என்று பார்த்தான். 

பொண்டாட்டி தாசர்


அந்த அமைச்சர் கூட பொண்டாட்டி தாசர் கூட்டத்தில் தானே நின்றிருந்தான். இரண்டு பேர் மட்டும் இடப்புறமாக ஒதுங்கி நின்று இருந்தார்கள். 

பெண்டாட்டி பேச்சை கேட்காமல் நடக்கிற புருஷர்களும் உண்டு.  என்று அரசன் அரசி இடம் அந்த இருவரையும் காட்டினான்.  

அரசு அவர்களை பார்த்து கேட்டான்.  நீங்கள் உங்கள் மனைவி பேச்சைக் கேட்டு நடக்காதவர்களா?  

ஆமாம்  மகாராணி....  என்னைப் பொறுத்தவரையில் எனக்கு நானே எஜமான் இப்படி சொல்லிக் கொள்ள என் மனைவியின் அனுமதி பெற்று இருக்கிறேன் என்றான் அவன். 

நீயும் பொண்டாட்டி தாசர் கூட்டத்தில் நில்லு என்று அவன்மீது எரிந்து விழுந்தான் அரசன்.  ஏளனமாய் தன்னை பார்த்து சிரித்தபடி நின்றிருந்த ராணியிடம் மற்றொருவனை காட்டி,  இதோ இவன்  ஒருவன் இருக்கிறானே அவனையும்  கேட்டுவிடுகிறேன் என்றான் அரசன். 

அரசனையும் முந்திக்கொண்டு ராணி கேட்டாள்.  இப்படி பொண்டாட்டி தாசன் அல்ல என்று நீ இங்கே தனியாக நின்றதை  அறிந்தால் உன் மனைவி உன்னை கோபித்துக் கொள்ள மாட்டாளா?  

"மாட்டாள்"  என்றான். 

இதில் உனக்கு மனைவியிடம் பயமே இல்லையா?  என்று கேட்டாள்,  இல்லை இல்லவே இல்லை - அவன் கூறினான்.  

சபாஷ்,  ராணி,  நமது நாட்டில் இப்படி ஒருவனாவது இருப்பது குறித்து நான் பெருமைப்படுகிறேன்.  

முத்து மாலை

மனைவிக்கு அடங்காத மாவீரனே வா உன்னை பாராட்டி பரிசாக வழங்கும் இந்த முத்து மாலையைப் பெற்றுக் கொள் என்று பெருமிதம் பொங்க அழைத்தான். அரசன். 

அவனோ அதைப் பெற்றுக்கொள்ள அரசனுடன் செல்லவில்லை.  தயங்கி நின்றான்.  வா வா நான் தரும் பரிசை பெற்றுக் கொள்ள தயக்கம் ஏன் வா வா மீண்டும் அழைத்தான் அரசன்.  

"மன்னிக்கனும்  மகாராஜா.  என் மனைவியிடம் அனுமதி வாங்காமல் இந்த பரிசை பெற்றுக் கொள்வதற்கு இல்லை"  என்றான்.  

அரசனின் ஏமாற்றம்


ஏமாற்றத்தால் அரசனுக்கு காலடியிலிருந்து பூமியே நழுவுவது போல இருந்தது. போதாக்குறைக்கு அரசி விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.  அவளை அரசனால்  அடக்க முடியவில்லை.  மீறி வரும் ஆத்திரத்தை நிறுத்த முடியவில்லை.  பொருமினான்.  

அப்படியானால் நீயும் அவர்களோடு சேர்ந்து இடப்புறமாக நிற்காமல் தனித்து நின்றது ஏன்?  என்று அரசன் சீற்றத்துடன் வினவினான்.  

நிதானமாகவும்,  அழுத்திருந்தமாகவும் அவன் சொன்னான்.

 மணமான ஆம்பளைங்க எல்லாம் இங்கே வந்து கூடனும்னு  உங்க உத்தரவு. அதை மீற முடியாதேன்னு தான் என் பெண்ஜாதி இங்கே என்னை அனுப்பி வைச்சா.  ஆனா,  மணம் ஆன மத்த   ஆம்பளைங்களோடு சேரக்கூடாதுன்னு என் மனைவி உத்தரவு. 

அரசன் மெளனியானான்.