Tamil Nadu Press Release on 28.11.2020 | மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்று (28.11.2020) ஆய்வு கூட்டத்தில் ஆற்றிய உரை - ThulirKalvi

Latest

Search Here!

Saturday, November 28, 2020

Tamil Nadu Press Release on 28.11.2020 | மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்று (28.11.2020) ஆய்வு கூட்டத்தில் ஆற்றிய உரை

Tamil Nadu Press Release on 28.11.2020  | மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்று (28.11.2020) ஆய்வு கூட்டத்தில் ஆற்றிய உரை


இன்று (28 11 2020)  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்கள்,  தலைமை செயலகத்தில் தமிழ்நாட்டில் கொரோனோ வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் களுடன் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் ஆற்றிய உரை: 


அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம்.  அண்மையில் நிவர் புயல் ஏற்பட்டபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள்,  மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்,  தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனர் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு புயல் ஏற்படும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. 

மேலும் தலைமை செயலாளர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் களுடன் தொடர்பு கொண்டு அரசு அறிவித்த வழிமுறைகளை,  அறிவுரைகளை தவறாமல் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவித்ததன் விளைவாக நிவர் புயலால் தமிழகத்தில் பெரும் பொருட் சேதமும் உயிர்ச் சேதமும் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டது. 

சிறப்பான முறையில் நடவடிக்கைகள் எடுக்க உதவியாக இருந்த மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகின்றேன்.  சரியான முறையில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த காரணத்தினால் தான் இன்றைக்கு தமிழகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டனர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை எல்லாம் அரசால் ஏற்படுத்தப்பட்ட முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து அதன் விளைவாக அங்கு வசிக்கின்ற மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படாமல் அரசு பார்த்துக்கொண்டது.  அதுபோல பாதிப்புக்குள்ளான பகுதிகளை நானும் நேரடியாக சென்று பார்த்தேன். மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களும்,  மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் அவர்களும் அந்த மாவட்டத்தில் இருக்கின்ற மாவட்ட அமைச்சர்களும் நேரிடையாக சென்று மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். 

அதோடு மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அவர்கள் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையில் தங்கி அவ்வப்போது உள்ள நிலவரத்தை எடுத்துச் சொல்லி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கிய காரணத்தால் இன்றைக்கு தமிழகத்தில் உயிர் சேதமும் பொருட்சேதமும் அதிக அளவில் ஏற்படாமல் பாதுகாத்துள்ளோம்.  இதற்கு உதவிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேவேளையில்,  தமிழகத்தில் புயல் தாக்கியதை அறிந்தவுடன் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்களும் தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதாகவும் அதற்கு தேவையான குழுக்களையும் அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார். அனுப்பியும் வைத்தார்கள். 

நேற்றைய தினம் இரவு சுமார் 9 மணியளவில் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து என்னிடம் கேட்டு அறிந்தார். அதோடு மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும் என்றும் தெரிவித்தார். ஆகவே நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களும் உள்துறை அமைச்சர் அவர்களும் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று அறிவித்து நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 

அதோடு இந்த புயல் ஆந்திராவை நோக்கி செல்கின்றபோது வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகமான மழைபொழிவு ஏற்பட்டது. அதோடு ஆந்திராவில் கனமழை பொழிந்ததன் விளைவாக,  அங்கிருந்து பெண்ணையாறு, பாலாறு கவுண்டன்ய மகாநதி ஆகிய ஆறுகள் வழியாக அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.  அதையும் அந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் சரியான முறையில் கையாண்டு,  மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டதற்கும் அரசின் சார்பாக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு முதல்வரின் அவர்களின் உரையைத் தொடர்ந்துப் படிக்க இவ்விடம் கிளிக் செய்யவும் - DOWNLOAD HERE