Tamil Nadu Press Release on 30.11.2020 | தமிழக அரசின் இன்றைய (30.11.2020) செய்திக்குறிப்பு | தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் டிச. 31 வரை நீட்டிப்பு - ThulirKalvi

Latest

Search Here!

Monday, November 30, 2020

Tamil Nadu Press Release on 30.11.2020 | தமிழக அரசின் இன்றைய (30.11.2020) செய்திக்குறிப்பு | தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் டிச. 31 வரை நீட்டிப்பு

Tamil Nadu Press Release on 30.11.2020 | தமிழக அரசின் இன்றைய (30.11.2020) செய்திக்குறிப்பு | தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் டிச. 31 வரை நீட்டிப்பு. 

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.,


கொரோனோ வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 25 3 2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலிலிருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு இந்த நோய் தொற்றிலிருந்து மக்களைக் காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.  

அதன் விளைவாக நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.  முக்கியமாக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.  தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும்,  பொது மக்களின் ஒத்துழைப்பனாலும் தான் நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.  

தமிழ்நாடு அரசின் சிறப்பு நடவடிக்கைகளினால் நோய்தொற்று விகிதம் 6.55 சதவீதத்திற்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 1600 நபர்களுக்கு கீழே உள்ளது. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரத்திலிருந்து தற்போது 11,000 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்து உள்ளது

தமிழ்நாட்டில் 30 11 2020 வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.  பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையிலும் 28 11 2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில்,  மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும்,  மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுனர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும்,  மூத்த அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்தும்,  தற்போதுள்ள நோய் பரவல் நிலையை கருத்தில் கொண்டும்,  கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ்,  30 11 2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போது உள்ள போது ஊரடங்கு உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்கண்ட தளங்களுடன் 31. 12. 2020 நள்ளிரவு 12 மணிவரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.  பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும் நோய்த் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும் தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment Zones)  மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன்  கீழ் கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

1. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு படிப்புகள் 7 .12 .2010 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. 

2. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் 7 .12 .2010 முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும் 2020 - 2021 கல்வியாண்டில் சேரும்  புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் 1. 2. 2021 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.  மேலும் அவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது


3. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நீச்சல் குளங்கள்,  விளையாட்டுபயிற்சிக்காக (Sports Training) மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

4. வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 14. 12. 2020 முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும். 

5. நிலையான வழிகாட்டு நெறிகளை பின்பற்றி சுற்றுலாத்தலங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது.

6. நிலையான வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றிப் பொருட்காட்சி அரங்கங்கள், வர்த்தர்களுக்கு இடையேயான செயல்பாடுகள் (Business to Business purposes) மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

7.  நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சம் 50 சதவீதம இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய அரசியல் பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 1 .12 .2020 முதல் 31 .12 .2020 நடத்த அனுமதிக்கப் படுகிறது.  இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும்,  சென்னை மாநகராட்சியில் காவல்துறை ஆணையர் அவர்களிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம். வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப திறந்தவெளியில் கூட்டங்கள் நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும். 

8. வெளிமாநிலங்களிலிருந்து (புதுச்சேரி,  கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களிலிருந்து) தமிழ்நாட்டுக்கு வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ -  பதிவு (E Registration) முறை தொடர்ந்து அமலில் இருக்கும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.

➤மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர,  சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப் பட்டுள்ளதால் இதற்கான தடை தொடரும். 

➤தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zones) தற்போதுள்ள நடைமுறையின்படி எந்தவிதமான தளர்வும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

➤ தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும்,  அதனை முழுமையாக தடுக்கவும் நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். குறிப்பாக நோய்த்தொற்று குறைந்துள்ள நிலையில் மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து,  விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.  பல்வேறு தளர்வுகளுக்கு தனித்தனி நிலையான  வழிகாட்டு நெறிமுறைகள் அவ்வப்போது அரசாணைகளாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாது கடைப் பிடிப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். 

➤பொதுமக்கள் வெளியே செல்லும்போதும்,  பொது இடங்களிலும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.  பொதுமக்கள் வீட்டிலும்,  பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்தும்,  அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்தும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்தான் இந்த நோய்த் தொற்று பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும். 

எனவே,  பொதுமக்களின் நலன் கருதி,  உங்கள் அரசு எடுத்துவரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Click Here to Download for Official Copy (PDF)